நாடே இந்த காருக்காக தான் வெயிட்டிங்! டீசரே பட்டய கிளப்புதே!

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எக்ஸ்இவி 9எஸ் என்ற காரை இந்தியாவில் வரும் 27ம் தேதி விற்பவனைக்கு கொண்டு வருகிறது. இது அந்நிறுவனத்தின் முதல் 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த கார் குறித்த புதிய டீர் ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னணி நிறுவனமாக மாறி வருகிறது. இந்நிறுவனம் 7 சீட்டரில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை வெளியிட தயாராகி வருகிறது. அதன்படி மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்இவி9எஸ் என்ற காரை விற்பனைக்கு கொண்டு வரப்போகிறது.இதுகுறித்த டீசர் வெளியாகியுள்ளது.

Mahindra XEV 9S Teaser

இந்த டீசரின்படி இந்த காரின் லுக் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அந்நிறவனம் வெளியிட்ட எக்ஸ்யூவி.இ8 காரின் லுக் அப்படியே இருக்கிறது. ஸ்டாக்டு ஹெட்லைட் லே அவுட் அப்படியே இருக்கிறது. லைட்டிங் அம்சங்கள் எல்லாம் எக்ஸ்யூவி 700 காரில் உள்ளதை போலவே இருக்கிறது.

இதில் உள்ள எல்இடி டிஆர் எல் பூமராங் வடிவமைப்பில் உள்ளது. பின்ப்க்கம் ஷார்க் ஃபின் ஆண்டனா மற்றம் புதிய மஹிந்திரா லோகோவும் இடம் பெற்றள்ளது. புதிய டெயில் லைட் வடிவமைப்பும் இந்த காரில் அப்படியே உள்ளது. இந்த காரின் உட்பகுதியில் மஹிந்திரா நிறுவனம் டிரிப் ஃபீட் கேபினை வழங்கியள்ளது. இதுபோக பெரிய 3 ஸ்கிரீன் பேனலை வழங்கியுள்ளது.

Mahindra XEV 9S Teaser

தனது எக்ஸ்இவி9இ மற்றும் பிஇ 6 ஆகிய கார்களில் உள்ளதை போல இந்த காரிலும் அதிக டிஜிட்டல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த டீசரில் 3வது வரிசை சீட்டர் குறித்த விபரங்கள் இல்லை இதில் வடிவமைப்பு எப்படி இருக்கிறது என்பது ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

3வது வரிசை சீட் பூட் இட வசதியை குறைக்காமல் கட்டமைப்பை சற்று சவாலான விஷயம் தான். இந்நிறுவனம் இந்த விஷயத்தை சற்று சஸ்பென்ஷாக வைத்துள்ளது. இந்நிறுவனம் இந்த காரை இன்குளோவ் பிளாட்ஃபார்மில் உருவாக்குகிறது. அதனால் இட வசதி குறித்து பெரியதாக கவலைப்பட தேவையில்லை. அதே நேரம் இந்த காரின் டெயில் லைட், மற்றும் ஒட்டு மொத்த லுக்கை பார்க்கும் போது எக்ஸ்யூவி 700 காரின் லுக்கிலேயே உள்ளது.

Mahindra XEV 9S Teaser

இந்த கார் பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய காரை ஒப்ட்டும போது சற்று உயரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற 3 வரிசை வாகனம் ஆகும். இந்த கார் வரும் 27ம் தேதி அறிமுகமாகிறது. இந்நிறுவனத்தின் 3 வது பான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக இந்த கார் களம் இறங்குகிறது. ஏற்கனவே எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ6 ஆகிய கார்கள் சிறப்பாக விற்பனையாகியுள்ளன. இந்த 3 கார்களும் ஒரே மாதிரியான கட்டுமானத்தை கொண்டது.

இந்த காரில் உள்ள பேட்டரி ஆப்ஷனும் எக்ஸ்இவி 9இ காரில் உள்ள அதே பேட்டரி ஆப்ஷன் தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முழு சார்ஜில் 500 கி.மீ வரை பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், பவர்வு மற்றும் வென்டிலேட்டட் சீட்டுகள், மசாஜ் அம்சங்களுடன் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்இவி9எஸ் கார் பாதுகாப்பு அம்சத்திலும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் மக்கள் அதிகம் விரும்பும் வகையில் உருவாக்கப்படுகிறது. குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற கார் என்பதால் விற்பனையும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 15, 2025, 14:45 [IST]
English summary
Mahindra xev 9s teaser upcoming suv design details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X