விலை இவ்வளவு கம்மியா? மஹிந்திராவின் புதிய கார்களின் விலை வெளியானது!
மஹிந்திரா நிறுவனம் தனது XEV 9e மற்றும் BE 6 ஆகிய கார்களின் பேக் 3 வேரியன்ட்களின் விலைகளை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த வாகனங்களுக்கான ஆரம்ப விலைகள் முதலில் 2024 நவம்பர் இறுதியில் அறிவிக்கப்பட்டன. XEV 9e இன் விலை ரூ. 21.90 லட்சம் மற்றும் BE 6 இன் விலை ரூ. 18.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, மேலும் விலை விவரங்கள் அறிவிக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. .
ஆரம்ப வெளியீட்டு கட்டத்தில், மஹிந்திரா மாதந்தோறும் இரு மாடல்களும் 5,000 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 79 kWh பேட்டரி பேக் மற்றும் 19 இன்ச் அலாய் வீல்களை கொண்ட BE 6 காரின் விலை ரூ. 26.90 லட்சம், அதே நேரத்தில் ஒத்த விவரக்குறிப்புகளை கொண்ட XEV 9e காரின் விலை ரூ. 30.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). '3 ஃபார் மீ' திட்டத்தின் மூலம், வாங்குபவர்கள் BE 6 க்கு ரூ. 39,224 மற்றும் XEV 9e க்கு ரூ. 45,450 EMI ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

XEV 9e இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை வழங்குகிறது: சிறிய ரக பேட்டரியான 59 kWh பேட்டரி பேக் மற்றும் பெரிய ரக பேட்டரியான 79 kWh பேட்டரி பேக் எடிசன் இதில் உள்ளது. இது ஒற்றை அல்லது இரட்டை மோட்டார் கட்டமைப்புகளில் வருகிறது, 228 bhp பவர் மற்றும் 281 bhp பவர் இடையே பவரையை வழங்குகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யப்படுகிறது, இது 175 kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி 20% முதல் 80% வரை பேட்டரி சார்ஜ் செய்வதை வெறும் 20 நிமிடங்களில் செய்து முடிக்கிறது.
இரு வாகனங்களும் அதிகமாக கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. XEV 9e 207 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸையும், 222 மிமீ பேட்டரி முதல் தரை வரை உள்ள தூரத்தையும் கொண்டுள்ளது. 4,765 மிமீ நீளத்தில் இந்த கார் அளவிடப்படுவதால், இது 663 லிட்டர் பூட் கொள்ளளவு மற்றும் 150 லிட்டர் கூடுதல் frunk சேமிப்பிற்கான சரக்குக்கு ஏராளமான இடத்தை வழங்குகிறது.

மஹிந்திரா BE6, XEV9e இரு கார்களும் ஒரே மாதிரியான சார்ஜிங் நேரங்களுடன் கூடிய பேட்டரி பேக்குகளைப் பகிர்ந்து கொள்கிறது. இது 207 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 218 மிமீ பேட்டரியிலிருந்து தரையில் தூரத்தை கொண்டுள்ளது. சேமிப்புக்காக 455 லிட்டர் பூட் கொள்ளளவை கொண்டுள்ளது மற்றும் 45 லிட்டர் வரை கூடுதல் சேமிப்பு இடத்தை வழங்கும் frunk ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த SUV கூபே கார்கள், பிரேக்-பை-வைர் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்துள்ளது, இது 100 kmph வரை வேகத்தில் இருந்து 0க்கு குறைய வெறும் 40 மீட்டரில் தூரத்தை மட்டுமே எடுத்துக்கொளுஅளம் , அதே நேரத்தில் பிரேக் ஆற்றல் மீட்பு 18 சதவீதத்தை மேம்படுத்துகிறது.

மஹிந்திரா BE6 இன் 79 kWh பேட்டரி பேக் ஒரு சார்ஜில் 682 கிமீ ARAI சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை வழங்குகிறது. நகர்ப்புற மெட்ரோ ரோடு கண்டிஷனில் ஏர் கண்டிஷனிங் பயன்படுத்தும் போதும் கூட, ஒரு சார்ஜுக்கு 500 கிமீக்கு மேல் ரேஞ்சை எதிர்பார்க்கலாம் என்று மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கிறது. வாகன விலைகள் சார்ஜர் செலவுகள் அல்லது இன்ஸ்டாலேஷன் கட்டணங்களை உள்ளடக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.
இரு மாடல்களின் பேக் 3 வகைகளின் டெலிவரி 2025 மார்ச் தொடக்கத்தில் தொடங்கும். அதே நேரத்தில் இந்த எடிசன்களுக்கு மட்டும் பிப்ரவரி 14 அன்று அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது; பிற வேரியன்ட்கள் பற்றிய இருப்பு அட்டவணை மார்ச் மாதத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கார்களின் டெஸ்ட் டிரைவ்கள் ஜனவரி 14 அன்று சென்னை, டெல்லி NCR, மும்பை MMR மற்றும் ஹைதராபாத் பெங்களூரு புனே உள்ளிட்ட நகரங்களில் தொடங்கும். இந்த காரை வாங்கும் எண்ணம் இருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த காரை இந்த நாட்களில் அருகில் உள்ள மஹிந்திரா ஷோரூம்க்கு சென்று டெஸ்ட் டிரைவ் செய்து கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இந்த இரண்டு கார்களையும் வெளியிடும்போது மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பு இருந்தது. முக்கியமாக அதிக தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றம் மார்டன் தொழிற்நுட்பங்களை விரும்புபவர்களுக்கு இ்நத கார் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









