சொன்னதை செஞ்சு காட்டிட்டாங்க.. இந்த காதலர் தினத்தை மறக்க முடியாததா மாற்றிய மஹிந்திரா.. எம்ஜி, டாடா ஓரம் போங்க!
மஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக எலெக்ட்ரிக் கார்களுக்கு புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) எனும் இரண்டு மின்சார கார் மாடல்களை நாட்டில் அறிமுகப்படுத்தியது. இரண்டு எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல்கள் ஆகும். இதுவரை நிறுவனம் உற்பத்தி செய்திராத ஓர் ஸ்டைலில் இந்த வாகனங்களை அது தயார் செய்திருக்கின்றது.
இந்த கார்களுக்கே இன்று (பிப்ரவரி 14) முதல் புக்கிங் பணிகள் தொடங்கப்படும் என அந்நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது. இந்த வாக்குறுதியையே மஹிந்திரா நிறுவனம் தற்போது நிறைவேற்றி இருக்கின்றது. அது தன்னுடைய எலெக்ட்ரிக் கார்களுக்கான புக்கிங் பணிகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கின்றது.

காதலர் தினம் அதுவும் இந்த காருக்கு புக்கிங் பணிகள் தொடங்கி இருப்பது, காதலர்களை குஷியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆன்லைன் அல்லது ஷோரூம் இரண்டும் வாயிலாகவும் கார்களை புக் செய்துக் கொள்ள முடியும். பிஇ 6 ரூ. 19.4 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும், எக்ஸ்இவி 9இ ரூ. 22.4 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தும் விற்பனைக்குக் கிடைக்கும்.
இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஏற்கனவே இந்த கார்களின் உற்பத்தி பணிகளை மஹிந்திரா நிறுவனம் தொடங்கிவிட்டது. வருகின்ற மார்ச் மாதத்தில் இந்த கார்களின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருப்பதை முன்னிட்டு உற்பத்தி பணிகளை அது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.
எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 இரண்டு கார் மாடல்களையும் இதுவரை 2,281 யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற மாதங்களில் இந்த கார்களின் உற்பத்தி எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டு இருக்கின்றது. நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளுக்கு கிடைப்பதைப் போலவே நல்ல வரவேற்பு இந்த மின்சார கார்களுக்கும் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களும் நான்கு விதமான வேரியண்டுகளில் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். பேக் ஒன் (Pack One), பேக் டூ (Pack Two), பேக் த்ரீ செலக்ட் (Pack Three Select) மற்றும் பேக் த்ரீ (Pack Three) ஆகியவையே அவை ஆகும்.
இதில் முதல் மூன்று வேரியண்டுகளில் 59 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும், கடைசி ஒன்றில் 79 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும் இடம் பெற்றிருக்கும். இதுவே உயர்நிலை தேர்வாகும். இவை ஓர் முழு சார்ஜில் 542 கிமீ முதல் 656 கிமீ வரையில் ரேஞ்ச் தரும்.
விலை பொருத்த வரை எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மாடலுக்கு ரூ. 21.90 லட்சம் தொடங்கி ரூ. 30.50 லட்சம் வரையிலான விலையும், பிஇ 6 மாடலுக்கு ரூ. 18.90 லட்சம் தொடங்கி ரூ. 26.90 லட்சம் வரையிலான விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இத்தகைய அதிக விலைக் கொண்ட காருக்கே தற்போது மஹிந்திரா நிறுவனம் புக்கிங் பணிகளை இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாக எம்ஜி விண்ட்ஸர் இவி மற்றும் டாடா நெக்ஸான் இவி இருக்கின்றன. இவற்றின் விற்பனையில் இந்த எலெக்ட்ரிக் காரின் வருகை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








