ஒன்னில்ல, ரெண்டில்ல மொத்தமா 100 நாடுகள் இந்தியாவ நம்பியிருக்க போகுது! மாருதியால கிடைக்க போகும் பெருமை!!

இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) கார் மாடல் இருக்கின்றது. இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் எஸ்யூவி ரக கார் (SUV Electric Car) மாடல் ஆகும். இந்த கார் மாடல் இந்தியாவில் நடப்பு ஏப்ரல் மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகமாகிவிடும் என உறுதியாக நம்பப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், நிறுவனத்தின் செயல்கள் அனைத்தும் இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.

குறிப்பாக, சமீபத்தில் இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக இ விட்டாராவை ஷோரூமுக்கு அனுப்பி வைத்த சம்பவம் போட்டியாளர்களை கதறவிடும் வகையில் அமைந்தது. மாருதி சுஸுகி இந்த இ-காரே இந்தியாவிற்கான முதல் மின்சாரத்தில் இயங்கும் கார் மாடல் என்பது கவனிக்கத்தகுந்தது.

Maruti e vitara side view

இதுமட்டுமல்ல இந்தியாவே இந்த காரை பெறவிருக்கும் முதல் நாடும் ஆகும். இதற்கு பின்னரே உலகின் மற்ற நாடுகள் இந்த கார் மாடலைப் பெற இருக்கின்றது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவிலேயே இந்த காரின் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

மேலும், இங்கிருந்தே இ விட்டாரா கார் உலகின் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. அந்தவகையில், இந்தியாவில் இருந்து உலகின் 100 நாடுகளுக்கு இ விட்டாரா ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. உலகின் 100 நாடுகள் இந்தியாவில் இருந்தே இ விட்டாரா ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

Maruti e vitara rear

எனவே இந்த 100 நாடுகளும் இ விட்டாராவிற்காக இந்தியாவையே நம்பியிருக்கப் போகின்றன என்பது இப்போது தெரிய வந்திருக்கின்றது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்தே இ விட்டாரா ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. நம் நாட்டில் ஏற்கனவே பலதரப்பட்ட கார் மாடல்களை மாருதி சுஸுகி உலக நாடுகளுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றது.

ஃப்ரான்க்ஸ், ஜிம்னி, பலினோ, ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் உள்ளிட்ட கார் மாடல்களையே அது ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையிலேயே விரைவில் இ விட்டாராவையும் மாருதி சுஸுகி இணைக்க உள்ளது. சென்ற ஆண்டில் மட்டும் 3 லட்சம் யூனிட்டுகள் வாகனங்களை மாருதி சுஸுகி ஏற்றுமதி செய்திருந்தது என்பது கவனிக்கத்தகுந்தது.

Maruti e vitara to export to 100 countries

இ விட்டாராவின் உற்பத்தி பணிகள் தொடங்கப்படும் எனில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது. இ விட்டாரா ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் கார் ஆகும். குறிப்பாக, இந்த காரில் 10.25 அங்குல டச் ஸ்கிரீன், 10.1 அங்குல அளவிலான டிரைவருக்கான திரை மற்றும் பிரீமியம் சவுண்டு சிஸ்டம் உள்ளிட்டவை இடம் பெற இருக்கின்றன.

இதுமட்டுமல்ல 10 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவருக்கான இருக்கை, பன்முக வண்ணங்களில் ஒளிரக் கூடிய ஆம்பியன்ட் லைட், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களையும் இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் தன்னுள் தாங்கியிருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதுமட்டுமல்ல, லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் 7 ஏர் பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் இந்த கார் மாடல் கொண்டிருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், மாருதி சுஸுகி தயார் செய்திருக்கும் இ விட்டாரா அதிக பாதுகாப்பான அம்சங்கள் மற்றும் அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய இ காராக இருக்கும் என்பது சந்தேகமும் இன்றி தெரிய வந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி இ விட்டாரா விற்பனைக்கு வர இருப்பது டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இதற்கு மட்டுமல்ல ஹீண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் கார் மாடலுக்கும் இதன் வருகை பெருத்த தலைவலியை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 1, 2025, 23:33 [IST]
English summary
Maruti e vitara electric suv to be exported to nearly 100 countries after its launch in india
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X