இப்ப புக் பண்ணா அடுத்த வருஷம் தான் வாங்க முடியும்! அப்படி இந்த கார்ல என்ன இருக்குது?
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மற்றும் எக்ஸ்யூவி 700 எஸ்யூவி கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த காருக்கு அதிகமான டிமாண்ட் இருக்கிறது. 3எக்ஸ்ஓ கார் சமீபத்தில் தான் 1 லட்சம் என்ற மைலே கல்லை எட்டி பிடித்தது. அதுவே எக்ஸ்யூவி 700 கார் 2.5 லட்சம் என்ற மைல் கல்லை எட்டி பிடித்தது. இந்நிலையில் தொடர்ந்து இந்த கார்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதால் இதற்கான காத்திருப்பு காலம் நீடித்துள்ளது. இது குிறத்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனத்தின் இந்த இரண்டு கார்களுக்கு முன்பதிவு குவிந்த நிலையில் அப்பொழுதே அந்நிறுவனம் இந்த கார்களின் தயாரிப்பை அதிரித்தது. இந்த மே மாதம் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய கார்களின் டெலிவரி கிட்டத்தட்ட கடந்த மார்ச் மாதத்தை விட இரு மடங்காக உயர்த்தியுள்ளது. இருந்தாலும் புக்கிங் அதற்கு மேல் குவிந்து வருகிறது.

இந்நிலையில் மஹிந்திரா 3எக்ஸ்ஓ காரின் காத்திருப்பு காலங்கள் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் எம்எக்ஸ் 1 வேரியன்ட் காரை பொருத்தவரை சுமார் 1 ஆண்டிற்கும் மேல் காத்திருப்பு காலம் இருக்கிறது. இந்த கார் ரூ7.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் டீசல் வேரியன்டில் விற்பனையில் இல்லை.
மஹிந்திரா 3எக்ஸ்ஓ எம்2 மற்றும் எம்2 புரோ வேரியன்டை பொருத்தவரை 3 மாதம் வரை பெட்ரோல் வேரியன்ட் காருக்கும் அதிகபட்சம் 1 மாதம் வரை டீசல் வேரயின்ட் காருக்கும் காத்திருப்பு காலம் இருக்கிறது. இந்த கார் ரூ9.54 லட்சம் முதல் 10.64 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

அடுத்ததாக எம்எக்ஸ் 3 மற்றும் எம்எக்ஸ் 3 புரோ வேரியன்ட் மற்றும் ஏஎக்ஸ் 5 ஆகிய கார்கள் பெட்ரோல் வேரியன்டிற்கு அதிகபட்சம் 2 மாதங்கள் வரையிலும், டீசல் வேரியன்ட் காருக்க அதிகபட்சம் 1 மாதம் வரையிலும் காத்திருப்பு காலம் இருக்கிறது. எம்எக்ஸ்3 வேரியன்டை பொருத்தவரை ரூ9.74 லட்சம் முதல் ரூ11.79 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுவே ஏஎக்ஸ் 5 வேரியன்ட் ரூ11.19 லட்சம் முதல் ரூ12.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
அடுத்தாக ஏஎக்ஸ் 5 எல், ஏஎக்ஸ் 7, ஏஎக்ஸ் 7 எல் ஆகிய வேரியன்ட்களில் பெட்ரோல் எடிசன் கார்களுக்கும் , டீசல் வேரியன்ட் கார்களுக்கும் அதிகபட்சம் ஒரு மாதம் தான் காத்திருப்பு காலம் இருக்கிறது. இந்த கார் ரூ12.62 லட்சம் முதல் ரூ15.80 லட்ம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

அடுத்தாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் இஎஸ்பி வேரியன்ட் தவிர மற்ற அனைத்து வ வேரியன்ட் காருகளுக்கும் அதிகபட்சம் ஒரு மாதம் மட்டுமே காத்திருப்பு காலம் இருக்கிறது. இந்த கார் ரூ14.49 லட்சம் முதல் ரூ25.14 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காருக்கு காலத்தில் 2 ஆண்டுகள் வரை கூட காத்திருப்பு காலம் இருந்தது. தற்போது தயாரிப்புகள் அதிகரிக்கப்பட்டு காத்திருப்பு காலம் குறைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகள் நீண்ட கால காத்திருப்பு காலத்திற்கு பெயர் பெற்றதாக இருந்தன. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. குறிப்பிட்ட வேரியன்ட்களுக்கு மட்டுமே காத்திருப்பு காலம் அதிகமாக உள்ளது. மக்கள் அதிகம் விரும்பும் கார்களுக்கு அதிகபட்சம் 1 மாதம் வரை மட்டுமே காத்திருப்பு காலம் இருக்கிறது. இது நிச்சயம் வரவேற்க்கதக்க முன்னேற்றம்.


Click it and Unblock the Notifications









