இந்தியாவே காத்து கொண்டுள்ள காரின் பெயர் இதுதானா! மாருதி, டாடாவுக்கு எல்லாம் இப்பவே ஒதறல் எடுத்திருக்கும்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700). இதை மஹிந்திரா எக்ஸ்யூவி 7 டபுள் ஓ என உச்சரிக்க வேண்டும். இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை உருவாக்கும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் சமீப காலமாக மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பெயர் மாற்றம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன. அதாவது மஹிந்திரா எக்ஸ்யூவி 700 என்ற பெயருக்கு பதிலாக, மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) என்ற பெயர் சூட்டப்படலாம் என கூறப்பட்டது. தற்போது அந்த தகவலை, மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

Mahindra XUV 700 Side View

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டீசர் வீடியோ (Teaser Video) ஒன்றை மஹிந்திரா நிறுவனம் தற்போது டியூப் (YouTube) தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பெயர் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரானது, வரும் ஜனவரி 5ம் தேதி (January 5) பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரில் ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்படவுள்ளன. இதில், மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) எலெக்ட்ரிக் காரில் இருப்பதை போன்ற 3 ஸ்க்ரீன் செட்-அப் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mahindra XUV 700

அதாவது மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் முன் பக்க டேஷ்போர்டில் 3 திரைகள் வழங்கப்பட்டிருக்கும். இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும். இவற்றுடன் கூடுதலாக முன் பக்க பயணியின் இருக்கை முன்பாகவும் ஒரு திரை வழங்கப்பட்டிருக்கும்.

இதன் உடன், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், ஸ்கை ரூஃப், ஸ்மார்ட் டோர் ஹேண்டில்கள், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகளையும் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரில் நாம் எதிர்பார்க்கலாம்.

பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், 7 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளை எல்லாம் நாம் எதிர்பார்க்க முடியும். மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் தற்போதைய நிலையிலேயே லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு (ADAS - Advanced Driver Assistance Systems) வழங்கப்படுகிறது.

இது இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும். ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பில் ஏராளமான புதிய வசதிகள் கூடுலதாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இன்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே தற்போதைய மாடலில் வழங்கப்படும் அதே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள்தான் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.66 லட்ச ரூபாயாக இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 23.71 லட்ச ரூபாயாக உள்ளது. இவை மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படும் காரணத்தால், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் விலை சற்று உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் வருகை, இந்திய சந்தையில், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் எம்ஜி ஹெக்டர் (MG Hector) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 9, 2025, 18:00 [IST]
English summary
Mahindra xuv 7xo teaser video check all details here
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+