சோப்பு டப்பான்னு சொன்னவங்க வாயை மூட வைத்த மாருதி! இந்த காருக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கிடைச்சிருக்கு!
மாருதி நிறுவனம் தனது டிசையர் காரின் பாரத் என்கேப் ரேட்டிங் தற்போது வெளியாகியுள்ளது. இந்த காரின் 4ம் தலைமுறை கார் வெளியாகியுள்ள நிலையில் இந்த கார் பாதுகாப்பான காரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்துள்ளது. இதற்கு பதில் தரும் வகையில் இந்த கார் பாரத் என்கேப் சோதனைக்க உட்படுத்தப்பட்டது.
மாருதி நிறுவனம் தனது டிசையர் காரின் 4ம் தலை முறை காரை தற்போது விற்பனை செய்து வருகிறது. இந்த கார் ஏற்கனவே குளோபல் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த கார் பாரத் என்கேப் சோதனையிலும் உட்படுத்தப்பட்டது. அதன்படி இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. மாருதி நிறுவனத்தில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெறும் முதல் சொடன் கார் இது தான்.

இந்த டிசையர் கார் பாரத் என்கேப் சோதனையில் அடல்ட் ஆக்குபென்ட் புரோடெக்ஷன் மற்றும் சைல்டு ஆக்குபென்ட் புரோடெக்ஷன் என்ற இரண்டு விதமான சோதனைக்கும் உட்படுத்தப்பட்டது. இந்த மாருதி டிசையர் கார் தான் பாரத் என்கேப் சோதனையில் பங்கு பெறும் முதல் கார் ஆகும். இனி இந்த கார் சோதனையில் பெற்ற புள்ளிகள் குறித்த விபரங்களை காணலாம்.
மாருதி டிசையர் காரை பொருத்தவரை பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் மொத்தம் உள்ள 32 புள்ளிகளில் 29.46 புள்ளிகளை பெற்றது. அதே போல குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் மொத்தம் உள்ள 49 புள்ளிகளில் இந்த கார் 41.57 புள்ளிகளை பெற்றது. இந்த கார் கடந்தாண்டு நவம்பர் மாதம் குளோபல் என்கேப் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டது.

தற்போது நடந்த சோதனையில் ஒவ்வொரு சோதனையிலும் இந்த கார் எவ்வளவு புள்ளிகளை பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்பக்க மோதல் சோதனையில் இந்த கார் 16க்கு 14.17 புள்ளிகளை பெற்றது. பக்கவாட்டு சோதனைகளில் இந்த கார் 16க்கு 15.29 புள்ளிகளை பெற்றது. டைனமிக் ஸ்கோரில் மொத்தம் உள்ள 24 புள்ளிகளில் 23.57 புள்ளிகளை பெற்றது.
இது போக சைல்டு ரெஸ்டென்ஸ் சிஸ்டம் இன்டாலேஷனில் மொத்தம் உள்ள 12 புள்ளிகளில் முழுமையாக 12 புள்ளிகளையும் பெற்றது. வெகிஹில் அசெஸ்மென்ட் ஸ்கோரில் 13க்கு வெறும் 6 புள்ளிகளை மட்டுமே பெற்றது. பாதுகாப்பு விஷயத்தில் டிசையர் கார் முன்பக்க மோதலில் முன்பக்க ஏர்பேக், சீட் பெல்ட் ப்ரீடென்ஷன் மற்றும் லோடு லிமிட்டர் ஆகிய அம்சங்கள் சிறப்பாக வேலை செய்தது.

இது போக கால்களுக்கான ஏர்பேக் பக்கவாட்டில் தலைக்கான ஏர்பேக், சிறப்பாக செயல்பட்டது. இது போக பக்கவாட்டில் நெஞ்சு பகுதிக்கான ஏர்பேக், பெல்விஸ் ஏர்பேக்குகள், இந்த காரில் இல்லை. குழந்தைகள் பாதுகாப்பிற்காக ஐஎஸ்ஓ ஆங்கர்கள், சிஆர்எஸ, ஏர்பேக் கட் ஆஃப் ஸ்விட்ச் ஆகிய அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இது போக பாதுகாப்பிற்காக இந்த காரில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட சில அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் சிறப்பாக ரேட்டிங்கை பெற்றது. அந்த காரை வாங்கிய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த காரின் விற்பனை இந்த கிராஷ் டெஸ்ட் சோதனை முடிவுகளுக்கு பிறகு விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். மாருதி நிறுவன தயாரிப்புகள் பாதுகாப்பு குறைவாக இருக்கும் என மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக பேச்சு இருக்கும் நிலையில் இந்த கார் அதை மாற்றியமைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









