முதல் நாளிலேயே குவிந்த புக்கிங்! இத்தன ஆயிரம் பேர் இந்த காருக்காக காத்திருந்தாங்களா! டாடா-எம்ஜி கதை முடிஞ்சுது

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) ஆகிய கார் மாடல்கள் இருக்கின்றன. இரண்டும் மின்சாரத்தில் இயங்கும் எஸ்யூவி ரக கார் மாடல்கள் ஆகும். இவற்றிற்கான அதிகாரப்பூர்வ புக்கிங் பணிகள் இன்றைய (பிப்ரவரி 14) தினமே தொடங்கியது. இந்த நிலையிலேயே முதல் நாளிலேயே இந்த இரண்டு கார்களுக்கும் ஆயிரக் கணக்கில் புக்கிங் கிடைத்து இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

30 ஆயிரத்து 179 புக்கிங்குகளே கிடைத்திருக்கின்றன. இது இந்த இரண்டு மின்சார கார் மாடல்களுக்கும் சேர்த்து கிடைத்த புக்கிங் எண்ணிக்கை ஆகும். புக்கிங் தொடங்கிய முதல் நாளிலேயே இந்த அளவிற்கு மிக அதிக எண்ணிக்கையில் இந்த மின்சார கார்களுக்கு புக்கிங் கிடைத்திருக்கின்றது.

Mahindra s new e-car gather 30 179 bookings

இது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. விரைவில் எம்ஜி விண்ட்ஸர் இவி (MG Windsor EV)-யை போலவே மஹிந்திராவின் இந்த எலெக்ட்ரிக் கார்களுக்கும் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV)-க்கு விற்பனையில் விபூதி அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இந்த அபரீதமான புக்கிங் எண்ணிக்கை உள்ளது.

குறிப்பாக, முப்பாதியரத்திற்கும் அதிகமானோர் இந்த காரை புக் செய்ய காத்திருந்தனர் என்பது கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது. இந்த மொத்த புக்கிங்கில் அதிக புக்கிங் எக்ஸ்இவி 9இ மாடலுக்கே கிடைத்திருக்கின்றது. 56 சதவீதம் வரை இதற்கு கிடைத்தவை ஆகும். பாக்கியுள்ள 44 சதவீதம் புக்கிங்கே பிஇ 6-க்கானவை ஆகும்.

குறிப்பாக, உயர்நிலை வேரியண்டான பேக் த்ரீ (Pack Three)-யையே அதிகப்பேர் புக் செய்திருக்கின்றனர். அதாவது, 79 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கைக் கொண்ட வேரியண்டிற்கே மிக அதிக எண்ணிக்கையில் புக்கிங் கிடைத்திருக்கின்றது. 73 சதவீதம் பேரே இந்த பெரிய பேட்டரி பேக் கொண்ட தேர்வை புக் செய்திருக்கின்றனர்.

இதன் வாயிலாக சிறிய பேட்டரி பேக்கைக் கொண்ட வேரியண்டைக் காட்டிலும் பெரிய பேட்டரி பேக் கொண்ட உயர் நிலை தேர்விற்கு நல்ல வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது என்பது உறுதியாகி இருக்கின்றது. இப்போது கிடைத்திருக்கும் மொத்த புக்கிங்கின் மதிப்பு ரூ. 8 ஆயிரத்து 742 கோடி ஆகும்.

வரும் நாட்களில் இந்த மதிப்பு இன்னும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஹிந்திரா நிறுவனம் 79 kWh திறன் கொண்ட உயர்நிலை வேரியண்டுகளின் டெலிவரி பணிகளையே முதலில் தொடங்க இருக்கின்றது. இதனால்தான் இப்போது அதிக பேர் அதை புக் செய்திருப்பார்கள் என யூகிக்க முடிகின்றது.

வருகின்ற மார்ச் மாதத்தின் மத்தியிலேயே இதன் டெலிவரி பணிகள் தொடங்க உள்ளன. ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம் இரண்டு கார் மாடல்களையும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், டெலிவரி பணிகளும் சொன்னதைப் போலவே குறிப்பிடப்பட்ட நாளில் தொடங்கிவிடும் என தெரிகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் இந்த புதுமுக கார்களின் வருகையால் எம்ஜி விண்ட்ஸர் இவி மற்றும் டாடா நெக்ஸான் இவி உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களின் விற்பனையில் பெருத்த பாதிப்பு ஏற்படும் என நம்பப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, February 14, 2025, 22:56 [IST]
English summary
Mahindras xev 9e and be 6 suvs secured 30 179 bookings on the first day
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+