வெயிட்டிங்கே வெறி ஆகுது! 7 பேர் போற எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மஹிந்திரா! விலை எவ்ளோ இருக்கும்?
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S). இதுதான் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் (Mahindra's First 7-Seater Electric SUV) ஆகும்.
பெங்களூர் நகரில் வரும் நவம்பர் 27ம் தேதி (November 27) நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறித்த விரிவான தகவல்களை, இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ என்ற 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த 2 எலெக்ட்ரிக் கார்களிலும் வழங்கப்படும் அதே 59 kWh மற்றும் 79 kWH பேட்டரி ஆப்ஷன்கள்தான் (Battery Options), மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரில், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஏனெனில் டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) எலெக்ட்ரிக் காரில், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதுதவிர ஏராளமான அதிநவீன வசதிகளையும் (Features), மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS - Advanced Driver Assistance Systems), 360 டிகிரி கேமரா, கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் 3 திரைகள் கொண்ட டேஷ்போர்டு (டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்டெண்ட் சிஸ்டம் + டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் + கூடுதலாக முன் பக்க பயணியின் இருக்கை முன்பு ஒரு திரை) போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்ட்டிவிட்டி, ஆம்பியண்ட் லைட்டிங், பிரீமியம் அப்ஹோல்ஸ்ட்ரி, வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளையும், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது மிகவும் பிரீமியமான அதே நேரத்தில் 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட கார் என்பதால், மஹிந்திரா பிஇ 6 மற்றும் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களையும் விட, மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரின் விலை அதிகமாக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.
அனேகமாக மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 22 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 35 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என நாங்கள் கருதுகிறோம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.


Click it and Unblock the Notifications








