சொகுசு கார்களையே தூக்கி சாப்பிடும் மஹிந்திரா காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம்ல கூட்டம் அலை மோதிகிட்டு இருக்கு!
இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. நாம் இதன்படி பார்த்தால், மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 7,055 எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம், வெறும் 2,072 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் விற்பனையில் 240 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இது மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 7.99 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. மறுபக்கம் டாப் வேரியண்ட்டின் விலையோ 15.56 லட்ச ரூபாய் மட்டுமே.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் கருதப்படுவது ஏன்? என்பதை இனி வரும் பத்திகளில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முதலில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் வசதிகளின் பட்டியலை (Features List) பார்த்து விடலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில், 7 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், க்ரூஸ் கண்ட்ரோல், ட்யூயல் ஸோன் ஏசி, ரியர் ஏசி வெண்ட்கள், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அதே 10.25 இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளும் கூட மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில் ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), அனைத்து வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ப்ளைண்ட் வியூ மானிட்டர் உடன் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் எல்லாம் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் வழங்கப்படுகின்றன.
செயல்திறனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் TGDi பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாகவே 7.99-15.56 லட்ச ரூபாய்க்கு இது மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி பிரெஸ்ஸா (Maruti Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய கார்களுக்கு எல்லாம், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications








