7 பேர் போகலாம் கி.மீக்கு வெறும் ரூ1 தான் செலவாகும்! மஹிந்திராவின் புதிய இவிகார் அறிமுக தேதி வெளியானது!

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்ததயாராகி வருகிறது. இந்தகாரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி மற்றும் பெயர் வெளியாகியுள்ளது. மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இப்படியாக ஒரு கார் தேவை என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த கார் அறிமுகமாகவுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனத்தின் பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய எலெக்ட்ரிக் எஸ்கயூவி கார்கள் இந்தாண்டு மிகப்பெரிய ஹிட்டானது. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் இதை அடிப்படியாக கொண்ட ஒரு 7 சீட்டர் எஸ்யூவி காரை மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியுள்ளது.இந்த காரை இந்தியாவில் அந்நிறுவனம் சோதனை செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகியது.

Mahindra XEV 9s

இந்நிலையில் இந்த காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி தற்போது வெளியாகியுள்ளது. இந்த காருக்கு அந்நிறுவனம் எக்ஸ்இவி 9எஸ் என பெயர் வைத்துள்ளது. இந்த காரை அந்நிறுவனம் வரும் நவம்பர் 26ம் தேதி விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து டீசரை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி பெங்களூருவில் நடக்கில் வரும் 17 மற்றும் 26ம் தேதி இந்நிறுவனம் 'Scream Electric' என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இதில் 26ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் இந்த கார் அறிமுகமாகவுள்ளது. இது குறித்து வெளியான டீசர் வீடியோவில் இந்த கார் குறித்த அதிகமான தகவல்கள் இல்லை. இந்த காரின் பெயர் மற்றும் அறிமுக தேதி குறித்த விபரங்கள் தான் உள்ளது. மஹிந்திரா எக்ஸ்இவி 9இ என்ற பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது. இந்தகார் ஸ்டைலாகவும், டெக்னாலஜி நிறைந்ததாகவும், எலெக்ட்ரிக் கூபே கார் லுக்கிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதை எக்ஸ்இவி 9 குடும்பத்தில் இரண்டாவது காராக களம் இறக்க முடிவு செய்துள்ளது.

Mahindra XEV 9s

இந்த எக்ஸ்இவி9எஸ் கார் முதல் காராக களம் இறங்குகிறது. இந்த கார் அதிக வால்டேஜ் கொண்ட இன்குளாவ் ஆக்கிடெக்ஷரில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் எலெக்ட்ரிக் காருக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடுலர் ஸ்கேட்போர்டு பிளாட்ஃபார்ம் பல்வேறு விதமான பாடி ஸ்டைல் மற்றும் சைஸ்களில் உருவாக்க கூடிய வகையில் இருக்கிறது. இது மட்டுமல்ல 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் செட்டப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் செமி ஆக்டிவ் சஸ்பென்சன் மற்றும் பிரேக் பை வயர் தொழிற்நுட்பம் கொண்டதாக இருக்கிறது.

இந்த கார் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இது விற்பனைக்கு வரப்போவது உறுதியாகியுள்ளது. இந்த கார் மார்கெட்டில் டாடா ஹாரியர் இவி காருக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த காரின் அளவுகள் குறித்த விரிவான விபரங்கள் தெரிவில்லை.ஆனால் 9இ கார் 2775 மிமீ வீல் பேஸஅ கொண்டதாக இருந்தது. அந்த காரும் அப்படியே இருகு்கும் ென எதிர்பார்க்கலாம்.

இந்த எக்ஸ்இவி9 எஸ் காரின் பேட்டரி செட்டப் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. ஆனால் இது 9இ காரில் உள்ள அதே 59kwh
மற்றும் 79kwh பேட்டரி பேக்குகள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். மஹிந்திரா நிறுவனம் இந்த பேட்டரி பேக்குகளை பிஒய்டி நிறுவனத்திடமிருந்து பெறுகிறது. இதி்ல 79kwh பேட்டரி பேக் 656 கி.மீ ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் டுயல் மோட்டார் உடன் ஆல்வீல் டிரைவ் சிஸ்டமும் இடம் பெற வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த ரக வாகனங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 7 பேர் பயணம் செய்யும் காரில் 79kwh பேட்டரிக்கு சார்ஜ் போட கரெண்ட் பில் அதிகபட்சம் ரூ790 வரும் அதில் 680 கிமீ பயணித்தால் கி.மீக்கு வெறும் ரூ1.1 தான் செலவாகும். இதுஅதிகாரப்பூர்வ கணக்கீடு இல்லை என்றால் மிக குறைவாக தான் செலவாகும் என்பதால் இந்த கார் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 1, 2025, 20:00 [IST]
English summary
Mahindra xev 9s 7 seater electric suv launch date revealed
மேலும்... #mahindra #india #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+