இந்தியாவில் தான் யாரும் வாங்க மாட்றாங்க... மேட்-இன்-இந்தியா மாருதி காருக்கு உலகளவில் கிடைக்கும் வரவேற்பு!!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) உலக சந்தையில் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு லட்சம் யூனிட்களுக்கும் அதிகமான ஏற்றுமதியைக் கடந்துள்ள இந்த 5 கதவுகளை கொண்ட 4x4 வாகனம், 'மேக் இன் இந்தியா' (Make In India) தயாரிப்புகளின் உலகளாவிய திறனுக்குச் சான்றாக திகழ்கிறது.

ஆனால், சர்வதேச அளவில் ஜிம்னி அடைந்திருக்கும் இந்த வெற்றி, உள்நாட்டு விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மாறுபட்ட ஒரு வரைப்படத்தைக் காட்டுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு 1 லட்சம் ஜிம்னி வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தாலும், 2023 ஜூலை 7ஆம் தேதியில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, இந்தியாவில் இதுவரை வெறும் 27 ஆயிரத்து 812 ஜிம்னி வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

make-in-india maruti suzuki jimny vehicles exports

இது மொத்த ஏற்றுமதி எண்ணிக்கையில் சுமார் 28% மட்டுமே ஆகும். மாருதி நிறுவனத்தின் மேட்-இன்-இந்தியா ஏற்றுமதி வாகனங்களில், ஃபிரான்க்ஸ் காருக்கு அடுத்தபடியாக ஜிம்னி 5-கதவு மாடல் அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்ட இரண்டாவது மாருதி சுஸுகி வாகனமாக விளங்குகிறது. 2023ஆம் ஆண்டில் ஏற்றுமதி தொடங்கியதில் இருந்து, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஜிம்னி வாகனங்கள் 100 நாடுகளுக்கும் மேல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஜப்பான், மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் சிலி ஆகியவை மேட்-இன்-இந்தியா ஜிம்னி வாகனங்களின் முதல் ஐந்து முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளாகும். கடந்த 2025 ஜனவரியில், 'ஜிம்னி நோமேட்' என்ற பெயரில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே 50,000க்கும் மேற்பட்ட ஆர்டர்களை சுஸுகி பெற்றது. உலகின் மிக உயர்ந்த ரசனையுள்ள கார் சந்தைகளில் ஒன்றான ஜப்பானில், இந்த வரவேற்பு வியக்கத்தக்கது.

make-in-india maruti suzuki jimny vehicles exports

இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் CEO ஹிசாஷி டேக்யூச்சி கருத்து தெரிவிக்கையில், "ஜிம்னிக்கு உலகளவில் அரை நூற்றாண்டு பாரம்பரியம் உள்ளது. ஒரு லட்சம் ஏற்றுமதிகளைக் கடந்தது மாருதி சுஸுகிக்கு பெருமைக்குரிய சாதனை ஆகும். உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

"ஜிம்னியின் வலிமையான ஆஃப்-ரோடு டிஎன்ஏ, நம்பகமான செயல்திறன் மற்றும் சமரசமற்ற தரம் ஆகியவை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. 'மேக் இன் இந்தியா, ஃபார் தி வேர்ல்ட்' என்பதற்கு ஜிம்னி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு" என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் ஜிம்னியின் விற்பனை நிலைமை வேறுபட்டதாக உள்ளது.

make-in-india maruti suzuki jimny vehicles exports

கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் வெறும் 296 ஜிம்னி வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் விற்பனை செய்யப்பட்ட 599 ஜிம்னி வாகனங்கள் மற்றும் 2025 ஆகஸ்ட் மாதத்தில் விற்கப்பட்ட 603 ஜிம்னி வாகனங்கள் உடன் ஒப்பிடுகையில் பாதி எண்ணிக்கைக்கும் குறைவாகும்.

ரூ.12.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையுடன், ஜிம்னியின் உண்மையான 4x4 திறன்கள், ஆஃப்-ரோடு சாகச ஆர்வலர்களை மட்டுமே ஈர்க்கிறது. நகர்ப்புற வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக இது இல்லாதது இந்தியாவில் ஜிம்னியின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும். அதுமட்டுமின்றி, மாருதி கார்கள் என்றாலே சிறந்த மைலேஜ் என்ற எதிர்பார்ப்பு இந்திய வாடிக்கையாளர்களிடையே உள்ளது.

make-in-india maruti suzuki jimny vehicles exports

ஆனால், ஜிம்னியின் மைலேஜ் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஜிம்னியின் மேனுவல் வேரியண்ட்களில் 12.8 கி.மீ/லிட்டர் மைலேஜையும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் 11.8 கி.மீ/லிட்டர் மைலேஜையும் சராசரியாக பெறலாம் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவிக்கிறது. நகர்ப்புற சோதனை ஓட்டங்களில் இதன் என்ஜின் வழங்கும் மைலேஜ் மிகவும் சுமாராக இருப்பது, விற்பனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஜிம்னியின் உண்மையான ஆஃப்-ரோடு திறன்கள் நகர்ப்புற சூழலில் கவனிக்கப்படாமல் போகின்றன என்பதுதான் நாங்கள் சொல்லும் கருத்தாகும். உலகளவில் கொண்டாடப்படும் ஒரு வாகனம், அது தயாரிக்கப்படும் நாட்டிலேயே பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படாதது வியப்பளிக்கிறது. நடைமுறைக்கு ஏற்ப 5 கதவுகள் உடன் உருவாக்கப்படும் போதிலும் இந்தியாவில் ஜிம்னியை பெரியதாக யாரும் கண்டுக் கொள்ளாததற்கு காரணம் என்ன என்பதை அறிந்து அதனை சரிசெய்ய மாருதி சுஸுகி நிறுவனம் முயற்சித்தால்தான், மற்ற நாடுகளை போல உலகின் பெரிய சந்தையான இந்தியாவிலும் அதன் விற்பனை சிறப்பாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 25, 2025, 16:29 [IST]
English summary
Make in india maruti suzuki jimny vehicles exports crossed 1 lakh check all details here
மேலும்... #maruti suzuki #exports #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X