சென்னையில் இருந்து கோவை வர வெறும் 87 ரூபாதான் செலவு ஆகுமா! இந்தியாவையே மிரள வைத்த மஹிந்திராவின் புது கார்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S) கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி (7 Seater Electric SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.
இந்த எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 3 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 59 kWh, 70 kWh மற்றும் 79 kWh ஆகியவை ஆகும். இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) முறையே 521 கிலோ மீட்டர், 600 கிலோ மீட்டர் மற்றும் 679 கிலோ மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்துமே மிகவும் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் ஆகும். அத்துடன் 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் அதே 12.3 இன்ச் அளவில் முன் பக்க பயணியின் இருக்கைக்கு முன்பாக ஒரு டிஸ்ப்ளே என இந்த எலெக்ட்ரிக் காரின் டேஷ்போர்டில் மொத்தம் 3 டிஸ்ப்ளேக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இவை தவிர பனரோமிக் சன்ரூஃப், 540 டிகிரி கேமரா, 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், கீ லெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஏஆர் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆட்டோமெட்டிக் ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ரியர் ஏசி வெண்ட்கள் மற்றும் லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி போன்ற வசதிகளும் (Features) இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அத்துடன் 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் அஸிஸ்ட், ரியர் வியூ கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் டீஃபாகர் போன்ற பாதுகாப்பு வசதிகள் எல்லாம் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 19.95 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 29.45 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவை மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு இது மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. எனவே மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் கார், விற்பனையில் சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.
இந்த எலெக்ட்ரிக் காரின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதை இயக்குவதற்கு மிகவும் குறைவாகவே செலவு (Running Costs) ஆகும். எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு வெறும் 1.2 ரூபாய் மட்டுமே செலவாகும் என மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியானால் சென்னையில் இருந்து கோவை வருவதற்கு (சுமார் 510 கிலோ மீட்டர்) சுமாராக 612 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். இது நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 7 சீட்டர் கார் ஆகும். எனவே 7 பேர் சென்னையில் இருந்து கோவை வந்தால், ஒருவருக்கு சுமார் 87 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். இது போன்ற சிறப்பம்சங்கள் இருப்பதால்தான், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் விற்பனையில் சாதனைகளை படைக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் கருதப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் வரும் ஜனவரி 14ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Deliveries) செய்யும் பணிகள் வரும் ஜனவரி 23ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன.


Click it and Unblock the Notifications