மன நிறைவோட வாங்கிட்டு போறாங்க... குடும்பமாக வந்து டெலிவிரி பெறும் அளவுக்கு ரொம்ப ஸ்பெஷலான எலக்ட்ரிக் கார் இது!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) ஆகும். கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் மார்க்கெட்டில் எக்ஸ்இவி 9இ மற்றும் பி.இ 6 (BE 6) என 2 எலக்ட்ரிக் கார்களை மஹிந்திரா அறிமுகம் செய்தது. ஆனால், இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகள் கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் துவங்கப்பட்டன. அதனை தொடர்ந்து, பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் மார்ச் மாத மத்தியில் இருந்து துவங்கப்படும் என கூறப்பட்டது.

அதன்படி, மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை புக் செய்த கஸ்டமர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், பிராண்ட்-நியூ எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்ற கஸ்டமர் ஒருவர் அதனை வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

mahindra xev 9e deliveries starts

மேலும், எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் முதல் டெலிவிரி என்றும் வீடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த கஸ்டமர் குடும்பத்துடன் ஷோரூமுக்கு சென்று சிவப்பு நிறத்திலான எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். இதனை 'சிக்னெச்சர் ரெட்' (Signature Red) என மஹிந்திரா நிறுவனம் அழைக்கிறது.

இந்தியாவில்தான் இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும், இந்தியாவில் எந்த பகுதியில் என்பதை அறிய முடியவில்லை. ராஜஸ்தான் மாநிலமாக இருக்கலாம் என நினைக்கிறோம். எப்படியோ... மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் டெலிவிரிகள் துவங்கப்பட்டு இருப்பது மட்டும் இதன் மூலம் உறுதியாகிறது. இதேபோல், பிஇ 6 எலக்ட்ரிக் கார் டெலிவிரி குறித்த செய்தியும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.

பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டான பேக்-3 இன் டெலிவிரிகள் மட்டுமே முதலாவதாக மார்ச் மாதத்தில் துவங்கப்படும் என மஹிந்திரா ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி பார்த்தால், தற்போது டெலிவிரி செய்யப்பட்டு இருக்கும் இந்த சிவப்பு நிறத்திலான எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரும் பெரிய அளவிலான 79kWh பேட்டரியை கொண்ட விலைமிக்க பேக்-3 வேரியண்ட் என உறுதியாக சொல்லலாம்.

இதேபோன்று, பிஇ 6 எலக்ட்ரிக் காரின் விலைமிக்க பேக்-3 வேரியண்ட்டின் டெலிவிரிகள் தான் முதலாவதாக துவங்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, வருகிற ஜூன் மாதத்தில் இருந்து இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் பேக்-3 செலக்ட் (Select) வேரியண்ட்களின் டெலிவிரிகள் துவங்கப்பட உள்ளன.

mahindra xev 9e deliveries starts

அதன்பின், பேக்-2 வேரியண்ட்களின் டெலிவிரிகள் ஜூலை மாதத்தில் இருந்தும், பேக்-1 வேரியண்ட்களின் டெலிவிரிகள் ஆகஸ்ட் மாதத்தில் இருந்தும் துவங்கப்பட உள்ளன. தற்போது டெலிவிரி செய்யப்பட்டுள்ள மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை பொறுத்தவரையில், இது மஹிந்திரா உருவாக்கிய பருத்த உருவத்திலான எலக்ட்ரிக் கார் ஆகும்.

பிஇ 6 எலக்ட்ரிக் காரை காட்டிலும் இது பவர்ஃபுல்லானது மற்றும் விலைமிக்கது ஆகும். எலக்ட்ரிக் வாகனங்களுக்கு என்றே மஹிந்திரா நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கிய பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் இந்த எலக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரின் முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்-கள் இரண்டும் எல்இடி லைட் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன.

mahindra xev 9e deliveries starts

ஏற்கனவே கூறியதுபோல், மஹிந்திராவின் விலைமிக்க எலக்ட்ரிக் காரான இதில் டேஸ்போர்டில் 12.30-இன்ச்சில் 3 விதமான ஸ்க்ரீன்கள், 7 ஏர்பேக்குகள், லெவல்-2 அடாஸ், 360-டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த காரின் விலை குறைவான வேரியண்ட்களில் 59kWh பேட்டரியும், விலைமிக்க வேரியண்ட்களில் 79kWh பேட்டரியும் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இருப்பதிலேயே விலைமிக்க மஹிந்திரா எலக்ட்ரிக் காரின் டெலிவிரிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. அந்த விலையுயர்ந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரை தான் இந்த ராஜஸ்தான் குடும்பம் வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளது. இதனை இந்த குடும்பத்தினர் நீண்ட நாட்களுக்கு மறக்க மாட்டார்கள் என்பதை உறுதியாக சொல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 20, 2025, 19:38 [IST]
English summary
Mahindra xev 9e electric car deliveries starts in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X