இன்னோவா எல்லாம் ஓரம் போ! மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் கார் விலை இவ்வளவு கம்மியா?

மஹிந்திரா நிறுவனம் பெங்களூருவில் ஸ்கிரீம் எலெக்ட்ரிக் என்ற நிகழ்வை நடத்தி வருகிறது. இதில் அந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் அறிமுகமாகிவரும் நிலையில் தற்போது அந்நிறுவனம் தனது மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் 3 வரிசை சீட்டர் கொண்ட கார்களில் முதன் முறையாக ஒரு எலெக்ட்ரிக் காரை களம் இறக்குகிறது.இந்த செக்மெண்டில் களம் இறங்கும் வித்தியாசமான கார் என்பதால் மக்கள் மத்தியில் இந்த கார் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்கள் இ்நதியாவில் அதிக அளவில் விற்பனையாகிவரும் நிலையில் இந்த கார் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.

Mahindra Xev 9s Launch

இந்நிலையில்இந்த காரை இன்று பெங்களூருவில் நடக்கும் ஸ்கிரீம் எலெக்ட்ரிக் என்ற அந்நிறுவனத்தின் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்திருந்தத. இதற்காக முன்னர் டீசரை வெளியிட்டிருந்தது. மஹிந்திரா நிறுவனம் இந்த எக்ஸ்இவி 9எஸ் காரை தனது எக்ஸ்யூவிஇ.8 கான்செப்ட்டில் இரந்து எக்ஸ்யூவி 700 காரின் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டும் உருவாக்கியுள்ளது. இந்த காரில் இன்ஃபோடெயி்னமென்ட் ஸ்கிரீன்கள், 2வது வரிசை பயிணகள் சீட்ட்டில் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்கள், ஆகியன இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில்இந்த நிகழ்ச்சி துவங்கியதும் இந்த கார் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாக துவங்கினர்.

அதன்படி இந்தகாரில் எம்ஏஐஏ என்ற ஏஐ தொழிற்நுட்பம் இந்த காரில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் மற்ற டிஜிட்டல் சிஸ்டம்களில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த கார் எக்ஸ்இவி 9இ மற்றம் பிஇ6 காரில் கூறப்பட்ட சில அம்சங்களை மாற்றியமைத்து சரி செய்துள்ளனர். இந்த காரில் எக்ஸ்இவி 9எஸ் என் பெயரில் உள்ள எஸ் என்பது ஸ்பேஸ் என்ற ஆங்கில வார்த்தையை குறிக்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் இங்குளோவ் ஆர்க்கிடெக்ஷர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.

Mahindra Xev 9s Launch

மஹிந்திரா நிறுவனம் இந்த எக்ஸ்இவி 9எஸ் கார் சராசரியாக 500 கி.மீ ரேஞ்ச் தரும் என தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் பல்வேறு நேரங்களில் இந்தகாரை ஓட்டி சோதனை செய்து பார்த்து ஒவ்வொரு நகரங்களிலும் எவ்வளவு தூரம் ரேஞ்ச் தருகிறது என்ற தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. சென்னையில் 488 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார் 281 பிஎச்பி பவரையும் 380 என்எம் டார்க் தறினைஎம் வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது விற்பனையில் உள்ள எக்ஸ்இவி 9இகாரில் அதே பெர்ஃபார்மென்ஸ் தான் இந்தகாரிலும் இருக்கிறது. இந்த காரில் அந்நிறுவமன் அடாப்டிவ் சஸ்பென்சன் சிஸ்டத்தை பொருத்தியுள்ளது. இது 15 மில்லி நொடியில் ரெஸ்பான்ஸ் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நிறுவனம் அடுத்தடுத்து கொண்டு வரப்போகும் எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களுக்கு இதே சிஸ்டத்தை பொருத்தும் என எதிர்பார்க்கலாம்.

Mahindra Xev 9s Launch

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பாக இருகு்கிறது. முன்பக்கம் அல்லது பக்கவாட்டு பகதியில் மோதல் நடந்தால் பாதிப்பை குறைக்க அதிக ஸ்டிரென்த் கொண்ட ஸ்டீல் வழங்கப்ப்டடுள்ளுது. மேலும்இந்த காரில் அடாஸ் லெவல் 2+, ஐடென்டி டிஓஎம்எஸ் அதாவது டிரைவர் மற்றும் முன்பக்க பயணியை மானிட்டர் செய்யும் சிஸ்டம், விஷன் எக்ஸ் ஆர்க்கயூமென்டெட் ரியாலிட்டி ஹெட்ஸ்அப் டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் விலை விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த எக்ஸ்இவி 9எஸ் பேக் ஒன் அபவ் வேரியன்ட் காரின் விலை ரூ19.95 லட்சம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. இது 59kWh பேட்டரி பேக் விலை தான். 79kWh பேட்டரிப பேக் கொண்ட பேக் ஒன் அவப் ரூ21.95 லட்ம் என்ற விலைக்கு அறிமுகமாகியுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்இவிவி 9எஸ் பேக் 2 அபவ் வேரியன்ட்டை பொருத்தவரை 59kWh பேட்டரி பேக் விலை ரூ24.45 லட்சம் என்றும், 79kWh பேட்டரி பேக் விலை ரூ25.45 லட்சம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் பேக் 3 மற்றும் பேக் 3 அபவ் வேரியன்டில் 79kWh பேட்டரி பேக் மட்டுமே கிடைக்கிறது. இதில் பேக் 3 வேரியன்ட் ரூ27.35 லட்சம் என்ற விலையிலும் பேக் 3 அபவ் வேரியன்ட் ரூ29.45 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த காரின் முக்கியமான அம்சமே இதன் ஆப்ரேட்டிங் செலவு தான் இந்த காரை ஒரு கி.மீ இயக்க ரூ1.2 தான் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாராமரிப்பிற்கு ஒரு கி.மீக்கு 40 பைசா தான் செலவு என தெிவித்துள்ளது. பிஸ்னஸ் ஓனர்களுக்க 40 சதவீதம் தேய்மான பலன்கள் கிடைக்கும் எ

இந்த காருக்கான தேர்வுகள் டிசம்பர் 14ம் தேதி துவங்குகிறது. இந்த காருக்கான டெஸ்ட் டிரைவ்கள், 2026 ஜனவரி 5ம் தேதி துவங்குகிறது. இந்த காருக்கான புக்கிங் ஜனவரி 14ம் தேதி துவங்குகிறது. இந்த காரின் டெலிவரிகள் ஜனவரி 23ம் தேதிதுவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இந்த காரை வெளியிடுவதை பலர் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது ரூ20 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இது நிச்சயம் மக்களை கவரும், கிடத்தட்ட பெட்ரோல் காரின் விலைக்கே இந்த கார் வந்துள்ளது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 27, 2025, 10:45 [IST]
English summary
Mahindra xev 9s launch price features specifications details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X