20 கி.மீ மைலேஜ் இந்த காரை இனி வாங்க முடியாதா? எல்லாருக்கும் பிடித்த காராச்சே!

மாருதி நிறுவனம் தனது மிட் சைஸ் செடான் காரான சியாஸ் காரின் தயாரிப்பை கடந்த ஏப்ரல் மாதம் முதலே நிறுத்திய நிலையில் இருக்கும் ஸ்டாக்கை மட்டுமே விற்பனை செய்து வந்தது.இதனால் இந்த கார் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்டாக் முற்றிலுமாக தீர்ந்துவிட்டது என புரிந்து கொள்ள முடிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் செடான் கார்களுக்கான மார்கெட் குறைந்து கொண்டே வருகிறது. இந்திய மார்கெட்டில் அனைத்து பிராண்ட்களிலும் செடான் கார்களின் விற்பனை குறைவாக இருக்கிறது. மாருதி நிறுவனம் சியாஸ் என்ற ஒரே ஒரு செடான் காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த காரை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்திருந்தது.

Maruti Ciaz

இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதமே இந்த காரின் தயாரிப்பை நிறுத்திவிட்டது. இந்நிலையில் கையில் ஸ்டாக் இருக்கும் கார்களை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்து வந்தது. ஸ்டாக் கையில் இருந்தததை காலியாக்க இந்நிறுவனம் பல்வேறு தள்ளுபடிகளை வழங்கியது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை விபரங்களை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் மிட்சைஸ் செடான் செக்மெண்டில் அந்நிறுவனம் ஒரு காரை கூட விற்பனை செய்ய வில்லை என பதிவு செய்துள்ளது.

மிட் சைஸ் செடான் செக்மெண்டில் சியாஸ் என்ற ஒரே ஒரு கார் தான் விற்பனையாகி வரும் நிலையில் அந்தசெக்மெண்டில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை என்றால் சியாஸ் கார் விற்பனையாகவில்லை என அர்த்தம். தயாரிப்பு நிறுத்தப்பட்ட பிறகும் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்கள் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது விற்பனை நிறுத்தப்பட்டதால் ஸ்டாக் எல்லாம் தீர்ந்துவிட்டது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

Maruti Ciaz
இந்த கார் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசியாக அப்டேட் செய்யப்பட்டது. இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் விற்பனையாகி வந்தது. இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இந்த கார் 103 பிஎச்பிபவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் 5ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் மேனுவல் கியரில் 20.65 கி.மீ மைலேஜை வழங்கிகறுது. இதுவே ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸில் 20.04 கி.மீ மைலேஜை வழங்குகிறது.

இந்த காரில் 2 விதமான பாதுகாப்புஅம்சங்கள் உள்ளன. இந்த காரில் ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெளபிளிட்டி கண்ட்ரோல், ஆகிய அம்சங்கள் அனைத்து வேரியன்ட்களிலும் விற்பனைக்கு வருகிறது. இதில் டுயல் ஏர்பேக்குகள், ஐஎஸ்ஓ சைல்டுஃபிக்ஸ் ஆங்கர்கள், எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிஃப்யூஷன், ஆண்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து : இந்த கார் நிறுத்தப்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றாலும் இந்த கார் தற்போது ஸ்டாக் காலியாகவிட்டதாகவே தெரிகிறது. அல்லது தற்காலிகமாக தீபாவளிக்காக விற்பவனையை அதிகாரப்பூர்வமற்ற வகையில் நிறுத்தி வைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 3, 2025, 14:05 [IST]
English summary
Maruti ciaz stock ends at dealerships india 2025
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X