அடுத்த மாசம் நாடே எதிர்பார்த்த கார் வருது! இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா?
மாருதி நிறுவனம் இந்தியாவில் தனது முதல் இ-விட்டாரா காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கார் வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் காரை வெளியிட தயாராகி வருகிறது. இந்த காருக்கு இ-விட்டாரா என்ற காரை அடுத்த மாதம் வெளியிடவுள்ளது. இந்த காரை அந்நிறுவனம் நெக்ஸா பிராண்டில் கீழ் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் இவி செக்மெண்ட் சிறப்பாக வளர்ந்து வரும் நிலையில் இந்த கார் வருகிறது. இந்த கார் ரூ17 லட்சம் என்ற விலையில் விற்பவனைக்கு வந்துள்ளது.

இந்த கார் சிங்கிள் சார்ஜிங் 543 கி.மீ ரேஞ்ச் தருகிறது. இது ரியல் வேர்ல்டில் எவ்வளவு ரேஞ்ச் தருகிறது என்பது சோதனைக்கு பிறகுதான் தெரியவரும். காரில் 2 எல்எஃப்பி பேட்டரி ஆப்ஷன்களை வைத்துள்ளது. பிஒய்டி நிறுவனத்திடமிருந்து இந்த பேட்டரியை வாங்குகிறது. இந்த காரில் 48.8 kWh பேட்டரி உடன் 144 பிஎஸ் பவர் மறுஅறம் 192.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் மோட்டார் வாங்கப்பட்டுள்ளது. 61.1kWh பேட்டரியில் 174 பிஎஸ் பவர் வெளியிடும் மோட்டார் உடன் வருகிறது. இந்த கார் டிசி ஃபாஸ்ட் சார்ஜருடன் 0-80 சதவீத சார்ஜை 50 நிமிடத்தில் ஏற்றிவிடும்.
இந்த காரின் தயாரிப்பு ஏற்கனவே துவங்கிவிட்டது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஆலையில் இ்நத கார் தயாரிக்கப்படுகிறது. இந்த கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது மட்டுமல்ல வளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த கார் வருவதற்கு முன்பே பொது சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்படுகிறது.

இந்த கார் சிங்கிள் சார்ஜிங் 543 கி.மீ ரேஞ்ச் தருகிறது. இது ரியல் வேர்ல்டில் எவ்வளவு ரேஞ்ச் தருகிறது என்பது சோதனைக்கு பிறகுதான் தெரியவரும். காரில் 2 எல்எஃப்பி பேட்டரி ஆப்ஷன்களை வைத்துள்ளது. பிஒய்டி நிறுவனத்திடமிருந்து இந்த பேட்டரியை வாங்குகிறது. இந்த காரில் 48.8 kWh பேட்டரி உடன் 144 பிஎஸ் பவர் மறுஅறம் 192.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் மோட்டார் வாங்கப்பட்டுள்ளது. 61.1kWh பேட்டரியில் 174 பிஎஸ் பவர் வெளியிடும் மோட்டார் உடன் வருகிறது. இந்த கார் டிசி ஃபாஸ்ட் சார்ஜருடன் 0-80 சதவீத சார்ஜை 50 நிமிடத்தில் ஏற்றிவிடும்.
இந்த காரை அந்நிறுவனம் ஹார்ட்டிரெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கியுள்ளது. இந்த காரில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆப்பிள் கார்பிளே ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இந்த காரில் 10.1 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பவர்டு முன்பக்க சீட்டுகள், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, 7 ஏர்பேக்குகள், கனெக்டெட் கார் சூட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இந்த காரில் லெவல் 2 அடாஸ் அம்சம், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங், முன்பக்க கொலிஷன் வார்னிங், இந்த காரில் 5 ஸ்டார் பாரத் என்கேப் ரேட்டிங் உள்ளது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 31.49 புள்ளிகளை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான சோதனையில் 49க்கு 41 புள்ளிகளை பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அடுத்த மாதம் சுஸூகி இவிட்டாரா கார் விற்பனைக்கு வரும் நிலையில் இந்த கார் நிச்சயம் மார்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Click it and Unblock the Notifications