30 நாள் வெயிட் பண்ணா போதும்! டிசம்பரில் உறுதியா வருதுன்னு இவரே சொல்லிட்டாரே!

மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காராக இ-விட்டாரா என்ற காரை களம் இறக்க திட்டமிட்ட வருகிறது. இந்த காரை விற்பனைக்கு கொண்டு வருவதில் அந்நிறுவனம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது இந்த காரின் வருகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் நீண்ட நாட்களாக மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்து. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உலகம் முழுவதும் மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மக்கள் அதிகமாக நகர்ந்து வருகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதிநிறுவனம் இதுவரை எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்கவில்லை. இந்தியாவில் மற்ற நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன விற்பவனையில் தனது ஆதிக்கத்தை செலுத்த துவங்கிவிட்டது.

Maruti e-Vitara

இந்நிலையில் மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காராக இ-விட்டாரா காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்தாண்டு துவக்கத்தில் நடந்த குளோபல் மொபிலிட்டி கண்காட்சியில் இந்த காரை அந்நிறுவனம் காட்சிப்படுத்தியது. அதன் பிறகு எப்பொழுஐது விற்பவனைக்கு வரும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. பல்வேறு முறை திட்டமிடப்பட்டது. பின்னர் தேதி தள்ளி போனது. இந்த காருக்கு ஏற்பட்ட சாஃப்ட்வேர் பிரச்சனைகள், ரேர் எர்த் மேக்னட் பிரச்சனையால் அறிமுகம் தள்ளி போது.

இந்நிலையில் மாருதி நிறுவனம் தனது முதல் அரையாண்டிற்கான நிதி அறிக்கையை வெளியிட்டது. அப்பொழுது மாருதி இ-விட்டாரா கார் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ ஹிஷாஷி டேக்குச்சு என்பவர் தெரிவித்துள்ளது. உயர் மட்ட அதிகரரியே இதை தெரிவித்துள்ளதால் இந்த முறை நிச்சயம் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maruti e-Vitara
இந்த இ-விட்டாரா காரை அந்நிறுவனம் குஜராத்தில் உள்ள ஆலையில் தயாரிக்கிறது. இந்த காரின் தயாரிப்பு ஏற்கனவே துவங்கிவிட்டது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாக துவங்கிவிட்டன. இதுவரை 7000 கார்கள் ஏற்றுமதியாகிவிட்டது. இங்கிலாந்து தான் அதிக அளவிலான கார்களை வாங்கியுள்ளது. சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் இந்த இவி காரில் 2 விதமான பேட்டரி பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி 49kwh மற்றும் 61kWh ஆகிய பேட்டரி பேக்குகள் வழங்கப்பட்டள்ளன.

இதில் முன்பக்க வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆகிய 2 விதமான செட்டப்கள் உள்ளது. இதில் முன்பக்க வீல் டிரைவ் செட்டப்பில் 144 எச்பி பவர் வெளியிடப்படும். ஆல் வீல் டிரைவ் செட்டப்பில் 174 பிஎச்பி பவர் வெளியிடப்படுகிறது. இதில் ஆல்வீல் டிரைவ் செட்டப்பில் பெரிய பேட்டரியும், முன்பக்க வீல் டிரைவ் செட்டப்பில் சிறிய பேட்டரியும் இருக்கும்.

இதில் முன்பக்க வீல் டிரைவ்வில் பெரிய பேட்டரி ஆப்ஷன் உடன் வரும் கார் இருப்பதிலேயே அதிக ரேஞ்சான 428 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. அதே நேரம் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலம் இயங்கும் கார் 394 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. என்ட்ரி லெவல் வேரியன்டான 49kwhபேட்டரி முன்பக்க வீல் வேரியன்ட் 344 கி.மீ ரேஞஅசைவழங்குகிறது. இந்தியாவிற்கு இந்த கார் வரும் போது முன்பக்க வீல் டிரைவ் சிஸ்டத்தில் பெரிய பேட்டரி பேக் உடன் வரும் என்றும் குறைந்தது 500 கி.மீ ரேஞ்சை தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ20-25 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த கார் மார்கெட்டில் உள்ள டாடா கர்வ், எம்ஜி இசட் எஸ் இவி, ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக், மஹிந்திரா பிஇ6 ஆகிய கார்களுக்க போட்டியாக விற்பனைக்கு வரும். இந்த கார்களும் கிட்டத்தட்ட இதே விலையில் தான் விற்பனைக்க கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மாருதி போன்ற மக்கள் நம்பிக்கையை பெற்ற நிறுவனங்கள் இவி மார்கெட்டிற்குள் வந்தால் இந்த மார்கெட்டே மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கலாம். இதனால் நாட்டிற்கு மிகப்பெரிய வளர்ச்சி கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 1, 2025, 11:50 [IST]
English summary
Maruti e vitara india launch in december
மேலும்... #maruti suzuki #india #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+