சொகுசு பங்களா மாதிரி காரை தயாரித்த மஹிந்திரா! பார்க்கவே பிரம்மாண்டமா இருக்குதே!
மஹிந்திரா நிறுவனம் தனது 7 சீட்டர் எலெக்ட்ரிக் காராக எக்ஸ்இவி 9எஸ் என்ற காரை அறிமுகப்படுத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த கார் குறித்த புதிய டீசரை வெளியிட்டுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த எக்ஸ்இவி9எஸ் காரில் என்ன இருக்கிறது? இதில் உள்ள அம்சங்கள் என்ன? டீசல் இடம்பெற்றுள்ள தகவல்கள் என்ன? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனை செய்யும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தாண்டு துவக்கத்தில் வெளியிட்ட பிஇ6 மற்றும், எக்ஸ்இவி 9இ ஆகிய கார்களை வெளியிட்டுள்ளது. இது மார்கெட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தற்போது இதே சிரீஸில் புதிதாக எக்ஸ்இவி 9எஸ் என்ற காரை விற்பவனைக்கு கொண்டு வருகிறது.

இந்த காரில் எக்ஸ்இவி 9இ காரில் உள்ளதை போல டேஷ்போர்டு டிசைன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 ஸ்கீரீன்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்டர் கன்சோல் பகுதி, 2 வீல் ஸ்டியரிங் வீல் லேகோ இலுமினேட் செய்யும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எல்லாம் எக்ஸ்இவி 9இ காரில் இருக்கும் அதே வடிவமைப்பு தான் இருக்கிறது. 9எஸ் காரில் முனுபவத்திற்காக வேறு மெட்டிரியல் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த கார் 3 வரிசை சீட்டர் கொண்டது என்பதால் நடு வரிசை சீட்டைஸ்லைடு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த டீசரில் பாஸ்மோடு ஃபங்சன் இடம் பெற்றுள்ளது. மேலும் முன்வரிசை சீட்டை அட்ஜெஸ்ட் செய்தால் நடுவரிசை சீட்டில் உள்ளவர்களுக்கு கால் வைக்க அதிக இட வசதி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் மஹிந்திராவின் சிறப்பான 3 ஸ்கிரீன் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.இது பயணிகளை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும். 9இ காரில் பல பங்சன்கள் ஸ்கிரீனில் வழங்கப்பட்டது சற்று அசெளகரியமாக இருந்தது. இது இந்தகாரில் மாற்றப்பட்டு சில முக்கியமான பங்சன்கள் பட்டன்களில் வழங்கப்பட்டால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பு கிடைக்கும்.
இந்த காரில் உள்ள பேட்டரி பேக் குறித்த தகவலை அந்நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்நிறுவனம் தனது 9இ காரில் உள்ள அதே 59kwh மற்றம் 79kwh பேட்ரடி பேக் ஆப்ஷனை வழங்கும் என எதிர்பார்க்கலாம். இது மட்டுமல்லாமல் பின்பக்க ஆக்ஸிலில் மோட்டார் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. இது மட்டுமல்லாமல் ஹாரியர் இவிக்கு போட்டியாக முன்பக்க ஆக்ஸிலில் மற்றொரு மோட்டாரை பொருத்தி ஆல் வீல் டிரைவ்சிஸ்டம் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் நல்ல பெயரை சம்பாதித்துவருகிறது. குடும்பத்துடன் பயணிக்கும் காருக்கு நல்ல டிமாண்ட் ஏற்பட்டு வருவதால் இந்த கார் விற்பனைக்கு வரும் போது சிறீப்பான வரவேற்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








