30 கி.மீக்கு மேலே மைலேஜ் தருது! இதுவரை 47 லட்சம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!

மாருதி நிறுவனம் தனது ஆல்டோ காரை விற்பனைக்காக கொண்டு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது.இந்நிலையில் இந்த காரை இதுவரை 47 லட்ம் பேர் வாங்கியளு்ளதாாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.இது குறித்த விரிவானவிபரங்களை காணாலம் வாருங்கள்.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் ஏழைகளும் கார் வாங்கலாம் என்றஎண்ணத்தை ஏற்படுத்தியது மாருதி நிறுவனம் தான். இந்நிறுவனம் குறைந்த விலையில் மிடில் கிளாஸ் மாக்களை குறி வைத்து வாகனங்களை விற்பவனை செய்தது. இதில் மாருதி நிறுவனம் வெளியிட்ட ஆல்டோ என்ற கார் தான் மார்கெட்டிலேயே மிகப்பெரிய ஹிட்டானது.

Maruti Alto

பெரும்பாலும் முதல் தலைமுறையாக கார் வாங்கிய பலர் இந்த மாருதி நிறுவனத்தின் காரை தான் தேர்வு செய்து வருகின்றனர். இந்த கார் இந்தியாவில் ஆட்டோமொல் துறையை பெரிய அளவில் வளர்த்து விட்டது என சொல்லலாம் . இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாக 25 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த காரை இதுவரை 47 லட்சம் பேர் வாங்கிவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாருதி நிறுவனம் குறைந்த விலையிலங் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த ஆல்டோ காரை மட்டுமல்ல இதற்கு முன்னர் சென் என் காரையும், மாருதி 800 என்ற காரையும் விற்பனைக்கு கொண்டு வந்தது. ஆனால் இந்த கார்கள் ஆரம்பத்தில் பிரபலமாக இருந்தாலும் நீண்ட காலம் விற்பனையை பெற முடியவில்லை. இரு கார்களும் ஒரு காலகடத்திற்கு பிறகு விற்பனை குறைய துவங்கியது.

Maruti Alto

ஆனால் ஆல்டோ கார் விற்பனை குறையவில்லை தொடர்ந்து சிறப்பாக விற்பனையாகி வந்தது. இதற்க முக்கியமான காரணம் கிட்டத்தட்ட ஆல்டோ காரின் விலை சென் மற்றும் 800 காரை விட கொஞ்சம் தான் விலை அதிகம் ஆனால் அந்த கார்களை விட வசதிகள் அதிகமாகஇருந்தது. 800 கார் ரூ3.10 லட்சமாக இருந்த போது இந்தகார் ரூ3.52 முதல் ரூ4.4 லட்சமாக விற்பனையாகி வந்தது. இதனால் கொஞ்சம் அதிகம் செய்தாலும் பரவாயில்லை வசதிகளை விரும்பியதால் மக்கள் இந்த காரை தொடர்ந்து வாங்கினர்.

மாருதி சென் மற்றும் 800 ஆகிய கார்கள் மிகவும் குறுகலாக இருந்தது. காருக்குள் இருப்பவர்களுக்கு போதுமான வசதி இல்லாமல் இருந்தது.மற்றும் டேஷ்போர்டு பட்டன்கள் எல்லாம் பேசிக் மாடலில் இருக்கும். ஆனால் ஆல்டோ அந்த குறைகளை எல்லாம் ஒரளவிற்கு சரி செய்திருக்கும். அதன் காரணமாகவும் பலர் இந்த காரை தேர்வு செய்தனர்.

Maruti Alto

கடந்த 2010ம் ஆண்டிற்கு முன்பு வரை ஆல்டோ 800 கார் தான் விற்பனையில் இருந்தது. அந்த இன்ஜினை மாற்றி 1.0 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் உடன் ஆல்டோ கே10 என்ற காரை அந்நிறவமன் அறிமுகப்படுத்தியது. இந்த கார் அந்த காலகட்டத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 800 காரின் இன்ஜின பெர்ஃபார்மென்ஸ் போதவில்லைஎன்ற பேச்சு எழுந்த நிலையில் இ்நத கே10 காரை மக்கள் விரம்ப துவங்கினர். இதனால் ஆல்டோ கார் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கிறது. அதே நேரம் ஆல்டோ 800 காரும் விற்பனையில் இருந்தது.

அப்பொழுது இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் காராக ஆல்டோ கார் மாறியது. இதில் காலத்திற்கு ஏற்ப அப்டேட்கள் எல்லாம் கொண்டு வரப்பட்டன. முக்கிய அப்டேட்டாக இதன் பாதுகாப்பு அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டு ஏர்பேக்குகள் கொண்டு வரப்பட்டன.

அடுத்ததாக இந்த கார் அதிக மைலேஜ் தரும் காராக மாற முக்கியமான காரணம் சிஎன்ஜி ஆப்ஷன் கொண்டு வந்ததுதான். அதிக மைலேஜை விரும்பும் மக்களுக்கு லிட்டருக்கு 30 கி.மீ மைலேஜ் தரும் கார் என்றால் யாருக்கு தான் வேண்டாம் என்பார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆல்டோ கார் பிரபலமான காராக இருக்கிறது. இந்த கார் 25 ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனையில் இருப்பது வரவேற்றக்கதக்கது.இந்த காரை 47 லட்சம் பேர் வாங்கிவிட்டனர். விரைவில் இது 50 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 7, 2025, 19:20 [IST]
English summary
Maruti alto 25 years and 5 million sales milestone
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X