நாடே எதிர்பார்த்த கார் நாளை அறிமுகம்! இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா?

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்இவி 9எஸ் என்ற காரை நாளை (நவ 27ம் தேதி)வெளியிடுகிறது. இந்த காரில் சொகுசு வசதி எண்டர்டெயின்மென்ட் ஆகிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஃபோர்ட்போலியோவை விரிவுபடுத்தும் வகையில் தனது புதிய எக்ஸ்இவி 9எஸ் என்ற காரை நாளை பெங்களூருவில் வைத்து விற்பனைக்க அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் அந்நிறுவனத்தின்முதல் 3 வரிசை சீட்டர் கொண்ட எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த கார் எக்ஸ்இவி 9இ காரை தழுவி உருவாக்கப்பட்ட 7 சீட்டர் கார் ஆகும். இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு தனித்துவமான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Mahindra XEV 9S

இந்த கார் வடிவமைப்பை பொருத்தவரை இந்நிறுவனம் வெளியிட்ட எக்ஸ்யூவி இ.8 கான்செப்ட் காரின் வடிவமைப்பில் பெரும்பான்மையான அம்சங்கள் இதில் உள்ளது. பக்கவாட்டு பகுதியை பொருத்தவரை எக்ஸ்யூவி 700 காரின் லுக்கில் வடிவமைக்கப்ப்டடுளு்ளது.க கேபின் பகுதியை பொருத்தவரை எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ6 காரின் லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3 ஸ்கிரீன் கொண்ட லேஅவுட் டேஷ்போர்டு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே, இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், மற்றும் முன்பக்க பயணிக்கான எண்டர்டெயின்மெட் ஸ்கிரீன் ஆகிய அம்சங்கள் உள்ளது. இது போக உட்புற தீம் 2 ஸ்போக் கொண்ட ஸ்டியரில் வீல் கொண்டு சிம்பிளாகவும் கிளீனாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வரிசை சீட்டில் சாய்வு வசதி உள்ளது. இதுபோக பாஸ் மோட் மற்றும் கூடுதல் லெக் ரூம் ஆகிய அம்சங்கள் உள்ளது.

Mahindra XEV 9S

இது போக பெரிய பானரோமிக் கிளாஸ் ரூஃப், பின்பக்க பயணிகளுக்கும் என்டர்டெயின்மென்ட் ஸ்கிரீன்கள் உள்ளது. மேலும் இதில் BYOD சிஸ்டம் இருக்கிறது. இதில் பயணிகள் அவர்களது டேப்லெட்களை வைக்க தனி ஹோல்டர்கள் வழங்கப்ப்டடுள்ளது. இது போக இந்த காரில் முன்பக்க பூட் மற்றும் கூடுதல் முன்பக்க ஸ்டோரேஜ் கம்பார்மென்ட் அம்சங்கள் உள்ளது.

இந்த காரை மஹிந்திரா நிறுவனம் INGLO பிளாட்ஃபார்மில் உருவாக்கியுள்ளது. இந்த கார் எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ6 ஆகிய கார்கள் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் தான் தஉருவாக்கப்படுகிறது. இந்த இரண்டு கார்களில் இருந்து எக்ஸ்இவி 9எஸ் காரில் சஸ்பென்சன் செட்டப்பில் சில மாற்றங்கள் இருக்கலாம். மேலும் ரியல் வேர்ல்டில் இந்த கார் 500 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எக்ஸ்இவி 9எஸ் காரில் பாதுகாப்பு தொழிற்நுட்பங்கள் சிறப்பாக உள்ளது. முக்கியமாக இதில் லெவல் 2 அடாஸ் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், முன்பக்க சீட்டில் வென்டிலேஷன் மற்றும் பவர் அட்ஜெஸ்டபிள் அம்சங்கள், பவர்டு டெயில் கேட், கனெக்டெட் கார் அம்சங்கள், வயர்லெஸ் சார்ஜிங், பிரிமியம் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், இந்த காரின் ஸ்பெக் மற்றும் வேரயன்ட் குறித்த விபரம் எல்லாம் நாளை அறிமுகமாகும் போதுதான் தெரியவரும். விலை விபரங்களும் அப்பொழுது தான் தெரிய வரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாக துவங்கியுள்ள நிலையில் இந்த கார் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெறும்என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலையை பொருத்து தான் விற்பனை இருக்கும். மஹிந்திரா எக்ஸ்இவி 9இ மற்றும் பி6 கார்களின் வெற்றியை தொடர்ந்து இந்த காரும் வெற்றி பெற வாய்ப்புள்ளது

More from DriveSpark

Article Published On: Wednesday, November 26, 2025, 13:15 [IST]
English summary
Mahindra xev 9s launch india key details
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+