பாத்தவங்க எல்லாரும் வாயடைச்சு நின்னாங்களே அந்த காருதான் இது! சீக்கிரமே இதன் டெலிவரி பணிகளை தொடங்க போறாங்க!

தன்னை பார்த்த ஒவ்வொருவரையும் வியந்து பார்க்கச் செய்த வைத்த கார் மாடல்களாக மஹிந்திரா (Mahindra)-வின் லேட்டஸ்ட் தயாரிப்புகளான எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) உள்ளது. இந்தியாவின் இப்போதைய பெரும் தலைவர்களும் இந்த கார்களைப் பார்த்து வாயடைத்து போய்விட்டார்கள் என்று சொல்லலாம். குறிப்பாக, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்கூட மஹிந்திராவின் இந்த எலெக்ட்ரிக் கார்களைப் பார்த்து அசந்து போய்விட்டார் என கூறலாம். சமீபத்தில் இந்த காரின் டெஸ்ட் டிரைவ் பணிகளை முக ஸ்டாலினே தொடங்கி வைத்தார்.

அப்போது இந்த காரில் ரைடு செய்து அவர் டெஸ்ட் டிரைவ் பணிகளைத் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவேளையில், காரின் சிறப்புகளைக் கண்டு வியந்து அதற்கு பாராட்டு தெரிவித்திருக்கின்றார். இத்தகைய காரின் டெலிவரி பணிகளே சீக்கிரமே இந்தியாவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mahindra new e-car delivery timelines revealed

அதாவது, காரின் டெலிவரி டைம்லைனை நிறுவனம் அறிவித்திருக்கின்றது. வருகின்ற மார்ச் மாதத்தின் மத்தியிலேயே இரண்டு கார்களின் டெலிவரி பணிகளும் தொடங்கப்பட இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் இந்த காருக்கான புக்கிங் பணிகளை சீக்கிரமே நாட்டில் தொடங்க உள்ளது. காதலர்கள் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி அன்றே இந்த காருக்கான புக்கிங் பணிகள் தொடங்க இருக்கின்றது.

எக்ஸ்இவி 9இ காருக்கு மட்டுமல்ல இதன் சகோதர மாடலான பிஇ 6-க்கும் அன்றைய தினமே புக்கிங் பணிகள் தொடங்கப்பட இருக்கின்றது. ஆகையால், கார் காதலர்கள் அன்றைய தினத்தில் இந்த புது காதலுக்கு (எக்ஸ்இவி 9இ - பிஇ 6 இ-கார்களுக்கு) புக்கிங் வாயிலாக தங்களுடைய புரபோசலை கூறலாம்.

Mahindra new e-car delivery timelines details

எக்ஸ்இபி 9இ மற்றும் பிஇ 6 இரண்டு காரின் டெலிவரி பணிகளும் நாட்டில் தொடங்க உள்ளது. இந்த கார்கள் மொத்தமாக 9 வரையிலான வேரியண்டுகளில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்திற்கும் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றது. வண்ண தேர்வுகளைப் பொருத்த எக்ஸ்இவி 9இ கார் மாடலில் 7 விதமான நிற ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

எவரெஸ்ட் ஒயிட் (Everest White), டீப் ஃபாரஸ்ட் (Deep Forest), டேங்கோ ரெட் (Tango Red), நெபுலா ப்ளூ (Nebula Blue), டெசர்ட் மிஸ்ட் (Desert Myst), ரூபி வெல்வட் (Ruby Velvet) மற்றும் ஸ்டீல்த் பிளாக் (Stealth Black) உள்ளிட்டவையே அவை ஆகும்.

இந்த கார் மாடலை பேக் 3, பேக் 2 மற்றும் பேக் 1 என வெவ்வேறு பேக்குகளாக மஹிந்திரா நிறுவனம் பிரித்திருக்கின்றது. இதில் உயர்நிலை தேர்வுகளான பேக் 3-இன் டெலிவரி பணிகளே மார்ச் மாதத்தில் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு அடுத்தபடியாக பேக் 2-வில் மாடல்களின் டெலிவரி பணிகள் வருகின்ற ஜூலை மாதத்திலும், ஆரம்ப நிலை தேர்வுகளான பேக் 1-இல் மாடல்களின் டெலிவரி பணிகள் ஆகஸ்டு மாதத்திலும் தொடங்கப்பட இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. குறைவான திறன் கொண்ட பேட்டரி பேக் மற்றும் அதிக திறன் கொண்ட பேட்டரி பேக் இதை வைத்தே தன்னுடைய பேக்குகளை நிறுவனம் பிரித்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

பேக் 1-இல் சிறிய பேட்டரி பேக்கான 59 kWh பேட்டரி பேக்கையே மஹிந்திரா நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது. இதை ஒரு முழுமையாக சார்ஜ் செய்தாலே 542 கிமீ வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதைவிட பெரிய பேட்டரி பேக்கான 79 kWh-இல் ஓர் முழு சார்ஜில் 656 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

எக்ஸ்இவி 9இ-க்கு ரூ. 21.90 லட்சம் தொடங்கி ரூ. 30.50 லட்சம் வரையிலான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதேபோல், பிஇ 6 மாடலுக்கு ரூ. 18.90 லட்சம் தொடங்கி ரூ. 26.90 லட்சம் வரையிலான விலையே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது. சென்ற மாதத்தில்கூட விற்பனையில் டாடா மோட்டார்ஸுக்கு இது மிகப் பெரிய போட்டியை மஹிந்திரா வழங்கி இருக்கின்றது. இந்த இரண்டு எலெக்ட்ரிக் கார்களின் வருகை டாடாவிற்கு மேலும் தலைவலியைக் கூட்டக் கூடியதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, February 7, 2025, 10:59 [IST]
English summary
Mahindra xev 9e and be 6 delivery timelines and booking details for all variants revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+