இந்தியாவிலேயே இப்படி ஒரு கார் வருவது இது தான் முதன் முறை! ஆனா இதுக்கு முன்னாடி இப்படி நிறைய கார் சேல்ஸ் ஆகுது!

MG மோட்டார் இந்தியா நிறுவனம் 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் மெஜெஸ்டர் SUV காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் இந்தியாவின் முதல் D+ பிரிவு SUV காராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வாகனம், தற்போதுள்ள D பிரிவு SUVs ஐ விடவும் பெரிய அளவு மற்றும் அந்த வகை கார்களில் இல்லாத வகையில் பல அமைப்பை பொருத்தி எம்ஜி மெஜெஸ்டர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்திய மோட்டார் வாகன மார்கெட்டில் ஒரு புதிய துணைப்பிரிவின் முதல் காராக அறிமுகமாகியுள்ளது.

மெஜெஸ்டர் கார் பாக்ஸியான வடிவமைப்பில் இருக்கிறது, இது குளோஸ்டர் காரை நினைவூட்டுகிறது. இருப்பினும் இது அதன் சிறப்பான ரோடு பிரெஸென்ஸ் பெரியதாக இருக்கிறது. குரோம் ஆபரணங்களை குறைக்க வடிவமைக்கப்பட்ட தனித்துவமான வெளிப்புற அப்டேட்களை கொண்டுள்ளது. முற்றிலும் மறுசீரமைக்கப்பட்ட முன் பக்க கார் ஒரு ராயல்லாக தோற்றத்தை அளிக்கிறது.

MG Majestor SUV

இந்த மாற்றத்தில் பெரிய, கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட க்ரில், குளோஸ்டரின் சிறிய, குரோமுடன் ஃபினிஷ் செய்யப்பட்ட க்ரிலிலிருந்து வேறுபட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட வடிவமைப்பு கூறுகளுடன் இந்த கார் ஒரு போல்டான லுக்கை கொடுக்கிறது.

மெஜெஸ்டரின் உட்புறமும் குறிப்பிடத்தக்க அப்டேட்களைப் பெற்றுள்ளது. இதில் ஒரு புதிய 12.3 இன்ச் ஹேண்ட்ஸ் ஃப்ரீ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஒரு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இந்த மாற்றங்கள் பயனர் விருப்பத்திற்கு ஏற்ப பின்னணி தீம்களுக்கான தனிப்பயனாக்கக்கூடிய ஆப்ஷன்களை வழங்குகின்றன.

MG Majestor SUV

மெஜெஸ்டர் காரில் டிரைவரின் சீட்டில்ல் மசாஜ் செயல்பாட்டுடன் வென்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் சீட்டுகள் உள்ளன. மேலும் இதில் ஒரு பனோரமிக் சன்ரூஃப், உயர் தரமான ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், மல்டி-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஒரு எலெக்ட்ரிக் டெயில் கேட் போன்ற பல்வேறு பிரீமியம் அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை மெஜெஸ்டர் காரில் ADAS அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது. விரிவான பாதுகாப்பு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது, 6-ஏர்பேக்ஸ், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

MG Majestor SUV

இதில் ஹில் டெசென்ட் கன்ட்ரோல், டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் கருவி மற்றும் 360º கேமரா போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் பெருத்தப்பட்டுள்ளன. இந்த விரிவான பாதுகாப்பு தொகுப்பு டிரைவர் மற்றும் பயணிகள் இருவருக்கும் மன அமைதியையும் பாதுகாப்பான பயணத்தையும் உறுதிப்படுத்துகிறது.

இந்த மெஜெஸ்டர் MG க்ளோஸ்டர் காரின் டாப் வேரியண்ட்களில் பயன்படுத்தப்படும் ஒரு வலுவான 2.0 லிட்டர் 4 சிலிண்டர் இரண்டு டர்போ டீசல் என்ஜினைக் கொண்டுள்ளது. இது 216 hp பவர் மற்றும் 479 Nm டார்க்கை வழங்குகிறது, மேலும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பவர் பின் வீல் டிரைவ் செட்டப்பில் பொருத்தப்பட்டுள்ளது, மேம்பட்ட ஆஃப்-ரோடு திறனுக்கான 4×4 ஆப்ஷன், மட்டும் மூன்று லாக்கிங் மோடுகள் (முன், மையம் மற்றும் பின்) கொண்டது.

மெஜெஸ்டரின் வெளிப்புற வடிவமைப்பை மேலும் ஆராய்ந்தால், விவரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. பக்கவாட்டு பகுதியில் பெரிய, ஸ்டைலான அலாய் வீல்கள் மற்றும் ஜன்னல் லைனிங், கதவு கைப்பிடிகள் மற்றும் ORVMs ஆகியவற்றில் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

SUV இன் அதிகமான ஈர்ப்பு தடிமனான போல்டான பாடி, கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட பில்லர்கள், ரூஃப் ரெயிங்கள் மேம்படுத்தப்படுகிறது. பின்புறம் ஒரு குரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட புதிய கனெக்டெட் டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டு எம்ஜி மெஜெஸ்டர் காருக்கு கமெண்டிங்கான லுக்கை கொடுக்கிறது.

விலை நிர்ணயத்தைக் பொருத்தவரை, மெஜெஸ்டர் கார் விலை ரூ. 40 லட்சத்தில் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டாப் வேரியண்ட்களின் விலை ரூ. 45 லட்சம் வரை இருக்கலாம். இந்த விலை நிர்ணய உத்தி, ரூ. 39.57 லட்சத்தில் இருந்து ரூ. 44.03 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்ட குளோஸ்டருக்கு அதிகமான விலையில் விற்பனைக்கு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டி செக்மெண்டில் ஏற்கனவே அதிகமான கார்கள் விற்பனையாகி வரும் நிலையில் பெரிய அளவில் டி+ செக்மெண்டில் முதல் காராக வந்துள்ள இந்த எம்ஜி மெஜெஸ்டர் காரின் அறிமுகம், பெரிய ரக கார் வரிசையை மறுவரையறை செய்து, இந்திய வாடிக்கையாளர்களின் மாறிவரும் விருப்பங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு வாகனமாக உருவாக்கப்பட்டுள்ளது. MG மோட்டார் இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் காராக உருவாக்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 18, 2025, 16:22 [IST]
English summary
MG Motor India has launched the Majestor SUV at the 2025 Bharat Mobility Global Expo, marking the debut of a new D+ segment. Featuring advanced safety, premium comfort, and a powerful 2.0-litre engine, the Majestor aims to set new standards in the large SUV category.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X