ஒரே காருக்குள் இவ்வளவு வசதிகளா? ஒவ்வொரு வேரியன்டிலும் இவ்வளவு வசதிகள் இருக்குதா?

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்இவி 9எஸ் என்ற 3 வரிசை சீட்டர் கொண்ட எலெக்ட்ரிக் காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் பேக் 1 அபவ், பேக் 2 அபவ் மறஅறம் பேக் 3, பேக் 3 அபவ் ஆகிய 4 வேரியன்ட்களில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. ரூ19.45 லட்சம் முதல் இந்த காரின் விலை துவங்குகிறது. இந்நிலையில்இந்த காரில் வேரயன்ட் வாரியிலான விலை விபரங்களை காணலாம் வாருங்கள்.

பேக் ஒன் அபவ்

மஹிந்திரா எக்ஸ் இவி 9இ காரில் பேக் 1 அபவ் வேரியன்டில் 59 மற்றும் 79 KWH பேட்டரிபேக் வழங்கப்பட்டுள்ளுது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர்களும் வழங்கப்படுகிறது. இதில் 180W சார்ஜை வைத்து 79 kWh பேட்டரியை சார்ஜ் செய்தால் 20-80 சதவீத சார்ஜை வெறும் 20 நிமிட்ததில் ஏற்றிவிடும். இதுவே 140 kW DC சார்ஜரை பயன்படுத்தி 59kWh பேட்டரிய பேக்கை சார்ஜ் செய்தால் 20 நிமிடத்தில் சார்ஜ் செய்து விடும். பவரை பொருத்தவரை 210 KW பவரை 79kWhபேட்டரி பேக்கிலும்,. 170 kW பவர் 59kWh பேட்டி பேக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. இது போக எலெக்ட்ரிக் பவர் ஸ்டிரியிங் வேரியபிள் கியர் ரேஷியோவுடன் வழங்கப்பட்டுள்ளுது. இது போக மல்டிலில் டிரைவ் மோடுகள் பூஸ்ட் மோடு உடன் வழங்கப்ப்டடுள்ளது. மல்டி ஸ்டெப் ரீஜெனரேஷன், ஒன் டச் சிங்கிள் பெடல் டிரைவ், விர்ச்வல் இன்ஜின் சவுண்ட் உடன் கூடிய சோனிக் சூட், ஐ லிங்க் முன்பக்க சஸ்பென்சன், 5 லிங்க் பின்பக்க சஸ்பென்சன், எம்டிவி சிஎல் டெக்னாலஜி, ஃப்ரீக்கொன்ஸி டிப்பென்டென்ட்ட டேம்பிங்க், லோ ரோலிங் ரெஸிஸ்டென்ஸ் டயர்கள், க்ரூஸ் கண்ட்ரோல்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

mahindra xev 9s

இதுபோக இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், இலுமினேட் செய்யக்கூடிய லோகோ, பை எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஆர்எல், எல்இடி டெயில் லைட், பரிமியம் ஃபேப்ரிக் , ஸ்டைலிஷ் ஆர்18வீல்கள் ஏரோ கவர்களுடன் வழங்கப்பட்டுள்ளது. பிரிமியம் ஃபினிஷ் செய்யப்பட்ட வெளிப்புற கிளாடிங், கேப் டச் ஸ்விட்ச் மற்றும் கன்சோல், ஆகிய அம்சங்கள் உள்ளது.

இந்த காரில் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், அதிக ஸ்டிஃப்னஸ் கொண்ட பாடிசெல், ஆல்வீல் டிஸ்க் பிரேக்குகள், பிரேக் பை ஒயர் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக் பிரேக் பூஸ்டர், டிரைவர் தூக்கத்தை கண்காணிக்கும் கருவி, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பின்பக்க பார்க்கிங் சென்சார் மற்றும் எச்டி கேமரா, டயர் பிரஷன் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

mahindra xev 9s

தொழிற்நுட்பத்தை பொருத்தவரை 12.3 இன்ச் கொண்ட 3 ஸ்கிரீன் செட்டப், குவால் காம் டிராகன் சிப் செட் 8155, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, சூப்பர்ஃபாஸ்ட் 5ஜி கனெக்டிவிட்டி, முன்பே இன்ஸ்டால் செய்யப்பட்ட ஓடிடி, சோசியல் டியா, நியூஸ் மற்றும் ஷாப்பிங் ஆப்புகள், BYOD இன் கார் எக்ஸ்பிரீயன்ஸ், கனெக்டெட் அம்சங்கள், கேபின் ப்ரீ கூலிங், செட்யூல்டு சார்ஜிங், ரிமோட் கண்ட்ரோல்டு கமெண்ட்ஸ், 4 ஸ்பீக்கர்கள், 2 ட்விக்கர்கள், பில்டு இன் அமேசான் அலெக்ஸா,

இது போக இதில் 2வது வரிசை சீட் ஸ்லைடிங் சீட்களாகவழங்கப்பட்டுள்ளுது. இது 60:40 என ஸ்பிலிட் செய்யப்பட்டுள்ளது. இதில் மல்டிபிள் செட்டப் சாய்வு வதியும் உள்ளது. டிரைவர் சீட் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்ய முடியும், சீட் பெல்ட் உயரத்தையும் அட்ஜெஸ்ட் செய்யலாம். பின்பக்க வைப்பைர் மற்றும் வாஷர், பின்பக்க டிமிஸ்டர், புஷ் ஸ்டார்ட் பட்டன், முன்பக்கம் 150 லிட்டர் இடம் பின்பக்கம் 527 லிட்டர் இட வசதி, முன்பக்க ஸ்டேரேஷில் தன்னில் தேங்கினால் டிரைன் ஆகும் வசதி, மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்த லை வசதி, ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்,ரெயின் சென்சிங் ஸ்மார்ட் வைப்பர்கள், பின்பக்க ஏசி வென்ட்கள், டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டியரிங் வீல், கூல்டு கன்சோல் ஸ்டோரேஜ், 65 W டைப் சி சார்ஜிங் போர்ட்கள், ஸ்மார்ட் கிளைமேட் கண்ட்ரோல், லேமினேட்டட் டோர் கிளாஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

mahindra xev 9s

பேக் 2 அபவ் வேரியன்ட்டை பொருத்தவரை பேக் 1அபவ் வேரியன்டில் உள்ளது போக கூடுதலாக சில அம்ங்கள் உள்ளது அதை இங்கே காணலாம். இதில் 70 kWh பேட்டரி பேக் உள்ளது. இதை 160 kW சார்ஜரில் சார்ஜ் செய்தால் 20-80 சதவீத பேட்டரியை வெறும் 20 நிமிடத்தில் சார்ஜ் செய்துவிட முடியும். மல்டி செட்டப் ரீஜெனரேஷன் மோடு உள்ளது. இது போக ஆர்18 அலாய் வீல்கள், சாஃப்ட் லெதர் கொண்ட உட்புற கட்டமைப்பு, லெதர் சீட் மற்றும் அப்ஹோல்சரி, பாதுகாப்பிற்கு லெவல் 2 அடாஸ், 360 டிகரி கேமரா, பிளைன்ட் வியூ மிரர், முன்பக்க பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

இது போக சோனிக் ஸ்டுடியோ சிறா்டம், 16 ஸ்பீக்கர் கொண்ட ஹார்மன் கார்டன் சிஸ்டம், டால்பி அட்மாஸ், வயர்லெஸ் சார்ஜிங், என்எஃப்சி கீ, வென்டிலேட் செய்யப்ப்டட முன்பக்க சீட்டுகள், 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், ஆட்டோ ஃபோல்டு ஓஆர்விஎம், ஓஆர்விஎம் ஆல்டோ டில்ட், டுயல் ஸோன் ஆட்டோமெட்டிக் டெம்பரேச்சர் கண்ட்ரோல், கோ பயணிகளுக்கான எர்கோ லிவர், விண்ட் ஷீல்டு பகுதியில் ஆட்டோ டிஃபாகர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

பேக் 3 வேரியன்டில் பேக் 2 அபவ் வேரியன்டில் உள்ள அம்சங்கள் அனைத்தும் இடம் பெறும் அது போக கூடுதலாக உள்ள அம்சங்களை பொருத்தவரை இதில் இன்டலிஜென்ட் அடாப்டிவ் சஸ்பென்சன் உள்ளது. இது போக எல்இடி டிஆர்எல் சென்டர் சிக்னேச்சர் லேம்ப், ஸ்டார்ட்அப் லைட்டிலங் ஸ்க்வன்ஸ், லைட் மி அப் ஆம்பியன்ஸ் லைட்டிங், பாதுகாப்பிற்காக 7 ஏர்பேக்குகள், லெவல் 2+ அடாஸ், முன்பக்க பாக் லைட்டுகள், கார்னரிங் லேம்ப், ஆட்டோ பூஸ்டர் லேம்ப்கள், டுயல் வயர்லெஸ் சார்ஜிங், அட்வாஸ்டு ஏர் ஃபில்டரேஷன், உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

பேக் 3 அபவ் வேரயின்ட்டில் பேக் 3 வேரியன்ட் போக கூடுதலாக நைட் டிரையல் லைட்டுகள், ஸ்டியரிங் வீலில் கேப் டச் ஸ்விட்ச், 24 ஜிடிராம் மற்றும் 125ஜிபி ஸ்டோரேஜ் உடன் குவால் காம் 8295 ஸ்னாப் டிராகன் சிப்செட், ஆட்டோ பார்க் அசிஸ்ட், வீடியோ காலிங், டிரைவ் வீடியோ ரெக்கார்டிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் உலகதரமான காராக தயாரிக்கப்பட்டுள்ளது. ஏகப்பட்ட தொழிற்நுட்ப அமசங்களுக்கு மக்களுக்கு பல்வேறு சொகுசு வசதிகளை வழங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் நிச்சயம் மார்கெட்டில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 27, 2025, 16:49 [IST]
English summary
Mahindra xev 9s variant wise features
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X