3 லட்சம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க! காஸ்ட்லியா இருந்தாலும் இந்த காரை அதிகம் பேர் வாங்க என்ன காரணம்?

மஹிந்திரா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் காரான எக்ஸ்யூவி 700 கார் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த கார் அறிமுகமானதில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் இந்த காரை வாங்கியுள்ளார்கள். இந்த காருக்க இன்னும் டிமாண்ட் அதிகமாக உள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு தனது ஃபிளாக்ஷிப் காராக எக்ஸ்யூவி 700கா காறை அறிமுகப்படுத்தியது. இந்த கார் அறிமுகமானது முதல் அதிக டிமாண்ட் இந்த காருக்கு இருந்தது. தயாரிப்பை விட புக்கிங் அதிகமாக குவிந்தததால் அந்நிறுவனம் இந்த காரின் தயாரிப்பை அதிகப்படுத்திக்கொண்டே இருந்தது. இருந்தாலும் இந்த காரை புக் செய்தவர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய தேவை இருந்தது.

Mahindra XUV 700 3 lakh Milestone

தற்போது இந்த காருக்கு சில வேரியன்களுக்கு சுமார் 1 ஆண்டு வரை காத்திருப்பு காலம் இருக்கிறது. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இ்நத கார் பிரபலமாகியுள்ளத. இந்த காரின் அப்டேட் வெர்ஷனை இன்னும் மஹிந்திரா நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் புதிய மாடலை அந்நிறுவனம் தயாரித்து சோதனை செய்து வருகிறது. புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் அந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரை சுமார் 3 லட்சம் கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஃபேஸ்லிஃப்ட் மாடல் வந்த பிறகு விற்பனை மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏகப்பட்ட அப்டேட்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டிசைன் அம்சங்களில் அப்டேட்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

Mahindra XUV 700 3 lakh Milestone

தற்போது மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 700 ஃபேஸ்லிஃப்ட் காரை டபிள்யூ616 என்ற கோடு பெயரில் தயாரித்து விற்பனவை செய்து வருகிறது. இதில் டிசைன் அப்டேட்கள் இடம் பெற்றள்ளது. இந்த டிசைன்கள் சமீபத்தில் அறிமுகுமான பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய கார்களின் வடிவமைப்பை ஒத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷார்ப், ஃப்யூச்சரிஸ்டிக் டிசைன் மொழி இதில் பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக கனெக்டெட் எல்இடி செட்டப், அப்டேட் செய்யப்பட்ட கிரில் டிசைன், வீலுக்கு மேல் சதுரமான கிளாடிங் உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக காரின் உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mahindra XUV 700 3 lakh Milestone

இந்த காரின் இன்ஜின் ஆப்ஷன்கள் எல்லாம் அப்படியே தான் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.இந்த காரில் தற்போது 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 200 எச்பி பவரையும் 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மற்றொரு இன்ஜின் ஆப்ஷனாக 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 155-185 எச்பி பவரையும் 360-400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 6 ஸ்பீட மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் இந்திய மார்கெட்டில் ஒரு புரட்சியையே செய்துள்ளது என எதிர்பார்க்கலாம். இந்த காரை புக் செய்தவர்கள் 1 ஆண்டு காலம் காத்திருந்து காரை வாங்கிய சம்பவம் கூட நிகழ்ந்துள்ளது. இது நிச்சயம் மிகப்பெரிய மாற்றம் தான். 3 லட்சம் வீடுகளில் இந்த கார் தற்போது ஒரு குடும்ப உறுப்பினராகவே மாறிவிட்டது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 16, 2025, 13:15 [IST]
English summary
Mahindra xuv700 3 lakh milestone achieved sales record
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X