கம்மி விலையில் இனி இந்த காரை வாங்கலாம்! டாப் வேரியன்டில் மட்டுமல்ல பேஸ் வேரியன்டில் கூட இப்படி ஒரு மாற்றமா?

மஹிந்திரா நிறுவனம் பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய கார்களை அறிமுகப்படுத்திய நிலையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உலகையே மாற்றி போட்டுள்ளது. முதன் முறையாக எலெக்ட்ரிக் கார் ஃபன் டிரைவிங், டெக் அம்சங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்ற காராக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது தனது வாகனத்தின் லைன் அப்பை மாற்றி பல்வேறு பேட்டரி ஆப்ஷனவ்களுடன் புதிய கார் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய கார்களில் பேக் ஒன், பேக் ஒன் அவப், பேக் 2, பேக் 3 செலக்ட், பேக் 3 ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இதில் பெரிய பேட்டரியான 79 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் டாப் வேரியன்ட் காரில் விற்பனைக்கு வந்துள்ளது. மற்ற வேரியன்ட்களில் 59 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் விற்பனைக்கு வந்துள்ளது.

Mahindra XEV 9e

இந்நிலையில் புதிய வேரியன்டிற்காக அரசிடம் சம்ர்பிக்கப்பட்ட ஆவணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மஹிந்திரா நிறுவனம் தனது எகஸ் இவி9இ காரின் புதிய வேரியன்டகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பல்வேறு பேட்டரி ஆப்ஷன்கள் கொண்ட காம்பினேஷனில் இந்த மாற்றம் இடம் பெறும் என தெரிகிறது.

இந்த ஆவணத்தில் உள்ள தகவலின்படி மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ் இவி 9இ பேக் ஒன் காரில் 59 கிலோவாட் பேட்டரி பேக் கொண்ட பேஸ் வேரியன்டை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிகிறது. தற்போது 59 கிலோ வாட் ஹவரில் பேக் 2, பேக் 3 செலக்ட், பேக் 3, ஆகிய வேரியன்ட்களும், 79 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கில் பேக் 3 செலக்ட், பேக் 3 ஆகிய வேரியன்ட்களும் விற்பனையாகி வருகின்றன.

Mahindra XEV 9e

இதற்கு முன்னர் பேக் 3 வேரியன்ட் கார் 79 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் மட்டுமே விற்பனையாகி வந்தது. பேக் 3 செலக்டில் 59 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன் மட்டுமே இருந்தது. தற்போது பேக் 3 யில் குறைந்த வேரியன்ட் பேட்டரியும், பேக் 3 செலக்டில் பெரிய பேட்டரியும் பொருத்தப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ பேக் 3 பி59 வேரியன்ட் பல வாடிக்கையார்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய ரக பேட்டரிபேக் கார் ரேஞ்ச் குறைவாக இருக்கலாம். விலை பற்றி கவலைப்படாவதவர்களுக்கு பேக் 3 செலக்டில் பெரிய பேட்டரி பேக் ஆப்ஷன் இருக்கிறது.

Mahindra XEV 9e

அதே நேரம் தற்போது உள்ள பேக் 1 அபவ் வேரியன்ட் புதிய ஆவணத்தில் இடம் பெறவில்லை. இந்த வேரியன்டை அந்நிறுவனம் விரைவில் நிறுத்துவதற்காக அறிகுறியாக இது தெரிகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனம் இந்த காரின் வேரியன்ட்களை அப்டேட் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் வேரியன்ட்களில் கொண்டு வரப்படும் மாற்றம் வாடிக்கையாளர்கள் தேவையை அறிந்தும், வாகன தயாரிப்பை அதிகரிப்பதற்காகவும் அந்நிறுவனம் எடுத்த முடிவாக இருக்கிறது. இது நிச்சயம் பல்வேறு மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, June 9, 2025, 23:30 [IST]
English summary
Mahindra xev 9e new variants details leaked
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X