5 மாசத்துல 20,000 பேர் இந்த காரை வாங்கிட்டாங்க! அப்படி இதுல என்ன இருக்குது?
மஹிந்திரா எக்ஸ் இவி 9இ மற்றும் பிஇ6 ஆகிய கார்கள் இந்தியாவில் 20,000 கார்கள் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த சாதனையை வெறும் 5 மாதங்களில் அந்நிறுவனம் நிகழ்த்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய கார்களை கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. பெரும் எதிர்பார்பிற்கு இடையில் இந்த கார் விற்பனைக்காக களம் இறங்கியது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி இந்த கார்களுக்கான டெலிவரி துவங்கியுது. முதலில் டாப் வேரியன்ட் கார்களுக்கான டெலிவரி மட்டும் துவங்கியது.

இந்த கார்களுக்கு ஏகப்பட்ட புக்கிங் குவிந்ததால் டெலிவரி பரபரப்பாக நடந்தது. இந்த காரின் டெலிவரி துவங்கிய 70 நாளில் 10,000 கார்கள் டெலிவரி செய்யப்பட்டன. அதாவது அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு காரின் டெலிவரி நடந்தது.இந்நிலையில் தற்போது இந்த கார்களின் டெலிவரி 20,000 என்ற மைல் கல்லை எட்டிபிடித்துள்ளது. இதற்கு வெறும் 5 மாதம் மட்டுமே காலம் எடுத்துக்கொண்டனது. இது மட்டுமல்ல மொத்தமாக அனைத்து கார்களும் சேர்த்து 9.30,00,000 கி.மீ தூரம் பயணித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் எக்ஸ்இவி9இ காருக்கு தான் அதிகமான புக்கிங் குவிந்தது. ஏகப்பட்ட மக்கள் இதன் டாப் வேரியன்ட் காரையே தேர்வு செய்துள்ளனர். இந்த காருக்கான புக்கிங் துவங்கிய போதே ஏகப்பட்ட மக்கள் புக்கிங் செய்தனர். புக்கிங் துவங்கிய நாளிலேயே 30,179 கார்கள் புக் செய்யப்பட்டது. மஹிந்திரா நிறுவனம் இந்த இரண்டு கார்களையும் தனது இன்குளோவ் ஸ்கேட்போர்டு பிளாட்ஃபார்மில் தான் தயாரிக்கிறது. இந்த கார்கள் 2 விதமான பேட்டரி ஆப்ஷனவ்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த காரில் 79 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் போட்டால் 500 கி.மீ வரை ரேஞ்ச் தருகிறது. அதே நேரம் 59kWh பேட்டரி பேக் ஆப்ஷன் கூட இருக்கிறது. இதில் பெரிய பேட்டரி பேக் ஆப்ஷனில் 210kW எலெக்டரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. சிறிய பேட்டரி பேக் ஆப்ஷனில் 170 kW பேட்டரி பேக் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 140KW DC ஃபாஸ்ட் சார்ஜர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கார்களின் பேட்டரியை 20-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 20 நிமிடம் மட்டுமே எடுத்துக்கொள்ளும். இந்த காரில் பல்வேறு டிரைவ் மோடு ஆப்ஷன்கள் உள்ளன. வேகமாக பயணிக்க தனியாக பூஸ்ட் மோடு வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் மல்டி லெவல் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் அம்சம் இருக்கிறது. மேலும் இந்தகாரில் ஒன் பெடல் டிரைவ் அம்சம் இருக்கிறது. சிட்டி பயணத்திற்கு இது ஏற்றதாக இருக்கிறது.

இந்த கார் குறுகலான ரோடுகளில் பயணிக்க வசதியாக 10 மீட்டர் டர்னிங் ரேடியஸ் இருக்கிறது. மேலும் இதில் எலெக்ட்ரிக் பவர் ஸ்டியரிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கார்களில் கூடுதல் அம்சமாக பிரேக் பை ஒயர் தொழிற்நுட்பம், பானரோமிக் கிளாஸ் சன் ரூஃப், ஆம்பியன்ஸ் லைட்டிதங், வென்டிலேட்டட் சீட்டுகள், 43 இன்ச் கொண்ட 3 ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 சீட்டர் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், 360 டிகிரி கேமரா லைஃவ் ஃபடிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் கார்களுக்கு மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த கார்கள் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் தற்போது புதிய மைல் கல்லை எட்டி பிடித்துள்ளது. பலர் இந்த காருக்காக காத்திருந்த நிலையில் இந்த மைல் கல்லை எட்டிபிடித்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









