மாதத்திற்கு 10 ஆயிரம் பேர் வாங்கும் காரில் இப்படியொரு அப்டேட்டா!! மஹிந்திரா உருவாக்கினாலே அது ஹிட்டு தான்!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாக எக்ஸ்யூவி700 (XUV700) விளங்குகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி700 காரை அவ்வப்போது மறக்காமல் மஹிந்திரா அப்டேட் செய்துவிடுகிறது. அந்த வகையில், எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் (Facelift) காரை உருவாக்கும் பணியில் மஹிந்திரா ஈடுப்பட்டு வருகிறது.
அதன் வெளிப்பாடாக, எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி700 காரின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் முயற்சியாக, அதில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை வழங்க மஹிந்திரா நிறுவனம் தயாராகி வருகிறது. இதற்கிடையில்தான் தற்போது இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த சோதனை ஓட்டத்தில் கார் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டு உள்ளது.
புதிய எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் காரில் ரீடிசைனில் ஹெட்லேம்ப்கள் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட எல்இடி டி.ஆர்.எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, காரின் முன்பக்க கிரில் பகுதியின் டிசைனும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும், பம்பரின் வடிவமும் திருத்தப்பட்டுள்ளது. மற்றப்படி, காரின் பக்கவாட்டில் பெரியதாக எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

எங்களுக்கு தெரிந்தவரையில், புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள் வழங்கப்படலாம். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் காரின் சோதனை ஓட்டம் தொடர்பான வீடியோவில் காரின் முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளை மட்டுமே பார்க்க முடிகிறது. காரின் பின்பகுதியை காண முடியவில்லை. எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் காரின் பின்பக்கத்தில் முன்பக்கத்தை போன்று டிசைன் மாற்றப்பட்ட பம்பர் மற்றும் புதிய எல்இடி லைட்பார் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.
எக்ஸ்யூவி700 காரில் ஏற்கனவே பல்வேறு தொழிற்நுட்ப அம்சங்களை மஹிந்திரா நிறுவனம் வழங்குகிறது. அப்படியிருக்க, புதிய எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் காரில் மஹிந்திராவின் லேட்டஸ்ட் எலக்ட்ரிக் கார்களின் (Electric Cars) தொழிற்நுட்பங்கள் புதியதாக கூடுதலாக வழங்கப்படலாம். குறிப்பாக, கார் தன்னிச்சையாக பார்க் செய்துக் கொள்ளும் வசதி, டிஜிட்டல் சாவி மற்றும் டோல்பி அட்மோஸ் தரத்தில் பிரீமியம் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவற்றை எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் காரில் எதிர்பார்க்கிறோம்.
இவற்றுடன், எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் காரின் டேஸ்போர்டு டிசைனும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் காரின் டேஸ்போர்டிற்கு இணையானதாக எதிர்பார்க்கலாம். மஹிந்திராவின் எலக்ட்ரிக் கார் கான்செப்ட்களில் வழங்கப்பட்ட 3ஆம் வரிசை இருக்கை பயணிகளுக்கான திரை புதிய எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைக்கு பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய கார்களுள் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் காரும் ஒன்றாகும். மஹிந்திரா நிறுவனத்தின் சமீபத்திய எலக்ட்ரிக் கார்களுக்கு ஏகோபித்த வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைத்துள்ளதால், புதிய எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் காரும் மார்க்கெட்டில் பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கிறோம்.
Source: Auto Hindustan (https://auto.hindustantimes.com/)


Click it and Unblock the Notifications








