இந்த கார் இந்தளவுக்கு விக்கும்னு மஹிந்திராவே நெனச்சிருக்காது! இந்த ரேட்டுக்கு குடுத்தா யார்தான் வாங்காம விடுவா
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO). இந்த காரின் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் மஹிந்திரா நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7,000 எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 3,550 ஆக மட்டுமே இருந்தது.
இது 97 சதவீத வளர்ச்சி ஆகும். சொல்லப்போனால், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் விற்பனை அப்படியே இரட்டிப்பாகியுள்ளது. இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.99 லட்ச ரூபாய் ஆக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 15.56 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் ஆகும். இதில் பெட்ரோல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

மறுபக்கம் டீசல் இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இது அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லாத கார்களில் ஒன்றாகும். இந்த காரின் வசதிகளை பொறுத்தவரையில் தலா 10.25 இன்ச் அளவில் வழங்கப்பட்டுள்ள டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கியமானவை.
இவை தவிர, லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, பனரோமிக் சன்ரூஃப் மற்றும் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் போன்ற வசதிகளையும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் கொண்டுள்ளது. அத்துடன் இது மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும். பாரத் என்சிஏபி (Bharat NCAP) மோதல் சோதனைகளில் பெரியவர்கள், குழந்தைகள் என 2 தரப்பினருக்குமான பாதுகாப்பிலும், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சக்தி வாய்ந்த இன்ஜின், சொகுசு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஆகிய அம்சங்களுடன், விலையும் சரியாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால்தான், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் விரும்பி வாங்குகின்றனர் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
இந்திய சந்தையில் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) ஆகிய கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








