சொகுசு கார்களையே தண்ணி குடிக்க வைக்கும் இந்திய நிறுவனத்தின் கார்! இந்த ரேட்ல இப்படி ஒரு கார்லாம் அபூர்வம்!

இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு (Sub-4m Compact SUV Cars) எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அப்படி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றுதான் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO). இந்திய சந்தையில் சமீப காலமாக மஹிந்திரா நிறுவனம் மிகப்பெரிய எழுச்சியை கண்டு வருகிறது. இதற்கு ஒரு வகையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரும் முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. ஆனால் இது சிறிய அளவிலான சரிவுதான்.

Mahindra XUV 3XO

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மஹிந்திரா நிறுவனம் 8,454 எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 7,861 ஆக குறைந்துள்ளது. இது 7.01 சதவீத வீழ்ச்சி ஆகும். தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 15.56 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Mahindra XUV 3XO Side Design

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் TGDi பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆகியவை ஆகும். அத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை.

இதில், பனரோமிக் சன்ரூஃப், லெவல் 2 அடாஸ், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், 360 டிகிரி சர்ரவுண்ட் கேமரா மற்றும் லெதரேட் இருக்கைகள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஒரு ஸ்டைலான கார் ஆகும். தொழில்நுட்பம் மற்றும் சௌகரியம் என இரண்டும் கலந்து கட்டிய கலவையாக இந்த காரை உருவாக்கியுள்ளனர். அத்துடன் இதன் பிரீமியம் இன்டீரியர்கள், சொகுசு கார் போன்ற உணர்வை வழங்க கூடியவையாக உள்ளன.

இது போன்ற காரணங்களால் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. சொகுசு கார்களை வாங்கும் ஒரு சில பிரபலமான மனிதர்கள் கூட, தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை வாங்குகின்றனர். எனவே சிறிய அளவிலான வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, வரும் மாதங்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என நாங்கள் கருதுகிறோம்.

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் கியா சொனெட் (Kia Sonet) ஆகிய கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ திகழ்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 12, 2025, 23:07 [IST]
English summary
Mahindra xuv 3xo sales report february 2025 7 per cent down
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+