இன்னும் ஸ்டாக் காலியாகல! ஏகப்பட்ட தள்ளுபடி குடுத்தும் 173 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க!

மாருதி நிறுவனம் தனது சொடன் காரான சியாஸ் காரின் உற்பத்தியை கடந்த ஏப்ரல் மாத துவக்கத்திலேயே நிறுத்தியதாக கூறப்படும் நிலையில் இதுவரை ஸ்டாக் தீரவில்லை. கடந்த ஜூலை மாதம் கூட இந்த காரின் விற்பனை நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் மிட்சைஸ் செடான் செக்மெண்டில் சியாஸ் என்ற காரை விற்பனை செய்து வருகிறது. நெக்ஸா ஷோரூம் வழியாக இந்த காரை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது இந்நிலையில் இந்த காரின் தயாரிப்பை கடந்த மார்ச் மாதத்துடன் முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

maruti ciaz Sales July 2025

இந்நிலையில் ஸ்டாக்கில் இருக்கும் கார்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்டாக்கை விரைவாக காலியாக்க இந்நிறுவனம் கடந்த மாதம் ரூ45 ஆயிரம் வரை தள்ளுபடிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 173 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் கூட 1028 கார்கள் விற்பனையான நிலையில் ஜூலை மாதம் வெறும் 173 கார்கள் தான் விற்பனையாகியுள்ளது. இந்த கார் ரூ9.41 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் பல்வேறு விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வந்தாலும் பல வேரியன்ட்கள் தற்போது ஸ்டாக் காலியாகிவிட்டது.

maruti ciaz Sales July 2025

கடந்த ஒராண்டாக விற்பனை விபரங்களை பார்க்கும் போது 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 603 கார்களும், ஆகஸ்ட் மாதம் 707 கார்களும், செப்டம்பர் மாதம் 662 கார்களும், அக்டோபர் மாதம் 659 கார்களும், நவம்பர் மாதம் 597 கார்களும், டிசம்பர் மாதம் 464 கார்களும் விற்பனையாகியுள்ளன. 2025ம் ஆண்டை பொருத்தவரை ஜனவரி மாதம் 768 கார்களும், பிப்ரவரி மாதம் 1097 கார்களும், மார்ச் மாதம் 676 கார்களும், ஏப்ரல் மாதம் 321 கார்களும், மே மாதம் 458 கார்களும், ஜூன் மாதம் 1028 கார்களும் விற்பனையாகியிருந்தன.

மாருதி நிறுவனம் இந்த சியாஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பொருத்தியுள்ளது. இது 103 பிஎச்பி பவரையும் 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் மேனுவல் கியரில் 20.65 கி.மீ மற்றும் ஆட்டோமெட்டிக் கியரில் 20.04 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது.

maruti ciaz Sales July 2025

மாருதி நிறுவனம் 20 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது இதில் ஹில்-ஹோல்டு அசிஸ்ட், இஎஸ்பி ஆகிய அம்சங்கள் உள்ளன. இது அனைத்து வேரியன்ட்களிலும் விற்பனையாகி வருகிறது. இதில் டுயல் ஏர்பேக்குகள், பின்பக்க பார்க்கிங் சென்சார், ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்டு சீட்டு ஆங்கர், உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இதில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை கணிசமாக குறைந்துள்ள நிலையில் இந்த காரின் தயாரிப்பை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது. இருக்கும் ஸ்டாக்கை மட்டுமே கிளியர் செய்ய வேண்டும் என்பதால் அதிக தள்ளுபடிகளை வழங்கி வருகின்றனர். படிப்படியாக இந்த கார்களின் ஸ்டாக் காலியானதும் விற்பனையிலிருந்து இந்த கார் நீக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 2, 2025, 11:35 [IST]
English summary
Maruti ciaz sales july 2025 drop to 173 units
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X