மொத்த நாடும் எதிர்பார்க்கும் காரை உருவாக்க மஹிந்திரா ஸ்டார்ட்!! யாருக்கும் தெரியாமல் போனா மட்டும் விட்ருவோமா..

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து தற்சமயம் மார்க்கெட்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் எக்ஸ்யூவி700 (XUV700) ஒன்றாகும். ஸ்கார்பியோவுக்கு (Scorpio) அடுத்து அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா காராக எக்ஸ்யூவி700 விளங்குகிறது. முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி500 காருக்கு மாற்றாக, கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடர்ன் மஹிந்திரா எஸ்யூவி காருக்கு ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனாலேயே, எக்ஸ்யூவி700 காரை அப்கிரேட் செய்ய மஹிந்திரா நிறுவனம் தயாராகி வருகிறது.

எக்ஸ்யூவி700 கார் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், இந்த காரை அப்டேட் செய்ய வேண்டிய நேரத்தில் மஹிந்திரா உள்ளது. அதன்படி, மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்கிரேட் வெர்சன் அறிமுகத்திற்காக தயார் செய்யப்பட்டு வருகிறது.

mahindra xuv700 facelift spotted

இந்த நிலையில், அறிமுகத்திற்கு முன்னதாக புதிய எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் கார் சாலையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் பல்வேறு புதிய கார்களின் உருவாக்கத்தில் ஈடுப்பட்டு வருகிறது. புதிய எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) கூட மஹிந்திராவில் இருந்து விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மேலும், அவை சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்படும்போது கேமராவிலும் சிக்கியுள்ளன.

ஆனால், எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்படுவது இதுவே முதல்முறை ஆகும். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தமிழ் யூடியூப் சேனல் (Youtube Channel) ஒன்று வெளியிட்டுள்ளதால், புதிய எக்ஸ்யூவி700 காரின் இந்த சோதனை ஓட்டம் தமிழ்நாடு அல்லது தமிழ்நாட்டிற்கு அருகே உள்ள எல்லையோர பகுதிகள் எங்கேனும் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம்.

mahindra xuv700 facelift spotted

வீடியோவில், மலைகளும், தேயிலை தோட்டங்களும் காட்சியளிப்பதால், ஊட்டி, கொடைக்கானல் அல்லது மூணாறு பகுதியில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருக்கலாம். வாகனத்தின் முழு செயல்படுதிறனை அறிய, சோதனை ஓட்டங்களை இவ்வாறு மலைப்பகுதிகளில் மேற்கொள்வது சமீப காலமாக வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் கூட, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் (Himalayan) பைக்குகள் லடாக்கில் ஆக்ரோஷமான கால சூழலுக்கு மத்தியில் சோதனை செய்யப்பட்டன.

சரி, புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் காருக்கு வருவோம். அடுத்த 2026ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படும் புதிய எக்ஸ்யூவி700 காரின் இந்த சோதனை ஓட்டத்தில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது. காரின் அலாய் சக்கரங்கள் கூட யாருக்கும் தெரிந்துவிட கூடாது என்பதற்காக மறைக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால், காரின் முன்பகுதி, பின்பகுதி மற்றும் உட்பகுதிகளில் மட்டும் சில மாற்றங்கள் கொண்டுவரப்படும். காரின் பக்கவாட்டிலோ அல்லது காரின் நீளம், அகலம், உயரம் உள்ளிட்டவற்றிலோ பெரியதாக எந்த மாற்றமும் இருக்காது. அதேபோல், காரின் மெக்கானிக்கல் பாகங்களிலும் மஹிந்திரா நிறுவனம் கை வைக்க வாய்ப்பில்லை.

இந்த சோதனை ஓட்டத்தில் காரின் அலாய் சக்கரங்களும் மறைக்கப்பட்டுள்ளதால், தற்போதைய எக்ஸ்யூவி700 காரில் இருந்து அலாய் சக்கரங்களின் டிசைனும் மாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை ஓட்டத்தில், புதிய எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பக்கத்தில் விசித்திரமான டிசைனில் ஹெட்லைட்கள் இருப்பதை காணலாம். ஆனால், எங்களுக்கு தெரிந்தவரையில் இந்த ஹெட்லைட்கள் தற்காலிகமானவை ஆகவே இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் கார்களுள், மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் காரும் ஒன்றாகும். முன்னதாக, இந்த புதிய மஹிந்திரா கார் இந்த 2025ஆம் ஆண்டிற்கு உள்ளாகவே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களின் அறிமுகத்தில் மஹிந்திரா கவனம் செலுத்த ஆரம்பித்ததால், இதன் அறிமுகம் தாமதமாகி உள்ளது. எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் என்கிற பெயரில் இல்லாமல், எக்ஸ்யூவி 7எக்ஸ்.ஓ (XUV 7XO) என்கிற பெயரில் இந்த காரை மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, June 16, 2025, 23:59 [IST]
English summary
Mahindra xuv700 facelift spotted while testing for the first time ahead of 2026 launch
மேலும்... #mahindra #mahindra xuv700 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+