புது மஹிந்திரா எலக்ட்ரிக் காரை பற்றி புட்டு புட்டு வெச்சிட்டாங்க! BMW காருடன் ஒரேயொரு பந்தயம் தான்...!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) ஆகும். கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிஇ 6 (BE 6) எலக்ட்ரிக் கார் உடன் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து டெலிவிரிகள் (Deliveries) கடந்த மார்ச் மாதத்தில் துவங்கப்பட்டன.
இந்த எலக்ட்ரிக் கார்களின் விலைமிக்க டாப் வேரியண்ட்களின் டெலிவிரிகள் மட்டுமே தற்போதைக்கு துவங்கப்பட்டுள்ளன. விலை குறைவான வேரியண்ட்களின் டெலிவிரிகள் ஜூன் மாதத்தில் இருந்துதான் துவங்கப்பட உள்ளன. இதனாலேயே, பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி பெற்று வருபவர்கள் விலைமிக்க வேரியண்ட்டை புக் செய்த செல்வந்தர்களாக உள்ளனர்.

இந்த புதிய மஹிந்திரா கார்களின் டெலிவிரி துவங்கப்பட்டதில் இருந்து சாலைகளில் ஆங்காங்கே இந்த எலக்ட்ரிக் கார்கள் காட்சித்தர ஆரம்பித்துள்ளன. சிலர் வழக்கம்போல புதியதாக மார்க்கெட்டுக்கு வந்துள்ள இந்த எலக்ட்ரிக் கார்களை வைத்து ஸ்டண்ட் (Stunt)களில் ஈடுப்பட ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் இங்கு ஒரு மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் பி.எம்.டபிள்யூ (BMW) கார் உடன் பந்தயத்தில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளது.
'எவரெஸ்ட் வெள்ளை' (Everest White) எனப்படும் முற்றிலும் வெள்ளை நிறத்திலான இந்த எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் (3-Series) என்கிற லக்சரி செடான் (Sedan) ரக கார் உடன் பந்தயத்தில் உட்படுத்தப்பட்டு உள்ளது. எக்ஸ்இவி 9இ ஆனது நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக ஆகும். ஆக கார்கள் இரண்டுமே தோற்றத்தில் வெவ்வேறானவை.

இதைவிட முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், எக்ஸ்இவி 9இ ஓர் எலக்ட்ரிக் கார்; பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் ஆனது பெட்ரோல் என்ஜின் (Petrol Engine)-இல் இயங்கக்கூடிய கார் ஆகும். பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார் இந்தியாவில் 330எல்.ஐ (330Li) என்கிற ஒரேயொரு பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், இது முன் & பின் சக்கரங்களுக்கு இடையே அதிக தூரத்தை கொண்ட லாங்-வீல்பேஸ் (Long-Wheelbase) கார் ஆகும். மஹிந்திரா எக்ஸ்இவி 9இ மற்றும் பிஎம்டபிள்யூ 330எல்.ஐ கார்களுக்கு இடையேயான இந்த பந்தயம் நன்கு பரந்து விரிந்த நெடுஞ்சாலை (Highway) ஒன்றில் நடத்தப்பட்டுள்ளது.
பந்தயத்தின் முதல் சுற்றில் இரு கார்களுமே வழக்கமான செட்டிங்க்ஸ் (Settings)-இல் ஓட்டப்பட்டன. ஆனால் அதன்பின், 3வது சுற்றில் இரு கார் டிரைவர்களும் ஆக்ஸலரேஷன் (Acceleration)-ஐ வலுவாக கொடுக்க ஆரம்பித்தனர். எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரில் உடனடி டார்க் திறன் சற்று விரைவாகவே கிடைத்ததால், பந்தயத்தின் துவக்கத்தில் இந்த மஹிந்திரா கார் பிஎம்டபிள்யூ காரை எளிதாக முந்தியது.
ஆனால், அதிவேகத்தில் செல்லும்போது பிஎம்டபிள்யூ கார்களுக்கே உண்டான குணம் வெளிவந்தது. பந்தயத்தில் 3-சீரிஸ் கார் பறந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால், அந்த சுற்றில் பிஎம்டபிள்யூ கார் தான் வெற்றி பெற்றது. இந்த பந்தயத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து சுற்றுகளிலும் ஆரம்பத்தில் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் முன்னிலை வகித்தாலும், கடைசியில் பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார் தான் வெற்றி பெற்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பந்தயத்தில் பிஎம்டபிள்யூ 330எல்.ஐ கார் தான் வெற்றி பெற்றது. ஆனால், இந்த பந்தயம் அடிப்படையிலேயே தவறானதாக உள்ளது. எக்ஸ்இவி 9இ ஆனது விலையுயர்ந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார் என்றாலும், பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் லாங்-வீல்பேஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.62.60 லட்சமாக உள்ளது. அதாவது, எக்ஸ்இவி 9இ காரின் விலையை காட்டிலும் டபுள் மடங்கு அதிகமாகும்.


Click it and Unblock the Notifications









