6 மாசத்துல 85 ஆயிரம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க! அப்படி இதுல என்னதான் இருக்குது?

மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் தற்போது காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் விற்பனையில் புதிய சாதனையை படைத்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இந்த கார் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது? என்ன சாதனை படைத்துள்ளது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் தனது பிரெஸ்ஸா காரை அறிமுகப்படுத்தியது முதல் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. இந்த கார் கடந்த சில ஆண்டுகளாக நல்ல விற்பனையை பெற்று வரும் நிலையில் இந்த கார் குறித்த முக்கியமானவ விற்பனை விபரம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த கார் கடந்த 6 மாதத்தில் அதாவது கடந்த ஏப்ரல்முதல் செப்டரம் மாதம் வரை மொத்தம் 84902 வாகனங்கள் விற்பனவையாகியுள்ளது.

Maruti brezza Sales H1 fy 26

அதாவது மாதம் 14150 வாடிக்கையாளர்கள் சராசரியாக இந்த காரை வாங்கியுள்ளனர். இந்த செக்மெண்டில் 2வதாக அதிகம் விற்பனவையான கார் இது தான். முதலிடத்தில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இருக்கிறது. இந்த செக்மெண்டில் ஏகப்பட்ட போட்டி கார்கள் விற்பனையாகி வரகுிறது. மாருதி ஃபிராங்க்ஸ், டாடா பஞ்ச், ஹூண்டாய் வென்யூ, கியா சோனட், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ,ஸ்கோடா கைலாக், மஹிந்திரா தார் ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது.

பிரெஸ்ஸா காரை பொருத்தவரை புதிய தலைமுறை கே சிரீஸ், 1.5 லிட்டர் டுயல் ஜெட் டபிள்யூடி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 103 எச்பி பவரையும் 137 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மூலம் இந்த கார் 20.15 கி.மை மைலேஜை மேனுவல் வேரியன்டிலும், 19.80 கி.மீ மைலேஜை ஆட்டோமெட்டிக் வேரியன்டிலும் வழங்குகிறது.

Maruti brezza Sales H1 fy 26

இந்த காரில் 360 டிகிரி கேமரா, 9 இன்ச் கொண்ட ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இந்த சிஸ்டத்தை சுஸூகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கியுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேவை சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் காருக்குள் அமர்ந்து கொண்டே காரை சுற்றி உள்ள அனைத்து விஷயங்களையும் ஸ்கிரினிலேயே பார்த்துக்கொள்ள முடியும்.

மேலும் இந்த காரில் வயர்லெஸ் சார்ஜிங் டாக்கெட் உள்ளது. இந்த காரில் நீங்கள் பயணிக்கும் போது உங்கள் செல்போனை வயர்லெஸ் முறையில் சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். இது ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் சாப்போர்ட் செய்யும். மேலும் இப்படி சார்ஜ் ஏறும் போது அதிக சூடாகாமல் இருக்க பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் மாருதி கனெக்டிவிட்டி அம்சங்கள் இருக்கிறது. இது பல்வேறு சொகுசு மற்றும் அட்வாஸ்டுடான வசதிகளை வழங்குகிறது.

மாருதி நிறுவனம் இந்த தீபாவளிக்கு இந்த காருக்கு ரூ45,000 வரை பலன்களை வழங்குகிறது. இந்த காருக்கு பெட்ரோல் வேரியன்டிற்கு ரூ10,000 நேரடி கேஷ் தள்ளுபடியாகவும், ரூ35,000 மற்ற தள்ளுபடியையும் வழங்கி வருகிறது. இது போக சிஎன்ஜி வேரியன்டில் மொத்தமே ரூ35,000 வரை தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பில் ரூ43,100 வரை விலை குறைந்தது. இதனால் ரூ 8.69 லட்சம் முதல் ரூ 8.25 லட்சமாக விலை
குறைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி பிரெஸ்ஸா காருக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருக்கிறது. இதனால் நீண்ட ஆண்டுகளாக இந்த கார் விற்பனையாகி வருகிறது.இந்த காரை வாங்க பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். சமீபகாலமாக இந்த காரின் விற்பனவை அதிகமாகியுள்ளது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, October 17, 2025, 19:35 [IST]
English summary
Maruti brezza sales h1 fy26 cross 84902 units in 6 months
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X