மாருதி, டாடாவின் தூக்கத்தை கெடுத்த மஹிந்திரா! பாக்க ஆடி, பென்ஸ் சொகுசு கார் மாதிரி இருக்கு! ஆனா விலை இவ்ளோதானா

இந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்கள் எவ்வளவு பிரபலம்? என்பதை யாருக்கும் விளக்க வேண்டியதில்லை. புதிய கார் வாங்க செல்பவர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக இருப்பது இந்த ரகத்தை சேர்ந்த கார்கள்தான். ஓரளவிற்கு குறைவான விலையில் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் என்பதுதான் இதற்கான காரணம். வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள காரணத்தால், அனைத்து முன்னணி நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் கார்களை விற்பனை செய்து வருகின்றன. இதில், மஹிந்திராவும் (Mahindra) ஒன்றாகும்.

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) காரை இந்த செக்மெண்ட்டில் விற்பனையில் வைத்துள்ளது. இந்த கார் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் விதிவிலக்கு அல்ல.

Mahindra XUV 3XO

நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7,568 மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 4,003 ஆக மட்டுமே இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் உடன் ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டு ஏப்ரலில், 3,565 மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 89 சதவீத வளர்ச்சி ஆகும். அதாவது விற்பனை கிட்டத்தட்ட அப்படியே இரட்டிப்பாகியுள்ளது. இதன் மூலமாக நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 எஸ்யூவி ரக கார்களின் பட்டியலில் (Top 10 SUV Cars), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ 9வது இடத்தை பிடித்துள்ளது.

Mahindra XUV 3XO Side Design

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் கியா சொனெட் (Kia Sonet) ஆகிய கார்களுக்கு எல்லாம், விற்பனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இந்த காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், பனரோமிக் சன்ரூஃப், 7 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், 80க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகள், தலா 26.03 செமீ அளவில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

அத்துடன் செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகிய வசதிகளும், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அடாஸ் (Advanced Driver Assistance Systems - ADAS) பாதுகாப்பு தொகுப்பும் இந்த காரின் மிகவும் முக்கியமான வசதிகளில் ஒன்றாகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் அதிநவீன வசதிகளை கொண்டது என்பதுடன், அதிக பாதுகாப்பானதும் கூட. பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 2 தரப்பினருக்குமான பாதுகாப்பிலும், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

அத்துடன் செயல்திறன் வாய்ந்த 3 சக்தி மிக்க இன்ஜின் ஆப்ஷன்களையும் (Engine Options) மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் பெற்றுள்ளது. அவை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் TGDi பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆகியவை ஆகும்.

இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் தற்போதைய விலை 7.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையோ 15.79 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிநவீன வசதிகள், பாதுகாப்பு, சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் உள்ளன. அத்துடன் விலையும் சரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த காரின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 13, 2025, 12:05 [IST]
English summary
Mahindra xuv 3xo sales report april 2025 89 per cent growth
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+