வெறும் ரூ3.87 லட்சத்திற்கு புது காரா? 35 கி.மீ மைலேஜ் தரும் கார் இது!
இந்தியாவில் வரும் செப் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருகிறது. இதனால் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கார் வாங்கும் பலர் தங்கள் முதல் காராக மாருதி ஆல்டோ கே10 காரை வாங்குகிறார்கள். இந்த கார் மார்கெட்டில் என்ன விலைக்கு வருகிறது? இதை வாங்குபவர்களுக்க ஜிஎஸ்டி வரி குறைப்பில் எவ்வளவு பணம் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படும் தகவல்களை காணலாம் வாருங்கள்
இந்தியாவில் ஜிஎஸ்டி வரிகள் எல்லாம் வரும் செப் 22ம் தேதி முதல் குறைகிறது. சிறிய ரக கார்களுக்கு தற்போது உள்ள 28 சதவீத வரி இனி 18 சதவீதமாக குறைக்கப்படும். இதனால் சிறிய ரக கார்களின் விலை கணிசமாக குறையவுள்ளது. இந்நிலையில் மக்கள் பலர் முதல் முறையாக கார் வாங்கும் போது மாருதி நிறுவனத்தின் அல்டோ கே10 என்ற இந்தியாவிலேயே குறைந்த விலை காரை தான் வாங்க நினைக்கிறார்கள்.

இந்த காரின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பலர் இந்த ரக கார்களை வாங்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் மாருதி நிறுவனத்தின் சேர்மன் பார்கவா ஜிஎஸ்டி வரிகுறைப்பை வரவேற்று பேசினார். இதனால் மாருதி நிறுவனத்தின் கார்களின் விலை ஜிஎஸ்டிக்ஏ ஏற்றார் போல் கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மாருதி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதையும் வெளியிடவில்லை என்றாலும், நமக்கு இது குறித்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இதன்படி மாருதி ஆல்டோ கார் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு எவ்வளவு விலையில் விற்பனையாகும் என்ற விபரங்களை காணலாம்.
1.0 லி பெட்ரோல் மேனுவல் காரில் STD (O) வேரியன்ட் கார் தற்போது ரூ4,23,000 என்ற விலையில் விற்பனையாகிறது ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு 3,87,000 என்ற விலையிலும், LXI (O) வேரியன்ட் ரூ4,99,500 என்ற விலையில் தற்போது விற்பனையாகி வருகிறது. இது வரி குறைப்பிற்கு பிறகு ரூ4,57,000 என்ற விலையிலும், VXI (O) வேரியன்ட் ரூ5,30,500 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது வரி குறைப்பிற்கு பிறகு ரூ4,85,300 என்ற விலையிலும் VXI Plus (O) வேரியன்ட் தற்போது ரூ5,59,500 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது வரி குறைப்பிற்கு பிறகு ரூ5,11,800 என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

1.0 லி பெட்ரோல் ஏஎம்டி வெர்னை பொரத்தவரை VXI (O) வேரியன்ட் தற்போது ரூ5,80,500 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது வரி குறைப்பிற்கு பிறகு ரூ5,31,000 என்ற விலையிலும், VXI Plus (O) வேரியன்ட் ரூ6,09,499 என்ற விலையில் தற்போது விற்பனையாகி வருகுிறது. இது வரி குறைப்பிற்கு பிறகு ரூ5,57,600 என்ற விலையிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1.0லி சிஎன்ஜி மேனுவல் கார் LXI (O) வேரயின்டை் தற்போது ரூ5,91,500 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது வரி குறைப்பிற்கு பிறகு ரூ5,41,100 என்ற விலையிலும், VXI (O) வேரியன்ட் தற்போது ரூ6,11,500 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது வரி குறைப்பிற்கு பிறகு ரூ5,59,400 என்ற விலையிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைந்த விலையில் கார் வாங்க பலர் ஆர்வமாக இருக்கும் நிலையில் ஜிஎஸ்டி கறைப்பபால் தற்போது வெறும் ரூ3.87 லட்சத்திற்கே கார்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலர் புதிய காரை வாங்க வாயப்புள்ளது. இதனால் இந்தியாவில் வாகன மார்கெட் மிகப்பெரிய அளவில் விரிவடையும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
