குறைந்த விலை, காஸ்ட்லி லுக் மஹிந்திரா இந்த இவி காரை தயாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க!
மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ6 ஆகிய கார்களின் பேக் 2 வேரியன்ட்களின் டெலிவரியை துவங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது இந்த வேரியன்டின் தயாரிப்பு துவங்கியது. இந்த வேரியன்ட்டின் டெலிவரி இந்த மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ6 ஆகிய கார்களை மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. முதற்கட்டமாக டாப் மாடலான பேக் 3 வேரியன்டின் விற்பனையை மட்டுமே அந்நிறுவனம் செயஅது வந்த நிலையில் அடுத்த வேரியன்டான பேக் 2 வேரியன்டின் விற்பனையை துவங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம் தற்போது பேக் 2 வேரியன்ட் காரின் தயாரிப்பை துவங்கிவிட்டது. முதல் காரும் தயாரிக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து தயாரிப்புகள் நடக்கும். இப்படியாக தயாரிக்கப்படும் கார்கள் இந்தியா முழுவதும் உள்ள டீலர் ஷிப்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும். இதன் விற்பனை தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
மஹிந்திராவின் பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய இரண்டு கார்களிஞலும் 79 மற்றும் 59 கிலோ வாட் ஹவர் பேட்டி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் பிஇ 6 பேக் 2 59 கிலோ வாட் ஹவர் கார் ரூ21.90 லட்சம் என்ற விலையிலும், பிஇ6 பேக் 2 79 கிலோ வாட் ஹவர் பேட்டரி கொண்ட கார் ரூ23.50 லட்சம் என்ற விலையிலும், அதேநேரம் எக்ஸ்இவி 9இ பேக் 2 , 59 கிலோ வாட் ஹவர் பேட்டரி கொண்ட கார் ரூ24.90 லட்சம் என்ற விலையிலும், எக்ஸ்இவி 9இ பேக் 2 79 கிலோ வாட் ஹவர் பேட்டரி கொண்ட கார் ரூ26.50 லட்சம் என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டியது, இந்த காருக்கான சார்ஜர் இன்டாலேஷன் கட்டணம் தனியாக இருக்கிறது. 7.2 கிலோ வாட் மற்றும் 11.2 கிலோ வாட் என இரண்டு விதமான சார்ஜர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறன. இந்த கார்கள் 79 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கில் 500 கி.மீ, 59 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கில் 400 கி.மீ ரேஞ்சை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 79 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட கார் தான் அதிகமாக தயாரிக்கப்படுகிறது. குறைந்த பேட்டரி பேக் கொண்ட கார்களை புக் செய்த வாடிக்கையாளர்கள் வேண்டும் என்றால் பேட்டரி பேக் ஆப்ஷனை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கார்களிலும் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. குறிப்பாக லெவல் 2 அடாஸ், பானரோமிக் கிளாஸ் சன் ரூஃப், 16 ஸ்பீக்கர் கொண்ட ஹார்மன் கார்டன் செட்டப் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. பிஇ6 காரில் பிரிமியம் லெதர் சீட்டுகள், மற்றும் ஐவரி நிற ரூஃப் லைனர்கள் வழங்கப்பட்டுள்ளுது. எக்ஸ்இவி 9இ காரில் 3 ஸ்கிரீன் கொண்ட லே அவுட் மார்டன் டேஷ் போர்டு லுக்கில் வழங்கப்பட்டுள்ளது.

இது போக இந்த காரின் பேஸ் வேரியன்ட் விற்பனை வரும் செப்டம்பர் மாதம் தான் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காக மஹிந்திரா நிறுவனம் இந்த யுக்தியை பின்பற்றி வருகிறது. அதிகமான புக் ஆகும். டாப் வேரியன்ட் கார்களுக்கு தயாரிப்பில் முக்கியத்தும் அளித்து அதிக எண்ணிக்கையில் தயாரித்து பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துவிட்டால் பின்னர் மற்ற வேரியன்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம் என திட்டமிட்டு இதை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் சிறப்பாக விற்பனையாவதற்கு மஹிந்திரா நிறுவனம் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது பேக் 2 வேரியன்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. நிச்சயம் வரவேற்க்க தக்கது தான். இந்த முறை காத்திருப்பு காலத்தை குறைக்கிறது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









