கையில காசு இந்தா மட்டும் போதாது இந்த கார்களை வாங்க எவ்வளவு நாள் தவம் இருக்கனும் தெரியுமா?
4-மீட்டருக்கும் குறைந்தவான நீளம் கொண்ட எஸ்யூவி சந்தையில் ஒரு முக்கியமான காராக மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் இருக்கிறது , விற்பனையின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கண்டுள்ளது, மஹிந்திராவின் மொத்த மாதாந்திர விற்பனையில் சுமார் 15% பங்களிப்பு செய்துள்ளது. ஸ்போர்ட்டி வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுக்கு பெயர் பெற்ற இந்த கார், அதன் முன்னோடியான எக்ஸ்யூவி 300 உடன் ஒப்பிடும்போது அதன் பிரபலம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.
தனது பிரிவில் 6வது இடத்தை பிடித்துள்ள எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ சுமார் 8% மார்கெட் பங்கைக் கொண்டுள்ளது பேஸ் மாடலான எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓயின் எம்எக்ஸ்1 வேரியன்டை புக் செய்து காத்திருப்பவர்களுக்கு, பொறுமை என்பது அவர்கள் பெற்றிருக்க வேண்டிய ஒரு நல்ல குணமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் இருப்பிடத்தைப் பொறுத்து இந்த மாடலுக்கான காத்திருப்பு காலம் ஒரு வருடம் வரை நீடிக்கும். இந்த ஒரு 6-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்ட 1.2 லிட்டர் TCMPFi பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது, இது 112 PS பவர் மற்றும் 200 Nm டார்க் திறனை உருவாக்கும் திறன் கொண்டது.

அதைத் தொடர்ந்து, எம்எக்ஸ்2 வேரியன்ட் உள்ளது. இது ஒரு 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, அது ஒரு 6-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு 117 PS பவர் மற்றும் 300 Nm டார்க் திறனை உருவாக்குகிறது. எம்எக்ஸ்2 வேரியன்ட் காருக்கான காத்திருப்பு காலம் மிக குறைவு தான் சில இடங்களில் உடனடியாக கிடைக்கிறது. சில இடங்களில் 2 வாரங்கள் மட்டுமே காத்திருக்க வேண்டியது வரும்.
எம்எக்ஸ்2 புரோ வேரியன்ட் TCMPFi பெட்ரோல் இன்ஜின் (மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ) மற்றும் டர்போ டீசல் மேனுவல் கியர் பாக்ஸ் ஆகிய 2 ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 10 வாரங்கள் காத்திருப்பு காலத்தில் இருக்க வேண்டும், அதே சமயம் டீசல் வேரியன்ட்கள் மிக விரைவில் கிடைக்கலாம். அதிகபட்சமாக 2 வாரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

எம்எக்ஸ்3 வேரியன்ட், பெட்ரோல் (மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ) மற்றும் டீசல் (மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ) ஆப்ஷன்களில் விற்பனையாகிறது. எம்எக்ஸ்2 புரோவின் காத்திருப்பு காலம் தான் இந்த காருக்கும் இருக்கிறது. எம்எக்ஸ்3 புரோ, காருக்கும் இதே போன்ற காத்திருப்பு காலம் தான் இருக்கிறது.
டாப் வேரியன்ட் மாடல்களுக்கான ஆப்ஷன் கொண்டவர்களுக்கு, AX5 வகை TCMPFi பெட்ரோல் இன்ஜின் (மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ) மற்றும் ஒரு டர்போ டீசல் இன்ஜின் (மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ) ஆப்ஷனுடன் வருகிறது, பெட்ரோல் வேரியன்ட்கள் அதிகபட்சமாக 8 வாரங்கள் காத்திருப்பு காலத்தை கொண்டிருக்கும்.

எனினும், டீசல் எடிசன்கள் மிகவும் எளிதாக கிடைக்கின்றன. அதிகபட்சமாக 2 வாரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். AX5 லக்ஸரி மாடல், இது பிரத்தியேகமாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது, இது 130 PS பவர் மற்றும் 230 Nm டார்க் திறனை உருவாக்கும் திறன் கொண்டது. 0 முதல் 2 வாரங்கள் வரை காத்திருப்பு காலத்துடன் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
AX7 வேரியன்ட்கள், டாப்-ஸ்பெக் AX7 லக்ஸரி மாடல் உட்பட, டர்போ பெட்ரோல் (மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ) மற்றும் டர்போ டீசல் எஞ்சின்களை (AX7 க்கான (மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ) மற்றும் AX7 லக்ஸரிக்கு மேனுவல் மட்டும் ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. எதிர்பார்ப்புள்ள வாடிக்கையாளர்கள் இந்த மாடல்கள் மிகக் குறைந்த காத்திருப்பு நேரத்தை கொண்டிருப்பதால் மகிழ்ச்சியடைவார்கள், பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களுக்கு உடனடி டெலிவரி முதல் அதிகபட்சமாக 2 வாரங்கள் வரை இருக்கும்.
மகிந்திராவின் பிற எஸ்யூவிகளுடன் ஒப்பிடுகையில், சில இடங்களில் 18 மாதங்கள் வரை காத்திருப்பு நேரம் இருக்கும், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ அதன் பெரும்பாலான வகைகளில் ஒப்பீட்டளவில் குறுகிய காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளது. பேஸ் வேரியன்ட் மட்டுமே குறிப்பிடத்தக்க அதிக காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளது. டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட் மற்றும் ஸ்கோடா கைலாக் போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓவின் நிர்வகிக்கக்கூடிய காத்திருப்பு காலம், குறிப்பாக மஹீந்திராவின் வரிசையில் உள்ள பிற மாடல்களுடன் ஒப்பிடும்போது, எஸ்யூவி ஆர்வலர்களுக்கு இது ஒரு கவர்ச்சிகரமான ஆப்ஷனாக மாறியுள்ளது. 0 முதல் 10 வாரங்கள் வரை கிடைக்கும் வேரியன்ட்கள் கொண்ட எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, மார்கெட்டில் தனது வலுவான விற்பனையை தொடர்ந்து நிரூபிக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications









