சென்னைல இருந்து 7 பேர் திருச்சி வர 400 ரூபா கூட செலவு ஆகாது! இன்னோவாவை எல்லாம் அடிச்சு ஓட விட போகும் புது கார்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S) கார், கடந்த சில நாட்களுக்கு முன்னர், அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி (7 Seater Electric SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.

மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் காரில், 3 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 59 kWh, 70 kWh, 79 kWh ஆகியவை ஆகும். இதில், 59 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 521 கிலோ மீட்டர்கள் எனவும், 70 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 600 கிலோ மீட்டர்கள் எனவும், 79 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 679 கிலோ மீட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mahindra XEV 9S

பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதில், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அஸிஸ்ட், ஹைவே அஸிஸ்ட், ஹை பீம் அஸிஸ்ட், அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் மற்றும் ரியர் க்ராஸ் டிராஃபிக் அலர்ட் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுதவிர 7 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், ப்ளைண்ட் வியூ மானிட்டர் உடன் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளையும் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் கார் கொண்டுள்ளது.

Mahindra XEV 9S Front Design

மற்ற வசதிகளை பொறுத்தவரையில், முன் பகுதி டேஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ள 3 திரைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவை 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 12.3 இன்ச் முன் பக்க பயணியின் இருக்கை முன்பாக வழங்கப்பட்டுள்ள டிஸ்ப்ளே ஆகியவை ஆகும்.

இதுதவிர பனரோமிக் சன்ரூஃப், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகளும் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 19.95 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 29.45 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், அதை இயக்குவதற்கான செலவு (Running Costs) மிகவும் குறைவு என்பதுதான். மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி பார்த்தால், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு வெறும் 1.2 ரூபாய் மட்டும்தான் செலவு ஆகும்.

அப்படியானால் சென்னை-திருச்சி இடையேயான சுமார் 330 கிலோ மீட்டர் தொலைவை கடப்பதற்கு வெறும் 396 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். இது 7 பேர் பயணம் செய்ய கூடிய கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே 7 பேர் சென்னையில் இருந்து திருச்சி வந்தால், ஒருவருக்கு சுமார் 56 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். ஆனால் மின்சார கட்டணம், ஓட்டும் விதம் ஆகியவற்றை பொறுத்து, இயக்குவதற்கான செலவு சற்று மாறுபடலாம்.

அதிநவீன சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்டிருப்பதாலும், இயக்குவதற்கு மிகவும் குறைவான செலவே ஆவதாலும், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரை வரும் ஜனவரி 5ம் தேதியில் இருந்து நீங்கள் டெஸ்ட் டிரைவ் (Test Drive) செய்து பார்க்க முடியும்.

அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் வரும் ஜனவரி 14ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன. இதை தொடர்ந்து மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Deliveries) செய்யும் பணிகள் வரும் ஜனவரி 23ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன. எனவே கூடிய விரைவில் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரை, நாம் சாலைகளில் பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிநவீன சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகள், கவர்ச்சிகரமான டிசைன், சிறப்பான டிரைவிங் ரேஞ்ச், இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவு மற்றும் சரியான விலை நிர்ணயம் போன்ற காரணங்களால், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் கார், மிகப்பெரிய வெற்றியை பெறும் என நாங்கள் கருதுகிறோம்.

நேரடி போட்டி இல்லை என்றாலும் கூட, இந்திய சந்தையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) போன்ற கார்களுக்கு எல்லாம், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 6, 2025, 14:35 [IST]
English summary
Mahindra xev 9s test drive bookings and delivery details
மேலும்... #mahindra #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+