7 பேர் போகலாம், ஒரு கி.மீ பயணிக்க வெறும் ரூ1.2 தான் செலவு!

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்இவி 9எஸ் என்ற காரை பிரிமியம் ஃபேமிலி எலெக்ரிக் காராக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த கார் ஒரு கி.மீ பயணிக்க வெறும் ரூ1.20 தான் செலவாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மட்டுமல்ல இந்த காரை பராமரிக்க ஒரு கி.மீக்கு வெறும் 40 பைசா தான் செலவாகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா வின் எக்ஸ்இவி 9ஸ் காரை அந்நிறுவனம் இங்குளோவ் பிளாட் ஃபார்மில் உருவாக்கியுள்ளது. இந்த காரில் 3 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளது. இதன்படி 59kWh, 70kWh, 79kWh ஆகிய பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளது. இந்த காரில் எல்எஃப்பி பேட்டரி செல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி வழங்கப்படுகிறது.

Mahindra XEV 9S

இந்த பேட்டரியை நீங்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் 20-80 சதவீத பேட்டரிக்கு சார்ஜ் ஏற வெறும் 20 நிமிடம் தான் எடுத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் உள்ள மோட்டார் 210KW பவரை வெளிப்படுத்துகிறது. இது போக 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறுணும் 7 நொடியில் பிக்கப் செய்துவிடும். அதிகபட்சம் 202 கி.மீ வேகத்தில் இந்த கார் சீறி பாயும் திறன் கொண்டது. இந்த காரில் உள்ள டாப் வேரியன்டில் இன்டலிஜெட்ட் அடாப்டிவ் சஸ்பென்சன் சிஸ்டம் இரக்கிறது. இது மல்டி ஸ்டெப் ரீ ஜெனரேட்டிவ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் மல்டிபிள் டிரைவ்மோடுகளும் உள்ளன.

Mahindra XEV 9S

இந்த கார் மொகத்தம் 4076 லிட்டர் மொத்த ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. இதில் முன்பக்கம் 150 லிட்டர் முன்பக்கம் ஃபிரங்க், 527 லிட்டர் பூட் வசதி இருகு்கிறது. இதில் 3வது வரிசை சீட் 5050 ஸ்பிலிட் செய்யப்பட்டுள்ளுது. இதில் வென்டிலேட்டட் சீட்டுகள், பாஸ்மோடு, ஸ்லைடிங் ரெக்லைனிங் ஃபங்சன், விண்டோ, சன் ஷேடு, லேமினேட்டட் அக்கோஸ்டிக் சவுண்ட் இன்சுலேனஷன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இந்த காரில் 12.3 இன்ச் 3 ஸ்கிரீன் செட்டப் இருக்கிறது. இது டேஷ் போர்டு முழுவதும் வழங்கப்பட்டுள்ளுது. இது போக இந்த காரில் ஸ்னாப் டிராகன் 8155 மற்றும் பவர்ஃபுல் 8295 சிட்செட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே அம்சம், 5ஜி கனெக்டிவிட்டி, இன்பில்டு ஓடிடி ஆப்கள், வீடியோ காலிங், டிரைவ் வீடியோ ரெக்கார்டிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

Mahindra XEV 9S

பாதுகாப்பான அம்சங்களை பொருத்தவரை அதிக ஸ்டிஃப்னஸ் கொண்ட பாடி ஸ்டெக்ஷர், பிரேக் பை வயர் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள், இது வேரயன்டை பொருத்து மாறுபடும். இந்த காரில் 6 மற்றும் 7 ஏர்பேக்குகள் உள்ளன. லெவல் 2+ அடாஸ் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரேடார் மற்றும் கேமரா செட்டப், லேன் சென்டரிங் அசிஸ்ட், எமர்ஜென்ஸி ஸ்டியரிங், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன் கிராஸ் டிராஃபிக் அலர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் மார்கெட்டில் ரூ19.95 லட்சம் முதல் ரூ29.45 லட்சம் வரை விற்பனையாகி வருகிறுது. இந்தகார் குறைவான செலவில் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காராக இருக்கிறது. இதன் செலவு குறைவாக இருப்பதால் பலர் இதை வாங்க வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 28, 2025, 22:05 [IST]
English summary
Mahindra xev 9s low running cost 1 2 per km claim
மேலும்... #mahindra #india #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X