70 நாளில் 10,000 கார்களை டெலிவரி செய்த மஹிந்திரா! புக்கிங் செய்தவர்களுக்கே பென்டிங்!
மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ6 ஆகிய கார்களில் முக்கிய மைல் கல்லை எட்டி பிடித்துள்ளுது. இந்நிறவனம் கடந்த 2 மாதங்களில் அதிக எண்ணிக்கையான வாடிக்கையார்களுக்கு இந்த காரை டெலிவரி செய்தது. இந்த காருக்கு ஏகப்பட்ட புக்கிங் குவிந்துள்ள நிலையில் முடிந்த அளவிற்க அதிக அளவிலான வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவரி செய்து வருகிறது.இத குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் தனது எலெக்ட்ரிக் கார்களான எக்ஸயூவி 9ம மற்றும் பிஇ6 ஆகிய கார்களின் டெலிவரியை துவங்கியது. தற்போது இந்நிறுவனம் பேக்3 வெர்ஷனில் தான் அதிக கவனத்தை செலுத்தி வருகிறது. மார்ச் மாதமே சுமார் 6900 கார்களை அந்நிறுவனம் டெலிவரி செய்திருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் மே மாதங்களில் விற்பனை அதிகரித்துள்ளது. வெறும் 70 நாட்களில் மொத்தம் 10,000 வாகனங்களை டெலிவரி செய்துள்ளது. இந்நிறுவனம் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு காரை டெலிவரி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த 10 ஆயிரம் கார்களில் எக்ஸ்இவி 9இ காரின் பங்கு தான் அதிகமாக இருக்கிறது.
இந்த காரை புக் செய்த பலர் பேக் 3 வேரியன்டை தான் தேர்வு செய்துள்ளனர். இந்த கார்களுக்கான புக்கிங் குவிந்துள்ள நிலையில் எக்ஸ்யூவி 9இ மற்றும் பிஇ6 ஆகிய கார்களின் தயாரிப்பை அதிகரித்துள்ளது. இந்த இரண்டு கார்களுக்கான புக்கிங் துவங்கிய அன்றே 30,179 கார்களை மக்கள் புக் செய்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் மிட் ஸ்பெக் பேக்குகளை வரும் ஜூலை மாதம் டெலிவரி செய்யப்போவதாக அறிவித்திருந்தது. இது மட்டுமல்லாமல் பேஸ் லெவல் பேக்கை புக் செய்த வாடிக்கையாளர்கள் மேலும் சில காலம் காத்திருக்க வேண்டும். அவர்கள் புக் செய்த காரின் டெலிவரி ஆகஸ்ட் மாதம் தான் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்இவி9இ மற்றும் பிஇ 6 ஆகிய கார்களை அந்நிறுவனம் இக்குளோவ் ஸ்கேட்போர்டு இவி பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட காராக இருக்கிறது. மஹிந்திராவின் அடுத்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகள் எல்லாம் இதே பிளாட்ஃபார்மில் தயாரிக்க தான் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கார்களும் முழு சார்ஜில் 500 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது இது ரியல் வேர்ல்டு ரேஞ்ச் ஆகும். இது 79 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கில் கிடைக்கும் ரேஞ்ச் ஆகும். இந்த கார் 59 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷனும் இருக்கிறது. இந்த கார் ரூ21.90 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பைனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் கார்கள் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற கார்களாக இருக்கின்றன. இந்த கார்கள் புக்கிங் பற்றி செய்தி வந்தபோதே இந்த கார் மிகப்பெரிய ஹிட்டாகும் என தெரிந்துவிட்டது. கடந்த காலங்களில் அதிக காத்திருப்பு காலம் வைத்திருப்பது போல இல்லாமல் இந்த முறை வித்தியாசமான டெலிவரி முறையால் காத்திருப்பு காலத்தை குறைத்துள்ளது வரவேற்க்கதக்கது தான்.


Click it and Unblock the Notifications









