மாருதி இ-விட்டாராவுக்காக காத்திருக்கீங்களா!.. உங்களோட கனவு நிறைவேறுவதற்கான நேரம் இன்னும் தள்ளி போயிருச்சு!

இந்தியர்கள் பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக மாருதி சுஸுகி இ-விட்டாரா (Maruti Suzuki e-Vitara) உள்ளது. இதுவே இந்தியாவிற்கான மாருதியின் முதல் மின்சார கார் மாடல் ஆகும். இந்த காரை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025)-இல் வைத்தே முதல் முறையாக அது காட்சிப்படுத்தியது. அப்போதே பலரின் கவனத்தை இ-விட்டாரா கவர்ந்துவிட்டது. இந்த நிலையிலேயே இ-விட்டாரா 2025 மார்ச் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்கிற தகவல்கள் வெளியாகின.

இதை உறுதிப்படுத்தும் விதமாக ஷோரூம்களுக்கு இந்த காரை அனுப்பி வைக்கும் பணிகளையும் மாருதி சுஸுகி தொடங்கியது. ஆனால், இப்போது வரை அது அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலையிலேயே இந்த காரின் வருகைக்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் என்கிற அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Maruti e-vitara india launch pushed to september 2025

வருகின்ற செப்டம்பர் மாதத்திலேயே இ-விட்டாரா விற்பனைக்கு அறிமுகமாகும் என இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், துள்ளியமான நாள் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. விரைவில் இந்த தகவலை மாருதி சுஸுகி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த காரின் வருகை தள்ளி போயிருப்பது அதன் போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

ஆனால், இந்த மகிழ்ச்சி வருகின்ற செப்டம்பர் மாதம் வரை மட்டுமே நீடிக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஏனெனில், அந்த அளவிற்கே அதிக ஆடம்பரம் மற்றும் சிறப்பம்சங்களுடனேயே இந்த கார் விரைவில் சந்தையில் களம் காண இருக்கின்றது. குறிப்பாக, மைலேஜ் தரும் விஷயத்தில் மிக சிறந்த எலெக்ட்ரிக் காராக இது இருக்கும் என தெரிகின்றது.

Maruti e-vitara side view

49 kWh மற்றும் 61 kWh ஆகிய இரண்டு விதமான பேட்டரி பேக்குகளிலேயே அது விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த பேட்டரி பேக் 350 கிமீ முதல் 500 கிமீ வரையில் அது ரேஞ்ச் தரும் என கூறப்படுகின்றது. பேட்டரி பேக்கை போலவே மின்சார மோட்டார் விஷயத்திலும் பெரிய பேட்டரி மற்றும் சிறிய பேட்டரி பேக்கிற்கு இடையே பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும்.

அந்தவகையில், சிறிய பேட்டரி பேக் தேர்வுடன் 144 பிஎஸ் திறன் கொண்ட மின்சார மோட்டாரும், பெரிய பேட்டரி பேக் உடன் 174 பிஎஸ் திறனை உருவாக்கும் இ-மோட்டாரைக் கொண்டதாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல பிரீமியம் அம்சங்களையும் மிக தாராளமாகக் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

அந்தவகையில், 10.25 அங்குல தொடுதிரை சிஸ்டம், 10.1 அங்குல டிஜிட்டல் டிரைவர் திரை, லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள் என ஏகப்பட்ட அம்சங்களை இது தன்னுள் தாங்கி இருக்கும். இதுமட்டுமல்ல வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, இன்ஃபினிட்டி சவுண்டு சிஸ்டம், 10 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவர் இருக்கை, பிஎம் 2.5 ஏர் ஃபில்டர் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த காரில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது.

இதுமட்டுமல்ல பன்முக வண்ணங்களில் ஒளிரக் கூடிய ஆம்பியன்ட் லைட், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களையும் இ விட்டாரா கொண்டிருக்கும். இதோடு மாருதி நிறுத்திக் கொள்ளவில்லை அந்த காரில் லெவல் 2 வகை அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் 7 ஏர் பேக்குகள் போன்ற அம்சங்களையும் வழங்கி இருக்கின்றது.

எனவே பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஓர் மின்சார காராகவே இ விட்டாரா இருக்கும் என தெரிகின்றது. இந்த காரை இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் விற்பனைச் செய்ய மாருதி சுஸுகி திட்டமிட்டு இருக்கின்றது. அனை்த்து நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பலர் எப்போது எப்போது என காத்திருக்கும் கார் மாடலாக இ-விட்டார இருக்கின்றது. ஆனால், இந்த கார் இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி வருகின்ற செப்டம்பர் மாதத்திலேயே விற்பனைக்கு வரும் என தெரிய வந்திருக்கின்றது. இது இந்த காரை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்திருந்தவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 30, 2025, 6:00 [IST]
English summary
Maruti e vitara launch in india delayed to september 2025 with extended specifications
மேலும்... #maruti suzuki #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+