ரூ45,000 தள்ளுபடி வழங்கியும் யாருமே இந்த காரை வாங்கல! மாருதிக்கே இந்த நிலைமையா?

மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் விற்பனை செய்யும் ஒரு காரு்கு ரூ45,000 தள்ளுபடி வழங்கியும் ஒருவர் கூட இந்த காரைவாங்கவில்லை என்றால் நம்ப முடிகிறதா? மாருதிக்கா இந்த நிலைமை என உங்களை நினைக்க வைக்கும் வகையில் ஒரு தகவலை தான் உங்களுக்கு வழங்குகிறோம். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் கடந்த மார்ச் மாதம் முதல் தனது சியாஸ் என்ற மிட்சைஸ் செடான் காரின் தயாரிப்பை நிறுத்திவிட்டது. அந்நிறுவனம் விற்பனவை செய்யும் ஒரே மிட்சைஸ் செடான் கார் என்றால் இது தான். இந்த காருக்கான வரவேற்பு மெல்ல மெல்ல குறைந்து விற்பனை வெகுவாக குறைந்துவிட்டதால் இந்த காரின் தயாரிப்பை அந்நிறுவனம் நிறுத்தியது.இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே இந்த காரை விற்பனையிலிருந்து நீக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

Maruti Ciaz

இந்நிலையில் இதுவரை அந்நிறுவனம் விற்பனையிலிருந்து இந்த கார் நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. காரணம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கார்கள் டீலர்ஷிப்பில் அதிகம்இருக்கின்றன. இதனால் இந்த காரை தொடர்ந்து விற்பனை செய்து வருவதாகவே அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு காரை கூட விற்க முடியாத நிலை இருந்தது. அதே போல செப்டம்பர் மாதமும் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மாருதி நிறுவனத்தின் சியாஸ் காரை பொருத்தவரை ஒரு சொகுசு செடான் கார் ஆகும். இந்த கார் ரூ9.41 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் 3 டுயல் டோன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதைன்படி பியர்ல் மெட்டாலிக் ஒப்புலென்ட் ரெட்- பிளாக் ரூஃப், பியர்ல் மெட்டாலிக் கிராடுவர் கிரே - பிளாக் ரூஃப், டிக்னிட்டி பிரெளன் -பிளாக் ரூஃப் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

Maruti Ciaz

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 103 பிஎச்பி பவரையும், 138என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனை கொண்டுள்ளது. மேலும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த கார் மேனுவல் வெர்ஷனில் 20.65 கி.மீ மைலேஜையும், 20.4 கி.மை மைலேஜை ஆட்டோமெட்டிக் வெர்ஷனிலும் வெளியிடுகிறது.

இந்த காரில் 20 விதமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அதன்படி ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் ஆனைத்து வேரியன்ட்களிலும் னாள்ளது. இது போக டுயல் ஏர்பேக், ரியர் பார்க்கிங் சென்சார், ஐஎஸ்ஓ சைல்டு ஃபிக்ஸ் ஆங்கர்கள், ஆண்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

Maruti Ciaz

இந்த காருக்கு கடந்த மாதம் ரூ45,000 வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக ஜிஎஸ்டி வரி குறைப்பில் வேறு இந்த வாகனத்தின் வரிகள் எல்லாம் குறைக்கப்பட்டு விலையும் குறைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் ஸ்டாக்கில் உள்ள காரைகாலியாக்க முடியாமல் அந்நிறுவனம் திண்டாடி வருகிறது. இந்த மாதமும் ரூ45,000 தள்ளுபடிகளை வழங்கியுள்ளது.

டிரைவ்ஸ்பாரக் கருத்து: இந்த காருக்கு வழங்கப்படும் தள்ளுபடி வெவ்வேறு இடங்களுக்கு மாறுபடும். இது அதிகபட்ச தள்ளுபடி தகவல்கள் தான். இந்த காரை நீங்கள் வாங்க விரும்பினால் அருகில் உள்ள டீலர்ஷிப்பை தொடர்பு கொள்ளுங்கள். அங்கு தான் உங்களுக்கு சரியான தகவல்கள் கிடைக்கும். வாகனத்தின் கிடைக்கும் தன்மை குறித்த தகவலும் அங்கு தான் கிடைக்கும். ஸ்டாக் பல இடங்களில் காலியாகிவிட்டால் இந்த கார் பல இடங்களில் கிடைப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 11, 2025, 17:45 [IST]
English summary
Maruti ciaz sep 2025 sales discount rs 45000 offer
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X