6 மாசத்தில் ஒரு லட்சம் வீட்டில் இந்த காரை வாங்கிட்டாங்க! இதுல அப்படி என்ன இருக்குது?

இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு நிறைவடைந்துள்ள நிலையில், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன்படி கடந்த ஆறு மாதமாக எந்த வாகனம் அதிகமாக விற்பனையாகியுள்ளது என்ற விபரம் வெளியாகி உள்ளது. இதில் மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. 6 மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவரை விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் இந்திய மார்க்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இது ஒரு செடான் ரக காராகவும் பல்வேறு வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையில் இந்நிறுவனம் மொத்தம் 1,08,006 டிசையர் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்த கார் தான் கடந்த 6 மாதத்தில் அதிகமாக விற்பனையான நம்பர் ஒன் காராக இருக்கிறது.

Maruti Dzire 1 lakh sales

இரண்டாவது இடத்தில் ஹுண்டாய் நிறுவனத்தின் 99,345 கார்கள் விற்பனையாகியுள்ளன. மூன்றாவது இடத்தில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 89,557 கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த 6 மாத விற்பனையில் முதலிடத்தில் ஒரு தான் இருக்கிறது. இந்தியாவில் செடான் கார் விற்பனை குறைவாக இருந்தாலும் இந்த டிசையர் காருக்கு மட்டும் தனித்துவமான விற்பனை கிடைக்கிறது. இதனால் அதிக நபர்கள் இந்த கார்களை வாங்கி வருகிறார்கள். இந்த காரில் உள்ள அம்சங்கள் தான் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

மாருதி நிறுவனத்தின் டிசையர் காரை பொறுத்தவரை அக்ரஸிவான முன் பக்க பம்பர்கள், ஸ்டைலான எல்இடி ஹெட் லைட்டுகள் மற்றும் அகல வாக்கிலான டிஆர்எல் மற்றும் பெரிய கிரில் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் அதன் வடிவமைப்பு காரணமாகவே பிரபலமாக இருக்கிறது. இதனால் நீண்ட காலமாக இந்த காரின் அடிப்படை வடிவமைப்பை மாற்றாமலேயே மற்ற அம்சங்களை மாற்றி இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதுபோக இந்த காரின் பின்பக்கம் ஷார்க் ஃபின் ஆண்டனா, பூட்லெட் ஸ்பாய்லர், ஒய் வடிவ எல்இடி டெலில் கேட் லைட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

Maruti Dzire 1 lakh sales

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை பேஜ் மற்றும் கருப்பு நிற தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளன. டேஷ்போர்டு பகுதியில் போலியான மரம் போன்ற லுக் கொண்ட டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் டிரைவருக்கு அனலாக் டிஸ்ப்ளேயும் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் க்ரூஸ் கண்ட்ரோல் 9 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் வயர்லெஸ் அம்சத்துடன் இயங்கும் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ பின்பக்க பயணிகளுக்கான ஏசி வெட்டுகள் சிங்கிள் பேண்ட் சர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை பின்பக்க பார்க்கிங் சென்சார் எலக்ட்ரானிக்ஸ் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஸ்டாண்டர்டான ஏர்பேக்குகள் 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இதில் 360 கேமரா கொண்ட செக்மெண்டிலேயே முதல் கார் இதுதான். இது மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

Maruti Dzire 1 lakh sales

மாருதி நிறுவனம் இந்த டிசையர் காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜினை பொருத்தியுள்ளது. இந்த இன்ஜின் தான் ஸ்விஃப்ட் காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் என்பது பிஎச்பி பவரையும் 112 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் உள்ள வேரியண்டை பொருத்தவரை lxi, vxi, zxi மற்றும் zxi + ஆ்கிய வேரியன்ட்கள் உள்ளன. இந்த கார் குளோபல் என்ற பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் பெற்றுள்ளது. இந்த காரின் விற்பனைக்கு இதுவும் முக்கியமான காரணம். இந்த கார் ரூபாய் 6.25 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் கிடைக்கிறது. இந்த கார் விலை குறைவாக இருப்பதாலும் பாதுகாப்பு அதிகமாக இருப்பதாலும் அதே நேரம் மக்களுக்கு ஏற்ற வடிவமைப்பு மற்றும் வசதிகள் இருப்பதாலும் அதிகமாக விற்பனை ஆகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் தற்போது பெரும் போட்டியை சந்தித்து வருகின்றன. டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் ஹூண்டாய் நிறுவனத்தின் மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர் மற்றும் டிசையர் கார் ஆகிய கடும் போட்டியை சந்தித்து வருகின்றன. இதில் டிசையர் கார் கடந்த ஆறு மாதத்தில் அதிகம் விற்பனையான காராக முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த ஆறு மாதத்தில் நிலைமை மாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 22, 2025, 22:30 [IST]
English summary
Maruti dzire 1 lakh sales tops charts in 6 months fy26
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X