புது காருக்கு வாயிலயே நுழையாத பெயரை வைக்க போகும் மஹிந்திரா! எப்படி கூப்பிடணும்னு கூட நிறைய பேருக்கு தெரியாது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700). இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எனவே அடுத்த ஆண்டு (2026) தொடக்கத்திலேயே, மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, அதன் பெயர் மாற்றப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த முழுமையான விபரங்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

Mahindra XUV 700 Front View

எக்ஸ்யூவி 1எக்ஸ்ஓ (XUV 1XO), எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3XO), எக்ஸ்யூவி 5எக்ஸ்ஓ (XUV 5XO) மற்றும் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (XUV 7XO) போன்ற பெயர்களை கார்களுக்கு சூட்டுவதற்கு மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பம் செய்திருந்தது. இதில், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற பெயர் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு விட்டது.

அதாவது முன்பு விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV 300) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வரிசையில் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ என்ற பெயர், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு சூட்டப்படலாம் என காடிவாடி தளம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருக்கிறது.

Mahindra XUV 700

அதே நேரத்தில் எக்ஸ்யூவி 1எக்ஸ்ஓ என்ற பெயர் எதிர்காலத்தில் விற்பனைக்கு வரவுள்ள மைக்ரோ எஸ்யூவி ரக காருக்கும், எக்ஸ்யூவி 5எக்ஸ்ஓ என்ற பெயர் எதிர்காலத்தில் விற்பனைக்கு வரவுள்ள மிட்-சைஸ் எஸ்யூவி ரக காருக்கும் சூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது இந்த 2 பெயர்களும் பயன்படுத்தப்படாமல் கூட போகலாம். தற்போதே அதை கணிப்பது சற்று கடினமான விஷயமாகும்.

முன்னதாக மஹிந்திரா நிறுவனம் 3 வரிசைகளை கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது. அதற்குதான் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ என்ற பெயர் பயன்படுத்தப்படும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மஹிந்திரா நிறுவனத்தின் 3 வரிசைகளை கொண்ட முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார், எக்ஸ்இவி 9எஸ் (XEV 9S) என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு விட்டது.

எனவேதான் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ என்ற பெயர், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு சூட்டப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என நாம் உறுதியாக நம்பலாம். அதுவரை நாம் பொறுத்திருப்பது நல்லது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார், இந்திய சந்தையில் மிகவும் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாகும். நிலைமை இப்படி இருக்கும்போது, அதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மஹிந்திரா நிறுவனம் ஏராளமான மாற்றங்களையும் செய்து வருகிறது. எனவே எந்த பெயரில் விற்பனைக்கு வந்தாலும், அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

இங்கே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறோம். மஹிந்திரா கார்களின் பெயரை உச்சரிப்பதில் நிறைய பேருக்கு குழப்பங்கள் உள்ளன. உதாரணமாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் பெயரை ஆங்கிலத்தில் எக்ஸ்யூவி 7 ஹண்ரட் (எழுநூறு என்ற அர்த்தத்தில்), பலரும் உச்சரிக்கின்றனர். இது தவறு. மஹிந்திரா எக்ஸ்யூவி 7டபுள்ஓ என்பதுதான் சரியான உச்சரிப்பு ஆகும்.

அதேபோல் அதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு சூட்டப்படும் என எதிர்பார்க்கப்படும் பெயரை மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ என்று உச்சரிப்பதுதான் சரியானதாக இருக்கும். ஒரு சிலர் நினைப்பது போல், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஜீரோ கிடையாது. இங்கே பெயர்களில் 'O' என்பது ஜீரோ கிடையாது. அதை 'ஓ' என உச்சரிக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 19, 2025, 15:46 [IST]
English summary
Mahindra xuv 700 facelift to be called mahindra xuv 7xo check all details here
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+