ஞாயிறு கூட லீவு கிடையாது! வாரத்தில் 7 நாளும் காரை தயாரிக்க மாருதி திட்டம்!
மாருதி நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு ஆர்டர்கள் குவிந்துள்ளன. வாகனம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. இதனால் அதிக எண்ணிக்கையிலான கார்களை தயாரிக்க அந்நிறுவனம் தற்போது ஞாயிறு அன்று கூட விடுமுறை இல்லாமல் வாகனங்களை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வழக்கமாக பண்டிகை காலங்களில் வாகன விற்பவனை அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கூடுதல் போனஸாக மத்திய அரசு வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளது.இதனால் இதுவரை 28 சதவீதத்தில் இருந்த வரி தற்போது சிறிய கார்களுக்கு 18 சதவீதமாக மாறியுள்ளது. பெரிய கார்களுக்கு செஸ் வரியை நீக்கி ஃபிளாட்டாக 40 சதவீதமாக வரி விதிக்கப்படுகிறது. இதனால் சிறிய கார்கள் முதல் பெரிய கார்கள் வரை விலை குறைந்துள்ளது.

கார்களின் விலை குறைந்தததால் இதை வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. மக்கள் பலர் இந்த தருணத்தில் கார் வாங்க தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்த 8 நாளில் 1.65 லட்சம் கார்களை அந்நிறுவனம் விற்று தீர்த்துள்ளது. தொடர்ந்து புக்கிங் அதிக அளவில் வந்து கொண்டிருகு்கிறது.
இதனால் வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப காரின் டெலிவரியை அதிகரிக்க தயாரிப்பு எண்ணிக்கையை மாருதி நிறுவனம் அதிகப்படுத்தியுள்ளது. எந்தளவிற்கு என்றால் ஞாயிறு அன்று கூட விடுமுறை இல்லாமல் வாகனங்களை தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் வாரத்தில் 7 நாட்களும் கார்களை அந்நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த செப்டசம்பர் மாதம் மட்டும் இந்நிறுவனத்தின் விற்பனை 27.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்நிறுவனம் ஒரே மாதத்தில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. இது ஒன்றும் எட்ட முடியாத இலக்கு எல்லாம் கிடையாது. ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு இந்நிறுவனம் 3.50 லட்சம் புக்கிங்கை பெற்றள்ளது. இதில் 1 லட்சம் கார்களை மட்டுமே டெலிவரி வழங்கியுள்ளது. பாக்கியுள்ள 2.5 லட்சம் பேர் தங்கள் காருக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த மாதம் டெலிவரி செய்தாலே இந்த சாதனையை எட்டி விடமுடியும்.
இதற்கிடையில் தீபாவளி வேறு வருவதால் இந்த தருணத்தில் வாகனத்தை டெலிவரி எடுக்க பலர் முயற்சிசெய்வார்கள் என்பதால் இந்த வாகனத்தின் டெலிவரி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த பண்டிகை காலத்தில் மாருதி நிறுவனம் சிறப்பான விற்பனையை பெற்று மிகப்பெரிய அளவு வளர்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வாகனங்களின் ஏற்றுமதி சிறப்பாக இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் இந்நிறுவனம் மொத்தம் 1.89 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் 42,204 வாகனங்கள் இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகியுள்ளது. இது கடந்தாண்டு ஏற்றுமதி எண்ணிக்கையை விட 52 சதவீதம் அதிகம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் இந்த பண்டிகை கால விற்பனையை பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர். மாருதி நிறுவனம் இதில் சிறப்பான விற்பனையை பெற முயற்சி செய்து வருகிறது. நிச்சயம் இதில் நல்ல வளர்ச்சியை இந்நிறுவனம் பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









