மாருதி ஷோரூம்களில் கெத்தாக நிற்கும் புதிய கார்.. தனியா ஒரு இடத்தையே ஒதுக்கிட்டாங்க..

இந்தியாவில் மின்சார கார் (eCar)-களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த பிரிவின் முன்னணி பிராண்டுகளாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) ஆகியவை உள்ளன. இவர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் விரைவில் இ-விட்டாரா (e Vitara) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

இந்த காரை நிறுவனம் ஏற்கனவே நாட்டில் வெளியீடு செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், விலைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில், விலைகளை அறிவித்து அதிகாரப்பூர்வமாக இந்த மின்சார காரை மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இ விட்டாரா தற்போது ஷோரூம்களில் காட்சியளிக்கத் தொடங்கி இருக்கின்றது.

Maruti e vitara arrives at dealerships

Image Courtesy: Priyanko Mukherjee / Facebook இதன் வாயிலாக அடுத்த ஒரு சில நாட்களிலேயே இந்த கார் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஷோரூம்களில் இந்த காருக்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டு அங்கு கெத்தாக அது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பிட்ட சில ஷோரூம்களில் மாருதி சுஸுகி இ விட்டாரா பலூன் போன்ற பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு அது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது.

வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே புதிய இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு வரும் பட்சத்தில் டாடா நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் போன்ற மின்சார கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

இந்தியாவில் இ விட்டாரா மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. டெல்டா, ஜெடா மற்றும் ஆல்ஃபா ஆகியவையே அவை ஆகும். ரூ. 15 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் கார் பிரிவில் போட்டி மிகுந்துக் காட்சியளிக்கின்றது.

இந்த போட்டியை சமாளிக்கும் பொருட்டே சற்றே குறைவான விலையில் மாருதி சுஸுகி இ விட்டாரா விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாருதி சுஸுகி இ-விட்டாரா இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. 61 kWh மற்றும் 49 kWh ஆகியவையே அவை ஆகும்.

இந்த மின்சார காருக்கு தற்போது அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. அதிகாரப்பூர்வ புக்கிங் விலை அறிவிப்பிற்கு பின்னரே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பணியிலேயே மாருதி சுஸுகி களமிறங்கி இருக்கின்றது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது அந்த கார் மாடல் ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

மாருதி சுஸுகியின் இந்த எலெக்ட்ரிக் அதிக பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நிறுவனம், தன்சார்பில் வைத்து இந்த காரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தியதாக கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அக்கார் மோதல் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான அனல் பறக்கின்ற சூழலிலேயே மாருதி சுஸுகி அதன் முதல் எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் பணியில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 27, 2025, 17:45 [IST]
English summary
Maruti e vitara arrives at local dealerships ahead of official launch with impressive features
மேலும்... #maruti suzuki #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+