மதுரையில் ஜல்லிக்கட்டு காளை மாதிரி சுற்றி திரிந்த வித்தியாசமான மஹிந்திரா கார்! அறிமுகத்துக்குமுன் சின்ன டெஸ்ட்

மஹிந்திரா (Mahindra), இந்தியாவில் அதிக பேரால் தேர்வு செய்யப்படும் கார் நிறுவனங்களுள் ஒன்று. கடந்த சில வருடங்களாக எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விஷயத்தில் கூடுதல் முனைப்பு காட்டி வருகிறது. பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) உள்ளிட்டவை மஹிந்திராவில் இருந்து சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்கள் ஆகும். இவற்றை தொடர்ந்து, எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (XUV 3XO) காரையும் எலக்ட்ரிக் வெர்சனில் கொண்டுவர திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி எலக்ட்ரிக் கார் ஒன்று சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் இப்போதுதான் மெல்ல மெல்ல சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆரம்பத்தில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மட்டும் தனியாக ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், கடந்த சில வருடங்களாக எம்ஜி மோட்டார் (MG Motor) மற்றும் மஹிந்திரா நிறுவனங்களும் களத்தில் இறங்கி உள்ளன.

mahindra xuv3xo ev spotted

குறிப்பாக, மஹிந்திரா நிறுவனம் கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து மார்க்கெட்டை அதிர வைத்தது. அவற்றை தொடர்ந்து தனது அடுத்த எலக்ட்ரிக் காரை வடிவமைக்கும் பணியில் மஹிந்திரா ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையில்தான் மதுரை (Madurai)-இல் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி எலக்ட்ரிக் கார் ஒன்று சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் கடந்த 2022இல் எக்ஸ்யூவி400 இவி எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. இது, அந்த சமயத்தில் விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 காரின் எலக்ட்ரிக் வெர்சனாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு மத்தியில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்கிற புதிய காரை மஹிந்திரா அறிமுகம் செய்தது. இது, எக்ஸ்யூவி300 காரின் நியூ ஜென்ரேஷன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது.

mahindra xuv3xo ev spotted

எக்ஸ்யூவி300 கார் அப்டேட் செய்யப்பட்டுவிட்டதால் அதற்கேற்ப எக்ஸ்யூவி400 இவி எலக்ட்ரிக் காரையும் மஹிந்திரா அப்டேட் செய்ய தயாராகி உள்ளது. அதன்படியே தற்போது மதுரையில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி எலக்ட்ரிக் கார் அறிமுகத்திற்கு முன்னதாக சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தில் கார் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்படவில்லை.

காரின் முன்பக்க க்ரில் பகுதி மட்டுமே மறைக்கப்பட்டுள்ளதால், இது எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் என்பது பார்த்தாலே தெரிகிறது. காரின் க்ரில் பகுதி மட்டும் மூடப்பட்டுள்ளதால், இது எலக்ட்ரிக் கார் என்பதை அறிய முடிகிறது. தற்போது நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்களில் காரின் முன்பகுதி மட்டுமின்றி, பின்பகுதியிலும் சில மறைப்புகள் இருப்பதை பார்க்கலாம்.

mahindra xuv3xo ev spotted

எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரில் 34.5kWh மற்றும் 39.4kWh என இரு பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை அப்படியே புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி எலக்ட்ரிக் காரிலும் தொடரப்படலாம். எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரில் பொருத்தப்படும் சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டார் இயக்க ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்குகிறது. காரை சார்ஜ் செய்யும் பகுதியிலும் மாற்றம் இருக்காது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் பொனெட் டிசைன் கொஞ்சம் சுமாராகவே இருந்தது. அதனை எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் மாற்றம் செய்துவிட்டதால், அந்த காரை அப்படியே எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி எலக்ட்ரிக் காராக கொண்டுவருவதில் மஹிந்திராவுக்கு பெரியதாக எந்த வேலையும் இருக்காது. இருப்பினும், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி எலக்ட்ரிக் காரின் அறிமுகத்துக்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கிறோம்.

Source: Team BHP

More from DriveSpark

Article Published On: Tuesday, January 14, 2025, 23:40 [IST]
English summary
Mahindra xuv 3xo ev electric car spotted in madurai tamilnadu
மேலும்... #mahindra #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X