மாருதியின் முதல் இவிகார்! மோடியே துவங்கி வைக்கிறார் என்றால் சும்மாவா?

பிரதமர் மோடி மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இவிட்டாரா காரை ஆகஸ்ட் 26 அறிமுகப்படுத்துவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் இந்த விழா நடக்கிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வரும் நிலையில் இந்த கார் தற்போது மாருதி நிறுவனத்தால் விற்பனைக்கு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. இந்த கார்கள் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள நிலையில் மாருத நிறுவனமும் இதில் தனது காலடி தடத்தை பதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் இ்நதியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் இவி காரான இ-விட்டாரா காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

Maruti e Vitara Assembly Line

இதன்படி வரும் 26ம் தேதி பிரதமர் மோடி இந்த காரை குஜராத்தில் உள்ள சுஸூகி நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் வைத்து துவக்கி வைக்கிறார். இந்த கார் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இந்த கார்கள் மக்கள் மத்தயில் நன்மதிப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி ஹைபிரிட் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்கும் பேட்டரி எலெக்ட்ரோட்ஸ் ஆலையையும் துவக்கி வைக்கிறர். இ-விட்டாரா காரின் அசெம்பிளி லைனையும் துவக்கி வைக்கிறார். பிரதமர் மோடி துவக்கி வைத்ததும். இங்கு வாகனங்களின் தயாரிப்பு துவங்கப்படும். தீபாவளியை ஒட்டி இந்த கார்கள் எல்லாம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maruti e Vitara Assembly Line

மாருதி இ-விட்டாரா கார் கடந்த 2025ம் ஆண்டு பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டு சுமார் 7-8 மாதங்களான நிலையில் தற்போது இந்த கார் தயாரிப்புக்க வருகிறது. இந்த கார் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி ஐரோப்பா மற்றும் ஜப்பான் மார்கெட்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த காரில் 18 இன்ச் அலாய் வீல்கள், அட்வாஸ்டு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட், 10 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட்டுகள், 10.1 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்லைடிங் மற்றும் ரிக்லைனிங் செய்க்கூடிய பின்பக்க சீட்டுகள், 7 ஏர்பேக்குகள், அடாஸ் தொழிற்நுட்பம், 10.25 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆகிய அம்சங்கள் உள்ளன.

Maruti e Vitara Assembly Line

பேட்டரிய தயாரிப்பை பொருத்தவரை தோஷிபா, டென்ஸோ, மற்றும் சுஸூகி ஆகிய நிறுவனங்கள் இணைந்து டிடிஎஸ் என்ற லித்தியம் அயான் பேட்டரி தயாரிப்பு ஆலையை உருவாக்கியுள்ளது. இந்த ஆலையில் ஹைபிரிட் பேட்டரி எலெக்டரோடுகள் தயாரிக்கப்படுகிறது. இந்த பேட்டரியை வைத்து அந்நிறுவனம் 80 சதவீதமான பேட்டரியை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலேயே எலெக்ட்ரிக்க கார்களை தயாரிப்பது இந்தியாவிற்கு வளர்ச்சியை தரும் விஷயம் தான். இந்நிலையில் இந்தியாவில் ஹைபிரிட் கார்களுக்கான பேட்டரிய தயாரிப்பு சிறப்பான விஷயம் தான். இதனால் காரின் விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். பிரதமர் மோடியே துவக்கி வைக்கிறார் என்றால் நிச்சயம் இந்த திட்டம் எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, August 25, 2025, 7:00 [IST]
English summary
Maruti e vitara assembly line launch by pm modi first ev
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X