3 கார்ல ஒரு கார் இந்த மாடல் தான்! இவ்வளவு மைலேஜ் தருதுன்னா யாருதான் வாங்க மாட்டாங்க?
மாருதி நிறுவனம் கடந்த 2025ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவு அதிக அளவிலான சிஎன்ஜி வாகனங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனம் தயாரித்த ஒட்டு மொத்த வாகனங்களில் 33.6 சதவீதம் சிஎன்ஜி வாகனங்களாக இருந்துள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த 2025ம் நிதியாண்டில் 33 சதவீதத்திற்கும் அதிமான சிஎன்ஜி வாகனங்களை தயாரித்துள்ளது. இதில் பெரும்பாலான சிஎன்ஜி வாகனங்கள் இந்தியாவில் தான் விற்பனையாகியுள்ளது. மாருதி நிறுவனம் 3 கார்களை விற்பனை செய்கிறது என்றால் அதில் ஒரு கார் நிச்சயம் சிஎன்ஜி காராக இருக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாருதி நிறுவனம் கடந்த நிதியாண்டில் மொத்தம் 17,60,765 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் பெட்ரோல் இன்ஜின் கார்கள் 11,48,363 கார்கள்,சிஎன்ஜியில் 5,91,730 கார்கள், ஹைபிரிட்டில் 20,672 கார்கள் விற்பனையாியுள்ளது. இதில் பெப்டரால் கார்கள் 65.2 சதவீதமும், சிஎன்ஜி கார் இதுவரை இல்லாத அளவிற்கு 33.6 சதவீத பங்கை படித்துள்ளன.
மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதமே டீசல் இன்ஜின் கார்களை மொத்தமாக இந்தியாவில் விற்பனை செய்வதை நிறுத்திவிட்டது. அதற்கு பதிலாக அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் கார்களை விற்பனை செய்து வரும் நிலையில் சிஎன்ஜி கார்களுக்கு சமீப காலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

தற்போது இந்தியாவில் விற்பனையாகும் ஒட்டு மொத்த சிஎன்ஜி கார்களில் 70 சதவீதம் இந்த நிறுவனத்தின் கார்கள் தான் உள்ளது. இதில் டாக்ஸி மாடலில் தான் அதிக சிஎன்ஜி கார்கள் விற்பனையாகியுள்ளன. அதே நேரத்தில் தனி நபர் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் கார்களிலும் சிஎன்ஜி கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. சிஎன்ஜி கார்கள், பெட்ரோல், டீசல் இன்ஜின் கார்களுடன் ஒப்பிடும் போது அதிக மைலேஜ், குறைவான விலை உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.
மாருதி நிறுவனத்தில் சிஎன்ஜி கார்களிலேயே அதிகம் விற்பனையான காராக எர்டிகா கார் தான் இருக்கிறது. 1.30 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. அதே நேரம் பெட்ரோல் கார்கள் வெறம் 61,052 கார்கள் விற்பனையாகியிருக்கலாம். அதேபோல பெட்ரோல் காரை விட சிஎன்ஜி கார் அதிகம் விற்பனையாகியுள்ளது வேகன் ஆர் காரில் தான் சிஎன்ஜியில் 1,02,128 கார்களும், பெட்ரோலில் வெறும் 96,323 கார்களும் விற்பனையாகியுள்ளன.

மாருதி நிறுவனம் டிசையர் சிஎன்ஜியில் 89,015 கார்களும், பெட்ரோல் வெர்ஷனில் 76,006 கார்களும் விற்பனையாகியுள்ளன. எக்ஸ்எல் 6 வாகனத்தை பொருத்தவரை 19879 கார்கள் சிஎன்ஜியிலும், 17232 வாகனங்கள் சிஎன்ஜியிலும் விற்பனையாகியுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனமும், ஹூண்டாய் நிறுவனமும் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்து வந்தாலும் அதிக அளவிலான சிஎன்ஜி வாகனங்களை மாருதி நிறுவனம் தான் விற்பனை செய்கிறது. பெட்ரோலுக்கு மாற்றாக மக்கள் சிஎன்ஜி வாகனங்களை வாங்க துவங்கிவிட்டனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









